* 125 மில்லியன் ரூபா திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது, 20% பங்குகளை வழங்குகிறது, ஒரு பங்கிற்கு ரூபா 5 என்றஅடிப்படையில் 25 மில்லியன் பங்குகளை வழங்குகிறது
* ஜூன் 26 அன்று Hybrid Investor Forum. வழங்கல்கள் 4 ஜூலை 2024 அன்று திறக்கப்படும்
* 1995 இல் ஆரம்பிக்கப்பட்டது, 2016 முதல் பெண் தலைமைத்துவ நிறுவனம்.
* வட மாகாணத்தின், யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த நிறுவனர்களை பூர்வீகமாகக் கொண்ட, கொழும்புபங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் பெண் தலைமைத்துவ நிறுவனம்.
* அட்டாரா கெப்பிடல், IPO இன் நிதி ஆலோசகராகவும், சலுகை மற்றும் அனுசரணைக்கு முகாமையாளராகவும்செயல்படும்.
* மஹாராஜா பூட்ஸ் புராடக்ட்ஸ் ஆனது, இலங்கை USAID CATALYZE தனியார் துறை மேம்பாடு (PSD) செயல்பாட்டின் தயார்நிலைத் நிதித் திட்டத்தின் கீழ், SME களுக்கான பங்கு மூலதனத்தை எளிதாக்குவதைநோக்கமாகக் கொண்ட முதல் CSE இல் பட்டியலிடப்பட்ட மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் நிறுவனமாகும்.
யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த தொலைநோக்குடைய தொழிலதிபரான, மறைந்த சிவசரணம் குகநாதனால்1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மஹாராஜா பூட்ஸ் புரொடக்ட்ஸ் நிறுவனம், அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற உயர்தர உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தஅதேநேரம், உள்ளுர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியது. இன்று, இந்நிறுவனம் தரம் மற்றும்புத்தாக்கத்தின் அடையாளமாக உள்ளது. அரிசி சார்ந்த மற்றும் மாவு சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், மீன் வகைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்களால் வாடிக்கையாளர்களின் தேவையைபூர்த்தி செய்கிறது. இலங்கையில் மட்டுமல்லாது பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்றவெளிநாடுகளுக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதன் விநியோகஸ்தர் வலையமைப்பைவிஸ்தரித்துள்ளது..
2022 ஜூன் மாதம், மஹாராஜா மார்க்கெட்டிங் (பிரைவேட்) லிமிடெட் உள்ளுர் விநியோகத்தில் கவனம் செலுத்தி100% முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டு, அதே நேரத்தில் ஒரு ஏற்றுமதி சார்ந்தநிறுவனமாகவும் மாறியது. நிறுவனத்தின் பதிவு அலுவலகம் கொழும்பு 06, டாக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை, இல 18/3 இல்உள்ளது. மேலும் உற்பத்தி, பதப்படுத்தும் வசதி, பொதியிடல், சேமிப்பு மற்றும் விநியோகம் என்பன வத்தளையில்நடைபெறுகிறது.
‘2016 இல் எனது கணவரின் மறைவுக்குப் பிறகு, எனது மகன்களின் ஆதரவுடன் நிறுவனத்திற்கான அவரதுதொலைநோக்குப் பார்வையைத் தொடர வேண்டுமென நான் உறுதியாக இருந்தேன். எனது தலைமையின் கீழ் 8 வருடகாலத்திற்குள், பெருநிறுவன ஆளுகை கட்டமைப்புகள் மற்றும் நிதி நிர்வாகத்தின் சிறந்த நடைமுறைகளால் CSEயில் பட்டியலிடுவதற்கான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவிற்கு, IPO இன் போது பங்குச் சந்தைமுதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், சிறந்த செயல்திறனை அடைந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று மஹாராஜா பூட்ஸின் சுயாதீனமற்ற நிர்வாக இயக்குநர் திருமதி தவமலர் குகநாதன் தெரிவித்தார்.
குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தலைவர்/சுயாதீனமற்ற நிர்வாக இயக்குநர் திரு. விஜயானந்த் குகநாதன், ‘மஹாராஜா பூட்ஸ் முக்கியமாக ஏற்றுமதியில் கவனம் செலுத்துகிறது, 23/24 நிதியாண்டில்ஈட்டிய வருமானத்தில் 64% USD 1 மில்லியனைத் தாண்டியுள்ளது, எனவே புதிய சமபங்கு மூலதனத்தை. வணிகவிரிவாக்கத்திற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலான IPO நிதியை அரிசி ஆலை, அரிசியை தீட்டும் ஆலை, நல்லெண்ணெய் ஆலை அமைக்கவும், களஞ்சிய வசதியை அதிகரிக்க கட்டிட வளாகத்தைவிரிவுபடுத்தவும், பாதுகாப்பான கூடுதல் செயல்பாட்டு மூலதனத்துக்காகவும் பயன்படுத்துகிறோம்’ எனக் கூறினார்.
மஹாராஜா பூட்ஸ் 5000 ற்கும் மேற்பட்ட உள்ளுர் விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ளது.
அட்டாரா கெப்பிடல், IPO இன் நிதி ஆலோசகராகவும், சலுகை மற்றும் அனுசரணைக்கு முகாமையாளராகவும்செயல்படும். ‘கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமாக எம்மைஅறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், மஹாராஜா பூட்ஸ் என்பது பெண் தலைமைத்துவ நிறுவனமாகும், எனவே இலங்கையில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இது அமைவதோடு, மேலும் பங்கு மூலதனத்தை உயர்த்துவதில் மற்றவர்களை ஊக்குவிக்கும்’ என்று அட்டாரா கெப்பிடல் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு. ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
MFPE குழுவானது, USAID CATALYZE PSD செயல்பாட்டால் அதன் நிதியளிப்புத் தயார்நிலைத் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும் நிறுவனங்களின் போ உள்ளடங்கலான ஒரு பகுதியாகும். இந்த வேலைத்திட்டமானது வளர்ச்சிக்கான திறனை உருவாக்குவதுடன், இலங்கையில் உணவு, விவசாயம் மற்றும் ICT துறைகளில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவியை ஊக்குவித்து, பெண்கள் தலைமையிலான வணிகங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
மஹாராஜா பூட்ஸ் புரொடக்ட்ஸ் குழுமம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தங்கள் சொந்த உற்பத்திச் சூத்திரத்தைக்கொண்டுள்ளது, அத்துடன் உலகளவில் வசிக்கும் ஆசிய நாட்டவர்களின் தேவையைக் கருதி, ஏனைய மூன்றாம் தரப்புதயாரிப்புகளின் (நுகர்பொருட்கள், வீட்டுப் பொருட்கள் போன்றவை) ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது. தேசத்தைவளர்ப்பதற்கும் புதுமைகளைத் தழுவுவதற்கும் அர்ப்பணிப்புடன் உணவுத் துறையில் சிறந்து விளங்குவதைத்தொடர்ந்து இனிவரும் தலைமுறைகளுக்கு ஆரோக்கியமான, உயர்தர உணவுப்பொருட்களை வழங்குவதில்உறுதியாக உள்ளது.
மஹாராஜா பூட்ஸ் புரொடக்ட்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்: விஜயானந்த் குகநாதன் (தலைவர்/சுயாதீனமற்ற நிர்வாக இயக்குநர்), வித்யானந்த் குகநாதன் (முகாமைத்துவப் பணிப்பாளர்/சுயாதீனமற்ற நிர்வாகஇயக்குநர்), திருமதி தவமலர் குகநாதன் (சுயாதீனமற்ற நிர்வாக இயக்குநர்), செயிட் ரிஸ்வி மௌலானா (சுயாதீனநிர்வாக இயக்குநர்), மெலங்கா ஏ தூல்வாலா (சுயாதீன நிர்வாக அதிகாரமற்ற இயக்குனர்) மற்றும் இம்ரான் ஃபுர்கான்(சுயாதீன நிர்வாக அதிகாரமற்ற இயக்குனர்)