உள்நாட்டு வருவாய் துறைக்கு Real-time Online கட்டணம் செலுத்தும்
வசதிகளை வழங்க Lanka Clear உடன் கூட்டு சேர்ந்துள்ள HNB

Share with your friend

இலங்கையின் பாரிய டிஜிட்டல் புத்தாக்கங்களைக் கொண்ட தனியார் துறை வங்கியான HNB, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு (IRD) நிகழ் நேர ஒன்லைன் கட்டண கொடுப்பனவு (real-time online) வசதிகளை அதன் பெருநிறுவனக் கட்டணத் தீர்வு தளமான PAYFAST மூலம் வழங்க Lanka Clear உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த கூட்டான்மையானது HNB வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் IRDக்கு நேரடி அணுகல் மற்றும் அவர்களின் HNB PAYFAST தொடர்புடைய கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் செலுத்தும் திறனை வழங்குகிறது. பரிவர்த்தனைகள் நிறைவடைந்த பின்னர் அந்த கட்டணம் செலுத்தும் நடவடிக்கை பூர்த்தியடைந்ததற்காக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் உறுதிச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படுவதுடன் பணம் அந்த திணைக்களத்தின் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும்.

HNB PAYFAST என்பது மறைக்கப்பட்ட கட்டணம் அறிவிக்கப்படாத HNB வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான டிஜிட்டல் வங்கி தீர்வாகும். இது நிறுவனத்தின் HNB கணக்கை செலவு வைப்பதன் (Debit) மூலம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப எந்தவொரு வங்கியிலுமுள்ள வங்கிக் கணக்குகள் பலவற்றிற்கு வரவு வைத்து பல பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. PAYFAST மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள், சேவை வழங்குநர்களின் கொடுப்பனவுகள், Dividend கட்டணங்கள் மற்றும் EPF / ETF கொடுப்பனவுகள் அனைத்தையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.

HNBஆல் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளின் முழுமையான இரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் அமைப்பின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. பாவனையாளரின் தரவு மற்றும் தனியுரிமையின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதிச் செய்ய பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் தொடர்ந்து பெறப்படுகின்றன.

HNB அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு டிஜிட்டல் தீர்வுகளை வழங்குகிறது, வங்கி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள், வளர்ந்து வரும் வர்த்தகங்கள் மற்றும் பெரு நிறுவன பிராண்டுகள் உட்பட பல்வேறு வகையான வணிகங்களுக்கு அதிநவீன டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

இந்த சிந்தனைக்கு ஏற்ப, உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் அனைத்து நுகர்வோருக்கும் டிஜிட்டல் வங்கியை ஊக்குவிப்பதை PAYFAST நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply