புளோரா டிஷுக்களுக்கு “Best Hygienic Disposables Brand of the Year 2024” விருது வழங்கி கௌரவிப்பு

Share with your friend

தூய்மை பேணுவதற்காக பயன்படுத்தப்படும் டிஷுக் கடதாசிகள் விற்பனை சந்தையில் ஒப்பற்ற முன்னோடியாக திகழும் புளோரா டிஷுக்கள் வர்த்தக நாம தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் Pee Bee Management Services (Pvt) Limited, அண்மையில் நடைபெற்ற People’s Pinnacle Sri Lanka விருதுகள் வழங்கும் நிகழ்வில் “Best Hygienic Disposables Brand of the Year 2024” எனும் விருதை தனதாக்கியிருந்தது.

புளோரா டிஷுக்கள் அணியினர் “Best Hygienic Disposable Brand of the Year 2024” விருதுடன் காணப்படுகின்றனர்.

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை MUGP இன்டர்நஷனல் ஏற்பாடு செய்திருந்ததுடன், இந்நிகழ்வு 2025 ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் நிறுவனங்கள் பதிவு செய்திருந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்ததுடன், குறித்த நிறுவனங்களின் பெருமளவு வளர்ச்சி மற்றும் சந்தை தலைமைத்துவம் ஆகியவற்றை கொண்டாடியிருந்தது.

மூலோபாயம் மற்றும் கூட்டாண்மை விருத்தி தலைமை அதிகாரி ஷெஷாயா சுர்தானி விருதைப் பெறுகின்றார்.

படிப்படியாக இலங்கையின் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் சந்தையில் சந்தை முன்னோடி நிலைக்கு உயர்ந்த புளோரா டிஷுக்கள், தூய்மை பேணலுக்காக பயன்படுத்தும் மென்மையான டிஷு கடதாசி தயாரிப்புகள் பிரிவில் SLSI சான்றிதழை பெற்ற ஒரே வர்த்தக நாமம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிஷோர் சுர்தானி கருத்துத் தெரிவிக்கையில், “40 வருடங்களுக்கு மேலாக வர்த்தக நாமத்துடன் இணைந்திருக்கும் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு புளோரா டிஷுக்கள் நன்றி தெரிவிக்கின்றது. எமது வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு போன்றன இல்லாமல் எம்மால் இந்த மைல்கல்லை எய்தியிருக்க முடியாது. அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

நிலைபேறான செயற்பாடுகளில் புளோரா டிஷுக்கள் தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்துவதுடன், தனது சூழலுக்கு நட்பான தயாரிப்பு தெரிவுகளை விரிவாக்கம் செய்வது, பிளாஸ்ரிக் பொதியிடலை குறைப்பது மற்றும் செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவது போன்றன இதில் அடங்கியுள்ளன. தமது தயாரிப்புகளில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் pure virgin pulp இலிருந்து bamboo pulp க்கு மாறுவது தொடர்பிலும் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது.

மென்மையாக டிஷுக்கள் மற்றும் தூய்மை தயாரிப்பு பிரிவில் தனது தயாரிப்புகளை தொடர்ந்தும் உள்நாட்டு சந்தைகளில் விரிவாக்கம் செய்வதுடன், சார்க் பிராந்தியத்தில் நிறுவனத்தின் மூலோபாய விரிவாக்க திட்டங்களின் பிரகாரம் மாலைதீவுகள் போன்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றது. இதுவரை சென்றடையாத பிரிவுகளை சென்றடையும் வகையில் e-வணிக கட்டமைப்புகள் அடங்கலாக டிஜிட்டல் மயமாக்க செயற்பாடுகளில் பெருமளவு முதலீடுகளை மேற்கொள்வதுடன், சந்தை மாற்றங்களுக்கு துரிதமாக பதிலளிப்பதாகவும் அமைந்துள்ளது.

கடந்த தசாப்த காலப்பகுதியில் நிறுவனம் பல விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுக் கொண்டுள்ளது. இதில் Superbrands அந்தஸ்தை பெற்றுக் கொண்டமை, Asia Pacific Entrepreneurship Award, Asia Corporate Excellence and Sustainability Award – Top SME in Asia & Asia’s Best Performing Companies, and Asia’s Greatest Brands மற்றும் Leaders by Asia One Magazine மற்றும் URS Media Consulting P.L. ஆகியன அவற்றில் அடங்கியுள்ளன.

அடுத்த தசாப்த காலப்பகுதிக்கு தெளிவான திட்டமிடலுடன் செயலாற்றும் புளோரா டிஷுக்கள், தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுடன், தனது விநியோகத்தர்கள் மற்றும் பங்காளர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் நுகர்வோரின் அன்பும், ஆதரவுடனும் போன்றவற்றுடன் தொடர்ந்தும் வெற்றிகரமாக இயங்க உறுதிபூண்டுள்ளது. வர்த்தக நாமம் தனது பயணத்தை தொடர்கையில், அதன் உறுதியான நுகர்வோர் நம்பிக்கை மற்றும் சந்தை பிரசன்னம் போன்றன துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்துக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளன


Share with your friend