சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியான, முன்னணி உள்நாட்டு மொபைல் ரீசார்ஜ் மற்றும் பயன்பாட்டுக் கட்டணச் App ஆன PayMaster, நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொரு இலங்கை வாழ் பிரஜைக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு புதுமையான தீர்வாக MediSearch என்ற தனித்துவமான அம்சத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
MediSearch Appஇன் மூலம், PayMaster பாவனையாளர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் பெற முடியுமா என்ற தகவலை அருகிலுள்ள மருந்தகங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடிவதுடன், PayMaster மொபைல் Appஐப் பயன்படுத்தும் அனைவருக்கும் MediSearch அம்சத்தை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
MediSearch வலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் 200க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இணைந்துள்ளதுடன், இந்த வலைப்பின்னல் அடுத்த இரண்டு மாதங்களில் நாடுமுழுவதும் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய 3,000 மருந்தகங்களை அடையும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த அம்சத்தை உருவாக்கும் போது, மருந்து தட்டுப்பாட்டின் விளைவாக பனாடோல் போன்ற சில அடிப்படை மருந்துகளைத் தேடி மக்கள் மருந்தகங்களுக்கு அழைந்து திரிவதற்குப் பதிலாக பதிலாக இந்த முறையை அறிமுகப்படுத்த நிறுவனம் எதிர்பார்த்ததுடன் எரிபொருள் பற்றாக்குறைக்கு இது ஒரு நடைமுறைத் தீர்வாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
PayMaster என்பது முற்கொடுப்பனவு Top Ups, பயன்பாட்டு கட்டண கொடுப்பனவுகள், வங்கிகளுக்கிடையேயான பணப் பரிமாற்றங்கள், இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துதல், Rider Settlement, மருத்துவ சந்திப்பு முன்பதிவுகள் மற்றும் பல போன்ற அற்புதமான அம்சங்களை வழங்கும் விருது பெற்ற மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இலங்கை App ஆகும்.
PayMaster வழங்கும் ஒரு தனித்துவமான அம்சம், In-App கடன் வசதி ஆகும், இது பாவனையாளர்களுக்கு 50,000 ரூபா வரையிலான கடன்களைப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. இந்த விண்ணப்பம் மிக உயர்ந்த சர்வதேச பாதுகாப்பு தரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது மற்றும் இலங்கை மத்திய வங்கியால் (CBSL) அமைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கான பாதுகாப்பு தர வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டது. மேலும் PayMaster Appஐ Google Play Store, Apple App Store மற்றும் Huawei Store ஆகியவற்றிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.