சவால்களை சமாளித்து நிதி ஸ்திரத்தன்மையில் உகந்த வளர்ச்சியைக் காட்டும் HNB Finance PLC

Home » சவால்களை சமாளித்து நிதி ஸ்திரத்தன்மையில் உகந்த வளர்ச்சியைக் காட்டும் HNB Finance PLC
Share with your friend

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE, அதன் முக்கிய நிதி அளவுகோல்களில் சிறந்த நிதி செயல்திறனைப் பதிவு செய்து 2021-22ஆம் ஆண்டிற்கான HNB FINANCEஇன் மொத்த நிகர லாபம் 515.6 மில்லியன் ரூபா அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மார்ச் 31, 2022இல் முடிவடைந்த நிதியாண்டில் எதிர்கொண்ட கடுமையான சமூக-பொருளாதார சவால்களுக்கு மத்தியில் HNB FINANCE இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதுடன், Prime FINANCE ஒரு மூலோபாய வணிக முயற்சியாகவும் கையகப்படுத்தப்பட்டது.

கடந்த நிதியாண்டில் குழுவின் நிகர வட்டி வருமானம் மற்றும் குழும மொத்த இயக்க வருமானம் (Group Net Interest Income and Group Total Operating Income) முறையே 3,903.9 மில்லியன் ரூபா மற்றும் 4,929.9 மில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது, அதே சமயம் குழுவின் வரிக்கு முந்தைய இலாபம் 615.9 மில்லியன் ரூபாவாக இருந்தது.

HNB FINANCEஇன் அனைத்து வணிகப் பிரிவுகளும் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க இலாபங்களை ஈட்ட முடிந்ததுடன், நிலவும் பொருளாதார சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப கடன் சேவைகளைப் பேணுவதற்கும், செலவை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணம். கடந்த நிதியாண்டில் HNB FINANCE குழுமத்தின் கடன் மற்றும் வைப்பு விகிதம் (Loan-to-Deposit ratio) 123.36%ஆக இருந்ததுடன் இது குழுவின் வலுவான பணப்புழக்க நிலையை (Liquidity position) மேலும் வலுப்படுத்தியது.

HNB FINANCE PLCஆனது தற்போது நுண்கடன் சேவைகள், லீசிங், தங்கக் கடன், ரியல் எஸ்டேட் கடன்கள் மற்றும் வணிகக் கடன்கள் உட்பட பலதரப்பட்ட நிதிச் சேவைகளைக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் தலைவர் டில்ஷான் ரொட்ரிகோ, “பல சவால்களுக்கு மத்தியில் ஒவ்வொரு சேவைத் துறையையும் உள்ளடக்கிய HNB FINANCEஇன் நிதிச் செயல்பாடு, சவால்களைச் சந்திக்கும் மற்றும் இலக்குகளை நோக்கிச் செல்வதில் உறுதிபூண்டுள்ள நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். “எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகள் மற்றும் Prime FINANCE கையகப்படுத்துதலுடன் HNB FINANCE முன்னேறும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HNBயின் பலமும், ரியல் எஸ்டேட்டில் முன்னணியில் இருக்கும் Prime Groupன் உதவியும், HNB FINANCEக்கு தமது இலக்குகளை அடைய வளர்ச்சிப் பாதையை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.” என ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.

“எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட கோப்புறை (Portfolio) காரணமாக, தற்போதைய சவாலான பொருளாதார சூழலில் நிறுவனத்தைத் தக்கவைக்க முடிந்தது. மைக்ரோ ஃபைனான்ஸ், சிறிய மற்றும் நடுத்தர கடன்கள் மற்றும் வணிகத் துறைகள் போன்ற எங்களின் முதன்மைச் சேவைகளுக்கு நாங்கள் தொடர்ந்து நிதி உதவிகளை வழங்குவோம். இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் துறை இருப்பதால், எத்தகைய தடைகளுக்கு மத்தியிலும் இத்துறைகளுக்குத் தேவையான நிதிச் சேவைகளை வழங்குவதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். இந்த பகுதிகளில் நிதி அறிவை மேம்படுத்தவும், வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், டிஜிட்டல் சேவைகள் மூலம் அவர்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள், Prime Finance, HNB FINANCE PLCஆல் பெரும்பான்மை பங்குதாரரின் ஒப்புதலுடன் கையகப்படுத்தப்பட்டது, மேலும் HNB ஃபைனான்ஸ் இப்போது HNB FINANCEக்குச் சொந்தமான 7 கிளைகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கையகப்படுத்துதலுடன், 31 மார்ச் 2022 நிலவரப்படி HNB FINANCEஇன் மொத்த சொத்து மதிப்பானது 46.56 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. அதே நேரத்தில், Prime Financeன் சொத்து அடிப்படையிலான கடன் பெறுமதி HNB FINANCEஇன் இருப்புநிலை அபாயத்தை மேம்படுத்த முடிந்தது. Prime FINANCEன் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை கடன் வழங்கும் ஊழியர்கள் HNB FINANCEஇன் மனித வளத்தை மேலும் மேம்படுத்துவதோடு, HNB FINANCEன் செயல்பாடுகளை உகந்த நிலைக்கு உயர்த்துவார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: