Eyeview Sri Lanka

புத்தாக்கத்துடன் கூடிய நோக்கங்களை வலுப்படுத்தி SLIM Digis 2.5 இல் பிரகாசித்த Hemas Consumer Brands

Share with your friend

Hemas Consumer Brands (HCB) அண்மையில் நிறைவடைந்த ‘SLIM Digis 2.5 விருதுகள்’ விழாவில், அதிக விருதுகளை வென்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, இலங்கையின் தனிநபர் பராமரிப்பு (Personal Care) மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் (FMCG) துறைகளில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தளத்தில் வர்த்தகநாமங்கள் எவ்வாறு இயங்குகின்றன மற்றும் வெற்றி பெறுகின்றன என்பதை மீள்வரையறை செய்வதில் அறியப்படும் இந்நிறுவனம், சிறந்த மூலோபாய நடவடிக்கைகள், அதிநவீனதொழில்நுட்பங்கள் மற்றும் நோக்கம் சார்ந்த பிரசாரங்கள் மூலம் தொடர்ச்சியாக புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

From bold ideas to big wins: Hemas Consumer Brands shines at SLIM Digis 2.5 – 1

இவ்வருடம் SLIM Digis 2.5 விருது விழாவில், Fems Forward & Fearless பிரச்சாரத்திற்காக (Best Use of AI Technologies – வெள்ளி விருதையும், CSR Purpose Driven Technologies – வெண்கல விருதையும்), ‘A Big Day at the ලැජ්ජ singhes & The ලැජ්ජාව’ குறும்படத் தொடர் (Best use of Digital in a Marketing Campaign for FMCG – Personal Care Brands மற்றும் Best Use of Creator/Influencer Content – 2 வெண்கல விருதுகளையும்), Gold men’s range – UP பிரச்சாரத்திற்காக (Digital Creative Content – பாராட்டு விருது, Best Use of Digital Creative Content மற்றும் Digital Bravery – 2 வெண்கல விருதுகளையும்), ‘The Velvet RE-CONNECT’ பிரசாரத்திற்கு Best Use of Digital in Marketing Campaign in Personal Care Brands ஆகிய விருதுகளையும் பெற்றன. Fems, Velvet, Gold ஆகிய பிரபல வீட்டு வர்த்தகநாமங்களைக் கொண்ட இலங்கையின் மிகவும் நம்பகமான தனிநபர் பராமரிப்பு தொகுப்புகளில் ஒன்றை HCB உருவாக்கியுள்ளது.

இந்த விருதுகள் குறித்து Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர குறிப்பிடுகையில், “இந்த வெற்றிகள் எல்லைகளை தாண்டிய உண்மையான, அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட பிரசாரங்களை உருவாக்குகின்ற எமது எங்கள் ஆர்வத்தைப் பிரதிபலிக்கின்ற. Hemas Consumer Brands ஆகிய நாம், மக்களை சென்றடைகின்ற மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சாரங்ககளின் மூலம், ஈடுபாட்டுடனான மற்றும் நுகர்வோர் நட்பு கொண்ட புத்தாக்கத்துடன் டிஜிட்டல் துறையில் முன்னணியில் இருப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்த விருதுகள் எமது குழுவினர்கள், எமது கூட்டாளர்களின் அர்ப்பணிப்புக்கான சான்று என்பதோடு, எமது டிஜிட்டல் அணுகுமுறையை தொடர்ச்சியாக மேம்படுத்தவும், தொழில்துறையில் சரியான தரத்தை அமைக்கவும் எம்மை ஊக்கப்படுத்தும் நுகர்வோரும் இதற்கு ஒரு சான்றாக உள்ளனர்.” என்றார். 

முன்னணி பெண்களுக்கான சுகாதார வர்த்தகநாமமான Fems அதன் பிரபலமான பிரசாரங்கள் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரப் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு காலகட்டத்தில் பேசுவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி, அது தொடர்பான கல்வி மற்றும் ஊக்கமளிக்கும் செயற்பாடுகள் மூலம் அதனை மாற்றியமைத்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தின் ‘Forward & Fearless’ பிரசாரமானது ‘Best use of AI Technologies’ பிரிவில் வெள்ளி விருதையம், ‘CSR/Purpose Driven Technologies’ பிரிவில் வெண்கல விருதையும் பெற்றுக் கொண்டது. இது நோக்கம் சார்ந்த தகவல்தொடர்பாடல்களில் அதன் புத்தாக்கமான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில், மாதவிடாய் தொடர்பான சுகாதார வசதிகள் இல்லாமை மற்றும் கலாசாரத் தடைகள் காரணமாக, 60% ஆன பாடசாலை மாணவிகள் மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். இதைக் கையாள்வதற்காக, 2024 சர்வதேச மகளிர் தினத்தில் ‘Forward & Fearless’ பிரசாரத்தை Fems ஆரம்பித்தது. இது பெண்கள் சுகாதாரப் பிரிவில், AI ஐ இனை நிறுவன சமூகப் பொறுப்புடன் (CSR) AI ஒருங்கிணைக்கும் நாட்டின் முதலாவது முயற்சியாகும். இந்த பிரசாரத்தின் கீழ், herfoundation.lk இணையதளத்தின் ஊடாக தமது சொந்த வீடியோக்களை உருவாக்கி பகிருமாறு பொதுமக்கள் அழைப்பு விடுக்கப்பட்டனர். பகிரப்பட்ட ஒவ்வொரு வீடியோவிற்கும், தலா மூன்று பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதார நப்கின்களை Fems நன்கொடையாக வழங்கியது. இந்த செயற்பாடானது ஏற்படுத்தியதுடன் சிறந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 20 பாடசாலைகளைச் சேர்ந்த 17,902 மாணவிகள் மாதவிடாய் சுகாதார விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளை பங்குபற்ற இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டதோடு, அவர்களுக்கு இலவச மாதவிடாய் சுகாதார நப்கின்களும் விநியோகிக்கப்பட்டன. இந்த பிரச்சாரம், இதே நோக்கத்தைக் கொண்ட நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தூண்டியது.

அது தவிர, Fems நிறுவனம் முன்னெடுத்த ‘A Big Day at the ලැජ්ජ singhes & The ලැජ්ජාව’ குறும்படத் தொடர் முயற்சியானது, ‘Best use of Creator Content/Influencer’ பிரிவில் வெண்கல விருதையும், ‘Best use of Digital in a Marketing Campaign for FMCG-Personal Care brands’ பிரிவில் வெண்கல விருதையும் பெற்றது. இது வர்த்தகநாமத்தின் டிஜிட்டல் புத்தாக்கத்தின் மூலோபாயப் பயன்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில், மாதவிடாய் என்பது, கலாசார நம்பிக்கைகளுக்குள் சிக்கியுள்ள விடயமாக இன்னும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் 30-60% மாணவிகள் ஒவ்வொரு மாதமும் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். மாதவிடாய் சுகாதார நப்கின்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், துணிகளை நம்பியிருத்தல் மற்றும் கல்வியாளர்களிடையே கூட தவறான தகவல் பரவல் காரணமாக, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு தொடர்ந்து இடையூறாக உள்ளது. இந்த கட்டுக்கதைகளை ஒரு பொழுதுபோக்கு வழியில், சுவாரஸ்யமான முறையில் சவாலுக்கு உட்படுத்த, பிரபல நகைச்சுவை ஜோடியான Blok & Dino நடித்த ‘A Big Day at the ලැජ්ජ singhes & The ලැජ්ජාව’ குறும்படத் தொடரை Fems ஆரம்பித்து வைத்தது. இது ஒரு நகைச்சுவையான டிஜிட்டல் பிரச்சாரமாகும். அவர்களது கதை சொல்லும் எளிய முறையானது, இந்த தடைகளை உடைத்து, மாதவிடாய் பற்றி வெளிப்படையான உரையாடல்களை ஏற்படுத்த தூண்டியது. இந்த பிரசாரம் வைரலானது; இதன் பிரதான காணொளி யூடியூப்பில் 1.2 மில்லியன் நேரடி பார்வையிடல்களைப் பெற்றது. அத்துடன், அது தொடர்பான குறும்படக் காணொளிகள் யூடியூப்பில் 471,000, இன்ஸ்டாகிராமில் 702,000, பேஸ்புக்கில் 3.79 மில்லியன், டிக்-டொக்கில் 3.97 மில்லியன் பார்வையிடல்களை பதிவு செய்தன.

பாரம்பரியமாக அத்தியாவசியமற்றதாகக் கருதப்படும் துறை ஒன்றில் செயற்பட்ட போதிலும், Fems நிறுவனம் இலங்கையில் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் மற்றும் அது குறித்தான தூய்மை குறித்து கல்வி அளிப்பதில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல் தளத்தில் முன்னணியில் உள்ள Fems, முயற்சியாக, இலங்கையின் முதலாவது மும்மொழி மாதவிடாய் கண்காணிப்பு செயலியான Fio செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த 100% இலவசமான வளமாகும். இது நம்பகமான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த கல்வி, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் மருத்துவ நிபுணர்களிடமிருந்தான பிரத்தியேகமான சுகாதார ஆலோசனைகள் பெறுவதற்கான பாதுகாப்பான இடத்தை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான செயலியானது, பெண்களை சுதந்திரமாகவும், வலுவானவர்களாகவும் ஆக்கி, மாதவிடாய் குறித்த தடைகளை உடைத்து நாடு முழுவதிலுமுள்ள பெண்களுக்கு மாதவிடாய் ஆதரவை ஊக்குவிக்கும் Fems இன் இலக்கை அடைய உதவுகிறது.

Velvet சருமப் பராமரிப்பு வர்த்தகநாமத்தின் மீள்வெளியீட்டுப் பிரசாரமான ‘The Velvet RE-CONNECT’ ஆனது, ‘Best Use of Digital in a Marketing Campaign for FMCG–Personal Care brands’ பிரிவில் பாராட்டு விருதைப் பெற்றது. இது, இலங்கை பெண்களுடன் உள்ள பிணைப்பை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாகும். ஒரு நம்பகமான சருமப் பராமரிப்பு வர்த்தகநாமமாக இருந்து, பெண்களின் சுய பராமரிப்பு நடைமுறையின் ஆழமான அங்கமாக மாறுவதே இதன் நோக்கமாகும். ‘Pure Skin Love’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்தப் பிரசாரமானது, நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பி, உணர்வு மிக்க பிணைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும், Velvet “அவளது வர்த்தகநாமம்” எனும் உணர்வை மீண்டும் உணர வைக்கவும் முயன்றது. Velvet வெறுமனே ஒரு சவர்க்காரத்திற்கு அப்பாற்பட்டது என்பதை இது அவளுக்கு நினைவூட்டியது. அது அவள் தன்னைத்தானே பேணும் விதம், தன்னை நேசிக்கும் விதத்தின் அடையாளமாகவும் தனது சொந்த சருமத்துடன் அழகாகவும், நம்பிக்கையுடனும், அக்கறையுடனும் இருப்பதற்கான உணர்வை அவளுக்கு வழங்குகிறது.

‘Digital Bravery’ பிரிவில் வெண்கலம், ‘Best use of Digital in a Marketing Campaign for FMCG-Personal Care Brands’ பிரிவில் வெண்கலம் விருதையும், ‘Best Use of Digital Creative Content’ பிரிவில் பாராட்டு விருதையும் பெற்ற Gold, இலங்கையின் தன்னம்பிக்கையுள்ள ஆடவருக்கான Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாகும்.  இந்த அங்கீகாரம் நுகர்வோர் தொடர்பான ஆழமாக விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பிரசாரம் மூலம் செயற்படுத்தப்பட்டது. இன்றைய இளைஞர்களின் ஆசைகள், அணுகுமுறைகள் மற்றும் அடையாளங்களைப் புரிந்துகொள்வதிலிருந்தே இந்தப் பிரசாசம் உருவானது. பல வர்த்தகநாமங்கள் பாதுகாப்பான நடைமுறையை பின்பற்றி தங்களது பயணத்தை தொடரும் நிலையில், பாரம்பரியங்களை சவாலுக்கு உள்ளாக்கி, வழக்கமாக ஆண்களை சித்தரிக்கும் விதத்தலிலிருந்து தைரியமாக விலகி, தாம் இலக்காகக் கொண்ட ஆண்களுக்கு உண்மையாக ஒன்றிணையும் ஒரு கதையை ‘Gold’ உருவாக்கியது. தாம் இலக்காகக் கொண்ட குழுவுடன் நெருக்கமாக இணைந்து, வழக்கமான விதிமுறைகளை முறியடித்து துணிந்து செயற்பட்டதன் மூலம், பொருத்தமும் துணிச்சலும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை ‘Gold’ நிரூபித்துள்ளது.

Hemas Consumer Brands இன் முன்னணி தயாரிப்புகளும் அதன் தொடர்பாடல் தளங்களும், அன்றாட வாழ்வை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. அதேசமயம், டிஜிட்டல் ஈடுபாடு மற்றும் வர்த்தகநாம அனுபவத்தில் புதிய போக்குகளை அமைக்கின்றன. SLIM Digis விருது விழாவில் நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றியானது, அதன் முன்னோடியான, பரந்துபட்ட சந்தைப்படுத்தல் சூழலில் அதன் தாக்கத்தை காண்பிக்கிறது. துணிச்சலான, தொழில்நுட்பம் சார்ந்த, குறிக்கோள்களை மையப்படுத்திய தொடர்பாடலை பல்வேறு துறைகளில் ஊக்குவிப்பதன் மூலம், Hemas Consumer Brands நிறுவனம் புதிய போக்குகளை நிர்ணயிக்கும் ஒன்றாக அதன் பங்கை எடுத்துக் காட்டுகிறது. SLIM Digis விருதுகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் விசேடத்துவத்தையம் புத்தாக்கத்தையும் அடையாளப்படுத்தும் இலங்கையின் மிக மதிப்புமிக்க தளமாகத் திகழ்கின்றது.


Share with your friend
Exit mobile version