கிரிஸ்ப்ரோவின் ‘பசுமை பராமரிப்பு’இன் கீழ் மரம் நடும் திட்டம்

Share with your friend

இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ குழுமம் தமது நிறுவனத்திற்காக இணைத்துக் கொள்ளும் புதிய ஊழியர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ‘பசுமை பராமரிப்பு’ சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் கிரிஸ்புரோ குழுமத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் அனைத்து ஆண் அல்லது பெண் ஊழியர்களும் தாங்கள் வேலைக்கு வரும் முதலாவது தினத்தில் மரமொன்றை நடும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரிஸ்பிரோவின் பசுமை பராமரிப்பு நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வை நீண்டகாலம் தொடர்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த புதிய வேலைத் திட்டத்தின் கீழ் கிரிஸ்புரோ குழுமத்திற்கு சொந்தமான 17 வியாபார ஸ்தாபனங்களுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் அனைத்து ஊழியர்களையும் இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மரக் கன்றுகளை கிரிஸ்புரோவின் மனித வளப் பிரிவினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரிஸ்ப்ரோ குழுமத்தின் மனித வளங்கள் மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்ஜன மஹிந்தசிரி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ தமது தயாரிப்பு நடவடிக்கையானது ISO 9001:14000 சர்வதேச தரத்தின் அடிப்படையில் நிலைத்தன்மைக் கொண்ட சுற்றுச்சூழல் பயன்பாட்டிற்குள் மேற்கொள்வதற்கு தேவையான காபன் வெளியேற்றத்தை குறைத்துக் கொள்வதற்கு கிரிஸ்புரோ குழுமத்திற்கு சொந்தமான 17 மத்திய நிலையங்களிலும் பாரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த புதிய திட்டத்தின் மூலம், நிறுவனத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு ஊழியரும் ஆரம்பத்தில் இருந்தே நிறுவனத்தால் பராமரிக்கப்படும் கடுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கிரிஸ்ப்ரோ இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, கிறிஸ்ப்ரோ குழுமத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூக சுகாதாரம், சமூக-பொருளாதார ஒழுங்கு மற்றும் பொருளாதார இலாப நோக்கத்தின் முக்கிய குறிக்கோள்களை அடைவதில் கவனம் செலுத்துகிறது. புதிய கோழியை இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு, நமது முதன்மை தயாரிப்பு, வளமான மண், வளமான தாவர அமைப்பு மற்றும் சுத்தமான நீர் வளங்கள் தேவை. கிரிஸ்புரோ உற்பத்தி செயல்முறை முழுவதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் தொழில்நுட்பத்தை இக் குழுமம் கொண்டுள்ளது என்பது கடந்த 50 ஆண்டுகளில் நாங்கள் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.’ என தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தரவுகளின்படி, 1990 முதல் 2011 வரை இலங்கையின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சுமார் 43% அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையை அறிந்த கிரிஸ்புரோ அதன் நிலையான வர்த்தகப் பார்வையை வலுப்படுத்தியுள்ளது மற்றும் அதன் பசுமை பராமரிப்பு திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட புதிய மரக்கன்றுகளை நாட்டியுள்ளது.

அதே நேரத்தில், கிரிஸ்புரோ கோழி உற்பத்தி கட்டமைப்பின் சுற்றுச் சூழலுக்கு தீங்கிழைக்கும் பூஜ்ய கொள்கையை ^zero-wastage policy& கொண்டுள்ளது, அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருப்பதை கிரிஸ்புரோ உறுதி செய்கிறது.1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically integrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply