நாட்டின் முதலாவது இலவச செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கை ஆன்லைன் பாடநெறிகளுடன் CODE ஐ அறிமுகப்படுத்தியுள்ள SLIIT

Home » நாட்டின் முதலாவது இலவச செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கை ஆன்லைன் பாடநெறிகளுடன் CODE ஐ அறிமுகப்படுத்தியுள்ள SLIIT
Share with your friend

ஒன்லைன் மூலமான புதிய கற்றல் யுகத்தை வரவேற்கும் வகையில் சுய வேக கற்கை வரம்புகளைக் கொடுக்கக் கூடியதாக சுயாதீனமாக உருவாக்கப்பட்ட ஒன்லைன் தளமான திறந்த மற்றும் தொலைதூர கல்வி நிலையம் (CODE) SLIIT இனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இளைஞர்கள் தங்களை மிகவும் விரும்பக்கூடிய திறன்களுடன் சித்தப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் தொழில்துறையில் உள்ள திறன் பற்றாக்குறையை நிரப்புவது CODE இன் நோக்கமாகும். 

SLIIT இன் கம்பியூட்டிங் பீடத்தின் தொழில்துறையுடனான பிரிவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு SLIIT இன் உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே அவர்களின் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இதில் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள், SLIIT இன் பணியாளர்கள், தொழில்துறைசார் நிபுணர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கைகள் பொறியியலாளர்களாக வருவதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கைகள் கற்கைகள் பொறியியல் படிநிலை1’ CODE இனால் அங்குரார்ப்பண பாடநெறியாக வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக சைபர் செக்கியூரிட்டி மற்றும் க்ளவுட் கம்பியூட்டிங் ஆகிய இரு பாடநெறிகள் காணப்படுகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதன் மூலம் வடிவமைக்கப்பட்ட விரிவான கற்கைகள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

SLIIT இன் கம்பியூட்டிங் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.சந்திமால் ஜயவர்த்தன தெரிவிக்கையில், “குறுகிய காலத்திற்குள் தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்க்க விரும்புவோருக்கான கற்றல்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இலவச கற்றல் தளமாகவே CODE ஐ SLIIT உருவாக்கியுள்ளது. சுய வேக கற்கை மற்றும் பாடசாலைகளை விட்டு வெளியேறுபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்சார் வல்லுனர்களுக்குப் பொருத்தமான வகையில் வேகமானவை மற்றும் பள்ளியை விட்டு வெளியேறுபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சமமாக பொருத்தமான பாடநெறிகளை CODE வழங்கும். ‘செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கைகள் கற்கைகள் பொறியியல் படிநிலை1’ CODE இன் முதலாவது பாடநெறியாகும். இதனைத் தொடர்ந்து படிநிலை 2 மற்றும் 3 ஆகிய பாடநெறிகள் காணப்படுகின்றன. பாரம்பரிய பல்கலைக்கழக கல்வி முறைக்கு அப்பால் சென்று பரந்துபட்ட தரப்பினரையும் சென்றடையும் கல்வியை வழங்குவது என்ற எமது நோக்கத்தின் அடிப்படையில் தொலைதூர கல்வியை வழங்குவதற்கான இந்தத் தளத்தை உருவாக்கியதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலவச பாடநெறிகளுக்கு திறந்த தளமாக இருப்பதால், சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பங்களிப்பதற்கும் SLIIT இன் அர்ப்பணிப்பை ஊழுனுநு தளம் விளக்குகிறது” என்றார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொடர்பான அடிப்படைகளை உள்ளடக்கிய படிநிலை 1, பாடநெறியானது தொழில்துறையில் நிபுணத்துவத்தின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய புரிதலுடன், அடிப்படை, இடைநிலை மற்றும் நிபுணர் நிலைகளைக் கொண்டுள்ளது.

TensorFlow மற்றும் PyTorch போன்ற தொழில்துறையில் காணப்படும் புத்தாக்கம் நிறைந்த தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை நடைமுறை ரீதியாகவும், அணுகுமுறை ஊடாகவும் கற்கும் வகையில் பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடநெறிக்கு நிரலாக்க அடிப்படைகள் பற்றிய ஒரு குறிப்பிட்ட அறிவு தேவைப்படுவதால், ஒரு நபர் நிரலாக்க அடிப்படைகளை வெளிப்படுத்துவதை உறுதிசெய்யும் வகையிலும் இவை உருவாக்கப்பட்டுள்ளன. 

பாடநெறி தொடர்பான பாடங்கள் வாரந்தோறும் அறிமுகப்படுத்தப்படுவதுடன், பங்கேற்பாளர்கள் உள்ளடக்கத்தைப் படித்து, கிடைக்கக்கூடிய வினாடி வினாக்கள் போன்ற மதிப்பீட்டுக் கூறுகளை பூர்த்தி செய்து, படிப்பை முடிக்க மற்றும் சான்றிதழைப் பெற போதுமான மதிப்பெண்களைப் பெற வேண்டும். பாடநெறியை முடித்தவுடன், பங்கேற்பாளர்கள் SLIIT  இலிருந்து ‘பாடநெறியை முடித்தமைக்கான சான்றிதழை” பெற்றுக்கொள்வார்கள்.

பாடசாலைகளிலிருந்து வெளியேறியவர்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடநெறிகளைத் தொடரும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாராதவர்கள், தமது திறனை வளர்ப்பதற்கு விரும்பும் தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கைகளில் இணைவதற்கு ஊழுனுநு அழைப்புவிடுக்கிறது. 

CODE இயங்குதளத்தின் மூலம் வழங்கப்படும் பாடநெறிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுதல், தொலைதூர வேலைகளில் ஈடுபடுதல் அல்லது இலங்கையில் உள்ள புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிதல் போன்றவற்றின் திறனை மேம்படுத்தும் அதே வேளையில், மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறனை அதிகரிக்க உதவும் என SLIIT நம்புகிறது.

துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே குறிப்பிடுகையில், “இந்த நாட்களில் நம் வாழ்வில் மிகவும் குறைவான விடயங்களே டிஜிட்டல் மயப்படுத்தப்படாமல் இருப்பதுடன், ஆன்லைன் மூலம் மேலும் மேலும் பல விடயங்களைச் செய்ய முடியும் என்பதை கொவிட்-19 தொற்றுநோய் நமக்குக் கற்றுக் கொடுத்தது. கடந்த தசாப்தத்தில் மாறத் தொடங்கிய மற்றொரு துறையாக கல்வி காணப்படுவதால், பலர் ஆன்லைன் கல்வியை நாடுகிறார்கள். இது எந்த நேரத்திலும் மாறாமல் உள்ளது. எனவே, SLIIT இல் உள்ள எங்கள் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் புதுமையான யோசனைகள், அதாவது CODE போன்ற தளங்களைத் தொடங்குவது, இன்றைய இளைஞர்களுக்கு பல்வேறு முழுமையான ஆன்லைன் கற்கைகளுக்கான அணுகலை வழங்குவதுடன், மாணவர்களுக்கு அவர்களின் வீட்டில் இருந்தபடியே வழிகளைத் திறக்கிறது. கற்றல் துறையில் உலகளாவிய ரீதியில் உயர்ந்த கேள்வியைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்கை பாடநெறியை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பயணத்தின் முடிவில் சான்றிதழுடன் இந்த தளத்தில் இதுபோன்ற படிப்புகளை வழங்குவது, மாணவர்கள் உள்நாட்டில் அல்லது சர்வதேச அளவில் செழிக்க மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதற்குகும் கூடுதல் நன்மையாக அமையும். வரவிருக்கும் பல்வேறு பாடநெறிகள் உருவாக்கப்படுவதால், இந்த தளம் வரும் ஆண்டுகளில் முன்னேற்றம் காணவிருப்பதுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் அறிவைப் பெற விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக இது வரம்புகள் இல்லாத இலவச தளமாகவும் அமையும்” என்றார். 

இப்போது இணைந்துகொள்ள : https://code.sliit.org/ 


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: