தொழில்துறையில் முன்னணியில் உள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி  26 வருட  நிறைவை கொண்டாடுகிறது

Home » தொழில்துறையில் முன்னணியில் உள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி  26 வருட  நிறைவை கொண்டாடுகிறது
Share with your friend

இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமாக தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) தனது 26ஆவது ஆண்டு நிறைவை மே 31 அன்று கொண்டாடுகிறது. அண்மைய காலங்களில், நிறுவனம் பல்வேறு முயற்சிகள் மற்றும் மதிப்புமிக்க பாராட்டுகளை வெற்றிகொண்டதன் மூலம் அதன் நற்பெயரை மேம்படுத்தியுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளில் பெற்ற வெற்றிக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் நம்பிக்கையே காரணம் என பிஎல்சியின் நிர்வாகமும் ஊழியர்களும் கூறியுள்ளனர். இது எதிர்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவதற்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என அவர்கள் நம்புகிறார்கள்.

நிதிச் செயல்திறன், சிறப்பான சேவை மற்றும் மே்பட்ட தொழில்நுட்பம்  ஆகியன நிறுவனத்தின் அண்மைய சாதனையாக அமைந்துள்ளது. இது பல புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், மும்மொழி  செயலியான PLC Touch, வசதியான பயனர் அனுபவத்தை எளிதாக்கும், கடன் பயன்பாட்டு செயலியாகும்.  DCHEQUE,தடம் பதிக்கும் ஒரு டிஜிட்டல் உருமாற்ற முயற்சியாகும். வாடிக்கையாளர்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கும்  co-branded கடனட்டைகளை அறிமுகப்படுத்த மக்கள் வங்கியுடன் நிறுவனம் இணைந்துள்ளது.

110ற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 2400ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட விரிவான வலையமைப்புடன், பிஎல்சி 1996 இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து  நீண்ட தூரம் பயணித்துள்ளது. இன்று, நிறுவனம் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சேவை வழங்குகிறது. விரிவான மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இது இலங்கையில் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும்.

நிதியை மேலும் உள்ளடக்கியதாகவும் மக்களை அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே தமது நோக்கமென, பிஎல்சியின் இன் தலைவர் சுஜீவ ராஜபக்ச தெரிவிக்கின்றார். “வழக்கமாக வங்கி முறையூடான நிதியைப் பெற முடியாத மக்களுக்கு நாங்கள் நிதிக்கான அணுகலை வழங்குகிறோம்”, என அவர் வலியுறுத்தினார். நிறுவனம் வலுவான மூலதனத் தளம், திறமையான முகாமைத்துவ அமைப்புகள் மற்றும் செயல்முறைகள், ஆற்றல்மிக்க பணியாளர்கள் மற்றும் நல்ல தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராஜபக்சவின் கூற்றுக்கு அமைய, அரச நிறுவனமாக பிஎல்சியின் பலமும் ஸ்திரத்தன்மையும் அதன் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளன. தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தனிப்பயனாக்கப்பட்ட நிதி தயாரிப்புகளின் வரம்பு மற்றொரு காரணியாகும், என்றார். நிறுவனத்தின் சேவைகளில் வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், தனிப்பட்ட கடன்கள், கல்விக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் போட்டி வட்டி விகிதத்தில் தங்கக் கடன்கள் ஆகியவை அடங்கும்.

நிறுவனம் நெகிழ்வுத்தன்மையுடன் நட்பு, தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்குவதன் மூலம் போட்டியாளர்களிடமிருந்து தன்னைத் தொடர்ந்து வேறுபடுத்திக் கொள்வதாக, 

பிஎல்சியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமிந்திர மார்செலின் குறிப்பிட்டுள்ளார்.  நிறுவனம் எல்லா நேரங்களிலும் சிறந்த சேவையில் கவனம் செலுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

மார்சலின்னின் கூற்றுக்கு அமைய, நிறுவனம் பயனர் நட்பு, வசதி மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றது.  “வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற, இடையூறு இல்லாத அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என அவர் கூறினார். தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும், புத்தாக்கமான சிறந்த தரமான நிதி தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப அவை உருவாகும் என அவர் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில், பிஎல்சியின் பல மதிப்புமிக்க பாராட்டுகளை வென்றுள்ளது. இலங்கையின் 10 பொறுப்புள்ள நிறுவன குடிமக்களில் ஒன்றாக வர்த்தக சபையால் பட்டியலிடப்பட்டிருப்பதும் இதில் அடங்கும். டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவால் பட்டியலிடப்பட்ட முதல் 50 நிறுவனங்களில் இந்த நிறுவனம் உயரிய இடத்தைப் பிடித்துள்ளது.  பிராண்ட் பினான்ஸ் விருதுகளில், இது இலங்கையின் மிகச் சிறந்த வங்கி அல்லாத நிதி நிறுவனமாகப் பாராட்டப்பட்டது. பிஸ்னஸ் டுடே முதல் 30 தரவரிசையிலும் பிஎல்சி இடம்பெற்றுள்ளதோடு, புகழ்பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் மற்றும் CA ஸ்ரீலங்கா ஆண்டறிக்கை விருதுகளில் CMA சிறந்து விளங்கும் விருதுகளில் நிறுவனம் மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்றது. குளோபல் பேங்கிங் அன்ட் பினான்ஸ் ரிவியூ மூலம் அடுத்த உலகளாவிய 100 நிறுவனங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. 

பிஎல்சி அதன் நிறுவன சமூக பொறுப்பு திட்டங்களுக்காக நற்பெயரைப் பெற்றுள்ளது. ‘மக்களுக்கு நட்பாக’ அறியப்பட்ட நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முதல் சமூக பராமரிப்பு, கல்வியை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை அனைத்திலும் ஈடுபட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், புவி வெப்பமடைதலைக் குறைக்கும் நோக்கிலும், நீண்ட கால மர நடுகை  பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.  

மேலதிகமாக, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் கஷ்டங்களை எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு பிஎல்சி நிவாரணம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உதவிகளை வழங்கியுள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களையும் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் துணை நிறுவனமான பிஎல்சி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE)பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். பிஎல்சி குழுமத்தின் துணை நிறுவனங்களில் பீப்பள்ஸ் லீசிங் ப்ளீட் மேனேஜ்மென்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் பிரொபர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் பிரொப்பர்டீஸ் லிமிடெட், பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிடெட் மற்றும் பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி ஆகியவை உள்ளடங்கும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: