உயர்தரமான உணவு விலங்குகளின் செயல்திறனை அதிகரிப்பதுடன், அவ் விலங்குகளுக்கு நன்மை பயக்கும்

Share with your friend

நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைபெற்ற அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி சபையின் (USSEC) முக்கிய நிகழ்வான Chickenomics நிகழ்வில் கோழி வளர்ப்பை நவீனமயமாக்குதல், நிலையாக பேணுதுல், உணவு செலவினங்களை மேம்படுத்துதல் மற்றும் விலங்கு ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் கலந்தாலோசணையில் முக்கிய இடத்தை பிடித்தன.

தெற்காசியாவின் கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவர்கள் அமெரிக்காவின் சோயாவினை ஒரு முக்கிய உணவுப் பொருளாக தொடர்ந்து பயன்படுத்துவதில் விருப்பம் காட்டி வருகின்றார்கள். அதன் அதிக சக்தி மற்றும் புரத சத்து அளவுகள் காரணமாக அமெரிக்க சோயா தொடர்ந்து தரமான வெளியீட்டை வழங்கி வரும் அதே நேரத்தில், உணவு செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்கின்றது. அமெரிக்க சோயாவின் விலைகள் உலக சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்கும் இச் சரியான சந்தர்ப்பத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் அமெரிக்க சோயா இப் பிராந்தியத்தில் சில குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது. இரண்டு வருட இடைநிறுத்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் அதன் வர்த்தக வழிகளை மீண்டும் திறந்துள்ளது. நேபாளத்தின் முக்கிய கோழி உற்பத்தியாளரான ஏயட்டநல குழுமம் அதன் பெக்கேஜிங்கில் “Fed with Sustainable U.S. Soy” லேபிளை பயன்படுத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளமை நிலைத்தன்மைக்கு அந்நிறுவனம் வழங்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. USDA தரவுகளின்படி பங்களாதேஷின் சோயாபீன் இறக்குமதி கடந்த வருடத்தை விட 36.2% இனால் அதிகரித்துள்ளது. அமெரிக்க சோயாபீன் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா 111,500 மெட்ரிக் தொன்களை கொள்வனவு செய்துள்ளது. இது அமெரிக்க சோயாபீன் இப்பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களில் பாவனைக்கு எடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க சோயா இறக்குமதி அதிகரித்துள்ளமை பற்றி USSEC இன் தெற்காசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்காவிற்கான பிராந்திய இயக்குநர் கெவின் ரொஎப்கி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்: “2025 ஆம் ஆண்டு அமெரிக்க சோயாவிற்கு உறுதியாக தொடங்கி உள்ளது. பிராந்தியத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதில் அமெரிக்க சோயாவின் ஆற்றலை அங்கீகரித்து செயற்படும் பிராந்தியம் முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். இத் தொழில்துறையுடன் இருக்கும் எமது பிணைப்பை வலுப்படுத்துவதில் இது ஒரு திருப்பு முணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”.

நிகழ்வில் உரையாற்றும் தருணத்தில், அமெரிக்க சோயாபீன் விவசாயிகளான டெனிஸ் புஜான், அமெரிக்க சோயாபீன் சங்கத்தின் இயக்குநர் மற்றும் கைல் டர்ஹம், ஐக்கிய சோயாபீன் சபையின் இயக்குநர் ஆகியோர் அவர்களது நிலையான விவசாய நடைமுறைகளை பற்றி எடுத்துரைத்தனர். நிலைத்தன்மை அமெரிக்க சோயாவினை மற்ற உற்பத்திகளிலிருந்து வேறுபடுத்தி காட்டும் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதுடன், அது மற்ற மூலங்களுடன் ஒப்பிடும் பொழுது குறைந்த காபன் அடிச்சுவடை கொண்டுள்ளது.

நேபாளத்தில் தான் கழித்த காலத்தை பற்றி பேசும் பொழுது டர்ஹாம் பின்வருமாறும் குறிப்பிட்டார்: “மிசூரியில் உள்ள எனது அமெரிக்க சோயாபீன் பண்ணையில் தெற்காசிய கோழிப்பண்ணை துறையின் பிரதிநிதிகளை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தாலும், இந்தப் பிராந்தியத்தில் இருப்பதும், எங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திப்பதும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது. நான் இங்கு சந்தித்த மக்களிடமிருந்து கற்றுக் கொண்ட தகவல்களாலும், விடயங்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளேன்.”

USSEC தெற்காசியாவின் கோழிப்பண்ணை துறையில் அதன் இலாப திறனை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் கூட்டு சேர்ந்துள்ளது.


Share with your friend