காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவதற்கும் இலங்கைக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்துவதற்கும் சூழலுக்கு நட்பான நிலைபேறான திட்டங்களை SLT-MOBITEL முன்னெடுப்பு

Home » காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவதற்கும் இலங்கைக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்துவதற்கும் சூழலுக்கு நட்பான நிலைபேறான திட்டங்களை SLT-MOBITEL முன்னெடுப்பு
Share with your friend

– உலக சூழல் தினம் 2022 ஐ தலைமையகத்தில் SLT-MOBITEL அனுஷ்டிப்பு

– மீரிகம பகுதியில் 5ஆவது நாட்டிலுப்பை மர நடுகைத் திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தி

காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்காக, நிலைபேறான சமூக ஆளுகை (ESG) நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள SLT-MOBITEL, சர்வதேச சூழல் தினத்தை அனுஷ்டித்திருந்தது. இதற்கமைய, மீரிகம பகுதியில் தனது 5ஆவது நாட்டிலுப்பை மர நடுகைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. தேசிய மட்ட மர நடுகைத் திட்டத்தை SLT-MOBITEL முன்னெடுத்திருந்ததுடன், அதனூடாக வளித் தூய்மையாக்கல், வனாந்தரச் செய்கையை ஊக்குவித்தல், காபன் நடுநிலையாக்கம் மற்றும் பச்சை இல்ல வாயுக்களை குறைத்தல் மற்றும் உயிரியல் பரம்பலை பேணுதல் போன்றவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. நிலைபேறாண்மை தொடர்பில் தனது அக்கறையை வெளிப்படுத்தும் SLT-MOBITEL, பசுமையான புவியின் முக்கியத்தை உணரந்துள்ளதுடன், ஆரோக்கியமான தாவரங்களினூடாக மனித சுகாதாரத்துக்கு கிடைக்கும் நேரடி அனுகூலங்கள் மற்றும் இயற்கையை பேணுவது, எதிர்காலத் தலைமுறைகளுக்காக காலநிலை மாற்றத்தை தணித்து, சீராக்குவது போன்றவற்றுக்கும் பங்களிப்பு வழங்குகின்றது.

“தூய வளி மற்றும் உரத்தினூடாக நாட்டுக்கு வளமூட்டுவோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்தத் திட்டம், திரண்ட நலனுக்காக சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

களை கட்டுப்படுத்தலுக்கு நாட்டிலுப்பை மரம் பங்களிப்பு வழங்குவதாக நம்பப்படுகின்றது. சேதனப் பசளை தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுவதுடன், வளியை தூய்மைப்படுத்தவும், மருந்துவ குணம் மிக்க தாவரமாகவும் கருதப்படுகின்றது. இதுவரையில் SLT-MOBITEL இனால் 1000க்கும் அதிகமான தாவரங்கள் மொனராகலை, உமந்தாவ, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நாட்டப்பட்டுள்ளன.

சர்வதேச சூழல் தினம் வருடாந்தம் ஜுன் மாதத்தில் அனுஷ்டிக்கப்படுவதுடன், சூழல் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகளின் பிரதான மிகைப்பியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு, SLT-MOBITEL இனால் அதன் தலைமையகத்தில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. SLT-MOBITEL ஊழியர்களுக்கு தாவரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. மேலும், நிறுவனம் தனது 5ஆவது நாட்டிலுப்பை தாவரக் கன்றுகள் நடுகைத் திட்டத்தை மீரிகம செத் செவன முதியோர் இல்லத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில், உள்நாட்டு சமூகத்தாருடனும், கிராமிய மட்டத்தில் செயலாற்றும் நிறுவனங்களுடனும் நேரடியாக SLT-MOBITEL செயலாற்றுவதுடன், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகளை வழங்க முன்வந்திருந்தது.

காடழிப்பை தவிர்ப்பது மற்றும் வளியிலிருந்து காபனீரொட்சைட் வாயுவை இயற்கையாகவே அகற்றுவது போன்றன இந்தத் திட்டத்தின் பிரதான உள்ளம்சங்களாகும். பச்சை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பது, சிறந்த வாயு தூய்மையாக்கம், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உயிரியல் பரம்பலை உறுதி செய்தல், அதிகளவு சேதன உரத் தயாரிப்பு மற்றும் நாட்டிலுப்பை மரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்தத் திட்டத்தினூடாக இலக்கு வைக்கப்பட்டுள்ளன. நாட்டப்படும் ஒவ்வொன்று மரக் கன்றினதும் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கு SLT-MOBITEL இனால் நவீன தொழில்நுட்ப முறைமை பின்பற்றப்படுகின்றது. ‘THURU’ மொபைல் அப்ளிகேஷனினூடாக, இந்தத் திட்டம் எந்தளவு வெற்றிகரமானதாக அமைந்துள்ளது என்பதை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சூழல் பாதுகாப்பு தொடர்பில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்து, இதர செயற்திட்டங்களான e-கழிவு குறைப்பு மற்றும் காபன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களிலும் SLT-MOBITEL ஈடுபட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த கழிவு முகாமைத்துவம் என்பது மீள்-பாவனை மற்றும் மீள்சுழற்சி போன்றவற்றினூடாக முன்னெடுக்கப்படுவதுடன், தற்போது முன்னெடுக்கப்படும் உறுதியான செயற்பாடுகளினூடாக நிறுவனத்தினதும், வாடிக்கையாளர்களினதும் காபன் வெளிப்பாடு குறைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

A group of people holding a sign

Description automatically generated with low confidence
A picture containing text, person, standing, posing

Description automatically generated
A picture containing text, person, outdoor, standing

Description automatically generated

Share with your friend

Leave a Reply

%d bloggers like this: