இலங்கையின் முன்னணி காகிதாதிகள் வர்த்தக நாமமான அட்லஸ், மக்கள் மத்தியில் கொண்டுள்ள அபிமானத்தை மேலும் உறுதி செய்யும் வகையில், தொடர்ச்சியான மூன்றாவது தடவையாகவும் SLIM-Kantar மக்கள் விருதுகள் 2022 (SLIM-Kantar People’s Awards 2022) இல் ஆண்டின் சிறந்த பாடசாலை விநியோக வர்த்தக நாமம் 2022 எனும் விருதை தனதாக்கியிருந்தது. பயிலலில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்த, சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்கு அங்கீகாரமாக வென்ற இந்த விருதை அட்லஸ் அக்சிலியா கம்பனி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர பெற்றுக் கொண்டார். இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் போது, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் கௌஷாலி குசுமபால மற்றும் விற்பனை பணிப்பாளர் இந்திரஜித் பிந்துஹேவா ஆகியோருடன் அட்லஸ் அணியினரும் காணப்பட்டனர். 2022 மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த 5 FMCG இளைஞர் அபிமான வர்த்தக நாமங்களில் ஒன்றாக, “2022 ஆம் ஆண்டுக்கான இளைஞர் அபிமான FMCG வர்த்தக நாம விருது” என்பதற்கும் பிரேரிக்கப்பட்டிருந்தது.
மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஒரே வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வாக SLIM மக்கள் அபிமான விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருப்பதுடன், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. இலங்கையில் தற்போது இயங்கும் உலகின் முன்னணி புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாக Kantar LMRB இனால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்கின்றது. இலங்கையர்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் அபிமானம் வென்ற வர்த்தக நாமங்கள், நபர்கள், நிறுவனங்கள் போன்றவற்றை கருத்தாய்வின் மூலம் தெரிவு செய்து மக்கள் அபிமான விருது வழங்கப்படுகின்றது.
அட்லஸ் அக்சிலியா கம்பனி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் முன்னணி பாடசாலை விநியோக வர்த்தக நாமம் எனும் வகையில், ஆறு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலங்கையின் சிறுவர்களுக்கு அட்லஸ் சேவைகளை வழங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நாமம் காகிதாதிகள் என்பதற்கு அப்பால் தன்னை வியாபித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள், பொருளடக்கங்கள் மற்றும் அனுபவங்களினூடாக எமது வர்த்தக நாம உறுதி மொழியை நிவர்த்தி செய்யும் பயிலலுடன் தொடர்புடைய ஒரு வர்த்தக நாமமாக நாம் திகழ்கின்றோம். பயிலலை மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்கச் செய்வது என்பது எமது நோக்கமாக அமைந்திருப்பதுடன், எமது உருவாக்கம் மற்றும் அவற்றினூடாக சமூகத்தில் நாம் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் நாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளோம். தேவையை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு மற்றும் புத்தாக்கமான கொள்கைகள் போன்றன எமது தயாரிப்புகளை கட்டியெழுப்ப ஏதுவாக அமைந்திருப்பதுடன், மகிழ்ச்சிகரமான மற்றும் உத்வேகமான பயிலல் அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்துள்ளது. ஆரம்ப சிறுபராய விருத்தி மைல்கற்களுக்கு ஆதரவளிக்க இது உதவியாக அமைந்துள்ளது. இளம் தலைமுறையினருக்கு இது கவர்ச்சிகரமாக அமைந்திருப்பதுடன், இளைஞர்களின் அபிமான விருது என பிரேரிக்கப்பட்டிருந்தது எமது நோக்கத்துக்கு ஆதரவளிப்பதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கையில் பயிலல் கட்டமைப்புக்கு உரிய தீர்வுகளை பொருத்தமாக வழங்கக்கூடிய வகையில் நிறுவனத்தின் பங்காளர் ஈடுபாட்டுடனான பயிலல் இடையீடுகள் அமைந்துள்ளன. இதனூடாக, தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் முதன் முதலில் ஒன்லைன் ஊடாக கற்றலை ஆரம்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்திருந்தது. மேலும், கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி இலங்கையில் கல்வி பயிலும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சிறுவர்களுக்கு “அட்லஸ் சிப்சவி” நிகழ்ச்சியினூடாக சமத்துவமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தினூடாக நிதிப் புலமைப்பரிசில்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்தி மற்றும் பாடசாலைப் பொருட்கள் நன்கொடைகள் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன.
அசித தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மக்கள் தெரிவு வர்த்தக நாம விருதை வெற்றியீட்டியிருந்தமை என்பது நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எதிர்காலத்தை நோக்கி இந்த பயணத்தை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
முன்னர் சிலோன் பென்சில் கம்பனி (பிரைவட்) லிமிடெட் என அழைக்கப்பட்ட அட்லஸ் அக்ஸிலியா கம்பனி பிரைவட் லிமிடெட், 1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஸ்தாபிக்கப்பட்டது முதல், பாடசாலை காகிதாதிகள் உற்பத்தியில் சந்தையின் முன்னோடி எனும் நிலைக்கு உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு தமது கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு அவசியமான சாதனங்களை வழங்குவது எனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ‘அட்லஸ்’ இலங்கையின் நுகர்வோருடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், இலங்கையர்கள் அதிகளவு விரும்பும் நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் 2018 ஆம் ஆண்டின் பெருமைக்குரிய தேசிய தர விருதையும் வெற்றியீட்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் சர்வதேச வினைத்திறன் சிறப்பு விருது அடங்கலாக பல சர்வதேச விருதுகளையும் சுவீகரித்திருந்தது.