“பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்” வேலைத்திட்டத்துடன் தாயின் ஆரோக்கியம் கருத்தரங்கை ஆரம்பிக்கும் Dettol

Home » “பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்” வேலைத்திட்டத்துடன் தாயின் ஆரோக்கியம் கருத்தரங்கை ஆரம்பிக்கும் Dettol
Share with your friend

உலகின் முன்னணி சுகாதாரம் மற்றும் பாக்டீரியா நீக்கி வர்த்தக நாமங்களில் ஒன்றான Dettol, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முறையான சுகாதார நடைமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து குறித்து அறிவைப்புகட்ட, தாயின் ஆரோக்கிய கருத்தரங்குகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த அணுகுமுறையின் கீழ் முதலாவது கருத்தரங்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அங்குனுகொலபலஸ்ஸ MOH கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தின் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் இதில் கலந்துகொண்டனர்.

அம்பாந்தோட்டை மாவட்ட மருத்துவ சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள், குடும்ப தாதிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) ஆகியோரின் பங்களிப்புடன் இந்த தொடர் கல்வி விரிவுரைகள் மூலம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் போஷாக்கு மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியானது தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அமர்வுகளை நடத்தியது, அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி மற்றும் தாய்மார்களுக்கு இசை எவ்வாறு சிறந்த சூழலை உருவாக்குகிறது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்தியது.

இந்த அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்த Dettol\ வர்த்தக நாம முகாமையாளர் திருமதி லிலானி ராஜபக்ஷ கூறுகையில்: “ஆரம்பத்திலிருந்தே எங்கள் வணிகத்தில் சுகாதாரம் மற்றும் கவனிப்பு முன்னணியில் இருப்பதால், இந்த நேரத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் ஆரோக்கியமாகவும் நடைமுறை ரீதியாகவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு அறிவு தேவைப்படுகிறது.”

நாடளாவிய ரீதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவைப் புகட்டுவதற்கும் இந்த முதலாவது தொடர் பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளதுடன். முதற்கட்டமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சுற்றி 10 கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. அதன் முதலாவது கருத்தரங்கு அங்குனுகொலபலஸ்ஸவில் நடைபெற்றது.

“அனைத்து மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் இந்த நல்ல செய்தியை மக்களுக்கு தெரிவிப்பதில் Dettol வர்த்தக நாமம் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்வழி ஆரோக்கியம் போன்ற மூலோபாய ரீதியாக வளர்ந்த முயற்சிகள் மற்றும் இதுபோன்ற பல திட்டங்களுடன் தேசிய அளவில் டெட்டால் பழக்கம் பிரச்சாரத்தின் மூலம் எங்கள் உட்பார்வையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என Reckitt Benckiser சுகாதார நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் திருமதி சதுரிகா பொன்சேகா தெரிவித்தார்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: