இலங்கையின் முன்னணி வணிக தொடக்கங்களின் சூழல் கட்டமைப்பான Hatch நிறுவனம், நாட்டின் தொழில்முனைவோர் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான புரட்சிகரமான முயற்சியான Startup Nation திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 18 தொடக்க வணிகங்கள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்நிறுவனம் 700 இற்கும் அதிக வணிக தொடக்கங்கள் மற்றும் மேலும் 800 வெற்றிடங்களை கொண்ட Hatch, இன்று 3,000 வெற்றிடங்களைக் கொண்டதாக வளர்ந்து, இலங்கை தொழில்முனைவோரின் தூணாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

Startup Nation திட்டமானது, நாட்டின் சிறந்த வணிக தொடக்கங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டமைத்து, நிதியளிப்பது தொடர்பில் அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ், Hatch ஒரு தேசிய வணிக தொடக்க போட்டியை நடத்தவுள்ளது. இதில் 1,000 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களில் முதல் 100 இடங்களைப் பெறுவோர் பட்டியலிடப்படுவார்கள். இந்தப் போட்டியில் சிறந்த தொழில்நுட்ப தீர்வுகள், B2B மற்றும் B2C புத்தாக்க கண்டுபிடிப்புகள், நிறுவனங்களுக்கான மென்பொருள்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் அளவிடக்கூடிய திறனைக் கொண்ட தேசிய ரீதியிலான முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வணிக தொடக்கங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வெற்றிகரமான MPV வருமானம் ஈட்டக் கூடிய வணிக தொடக்கமொன்று வெளிப்படும் நிலையில், அந்த சிறந்த முயற்சியானது, 100,000 அமெரிக்க டொலர் நிதியுதவி வாய்ப்பைப் பெறுவதற்கு தகுதி பெறும். அத்துடன் தொடர்ச்சியாக முதலீடுகளை பெறுவவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், MPV வருமானம் ஈட்டும் வணிகங்களை Hatch அதன் இலக்காகக் கொண்டிருக்கும்.

தமது ஆரம்ப நிலையிலிருந்தே இலங்கை தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து, ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவுவதற்கு Hatch செயற்பட்டு வருகிறது. Startup Nation திட்டமானது, முதலீட்டாளர்களுக்கும் வணிக தொடக்கங்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம், புத்தாக்கங்களைத் தூண்டி, நிலைபேறான நீண்டகால தீர்வுகளை வழங்கும்.
Hatch நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜீவன் ஞானம் இது பற்றித் தெரிவிக்கையில், “மூலதனத்தை வழங்கி, உலகளாவிய ரீதியில் தமது வெளிப்பாட்டை காண்பிப்பதற்கு அவசியமான வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் வணிக தொடக்கங்களின் வளர்ச்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம், உலகளாவிய வணிக தொடக்கங்களின் கட்டமைப்பில் இலங்கையை சிறந்த செயல்திறன் கொண்ட பங்களிப்பாளராக மாற்ற நாம் செயற்படுகிறோம்.” என்றார்.

உள்நாட்டில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியல் அளவிடக்கூடிய நிலைபேறான தீர்வுகளை உருவாக்க அதிக வணிக தொடக்கங்களை ஊக்குவிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் பசுமை வலுசக்தி முதல் புதிய தொழில்நுட்பம் மற்றும் சமூக நிறுவனங்கள் வரை, Hatch மூலம் அடைகாக்கப்பட்ட வணிக தொடக்கங்கள் யாவும் சவாலான தொழில்துறைகளாகும். அதே நேரத்தில் அவை மிகவும் வலுவான மற்றும் உள்ளீர்க்கப்பட்ட பொருளாதாரத்தை செயற்படுத்துகின்றன.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), Bill & Melinda Gates Foundation, Ford Foundation, US State Department, Global Affairs Canada, GIZ (German Development Agency) மற்றும் Nestlé, IFS Global, Hemas PLC, Veracity Group போன்ற முக்கிய நிறுவனங்களுடனான அதன் பலம் வாய்ந்த கூட்டாண்மைகள் மூலம் வணிக தொடக்க திட்டங்களின் நம்பகத்தன்மை மேலும் ஆதரிக்கப்படுகிறது.
Hatch இணை நிறுவுனர் பிருந்தா செல்வதுரை ஞானம் கருத்து வெளியிடுகையில், “அருகில் வந்து, சர்வதேச கூட்டாண்மைகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள திறனானது, இலங்கை வணிக தொடக்க கட்டமைப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான எமது உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. Startup Nation திட்டமானது உள்ளூர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் இக்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குமான எமது நோக்கத்தின் அடுத்த அத்தியாயமாகும். ஒரு சிறந்த வணிக தொடக்கத்தின் மையத்தின் அடித்தளமானது, பெளதிக மற்றும் அறிவுசார் திறன் ஆகியவற்றில் தங்கியிருக்கும். திறமை, மூலதனம் மற்றும் யோசனைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் அர்ப்பணிப்புள்ள புத்தாக்க மாவட்டங்கள், கூட்டு பணியிடங்கள், வணிக தொடக்க அடைகாப்பகங்களை நாம் நிறுவ வேண்டும். விடயங்கள் அருகிலேயே அமைக்கப்படுவதன் மூலம் வாய்ப்புகள் உருவாகிறது. அதிக இணைப்புகளைக் கொண்ட வலையமைப்பு தொடர்புகள், வழிகாட்டல், பல் துறை ஒத்துழைப்பு ஆகியன நிறுவன உருவாக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சியையும் துரிதப்படுத்தும். புத்தாக்கத்தின் விரைவான வணிகமயமாக்கலை உறுதி செய்ய, பெருநிறுவனம் – வணிக தொடக்கம் இடையிலான கூட்டாண்மைகள் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும்.” என்றார்.
Startup Nation திட்டமானது, சிறந்த வணிக தொடக்கங்களை தேடிக் கண்டுபிடிப்பது பற்றியது மாத்திரமல்ல. இது புத்தாக்கம், முதலீடு, நிலைபேறான தன்மையின் வளர்ச்சி மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டமைப்பது பற்றியதாகும். இந்த திட்டத்தின் மூலம், எண்ணக்கருவாக உள்ள இலங்கையின் வணிக தொடக்கங்களுக்கு அவசியமான வழிகாட்டல், வளங்கள், வலையமைப்பு தொடர்புகளுக்கான அணுகல் ஆகியன வழங்கப்படுகிறது. இது நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தொடக்க வணிகங்களின் கட்டமைப்பில் இணைய ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களை ஈர்க்கிறது. இலங்கையை ஒரு முதன்மையான புத்தாக்க மையமாகவும் இது நிலைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் முதலீட்டுக்கு விரும்பத்தக்க மற்றும் தொழில்முனைவோர் தலைமைத்தவத்தை கற்பிப்பதற்கு ஏற்ற இடமாக அது இலங்கையை நிலைநிறுத்துகிறது.
Startup Nation திட்டத்துடன் இணைந்தவாறு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் ஒரு வலுவான மற்றும் மிகவும் ஈடுகொடுக்கக் கூடிய வணிக தொடக்க கட்டமைப்பொன்றை உருவாக்க Hatch எதிர்பார்க்கிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையை ஒரு வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக பார்க்கும் வகையிலான, ஒரு ஆரோக்கியமான தொழில்முனைவோர் கட்டமைப்பை உருவாக்க இது முயற்சிக்கிறது. முக்கிய தேசிய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்கும் உலகத் தரம் வாய்ந்த, அளவிடக்கூடிய வணிக தொடக்கங்களை உருவாக்குவதையும், முக்கிய பங்குதாரர்கள் – வணிக தொடக்கங்கள் இடையிலும், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பெருநிறுவன கூட்டாளர்கள் இடையிலும் நிலைபேறான, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வணிக நிறுவனங்களை உருவாக்க ஒன்றிணைக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு வாய்ந்த இடத்தை நிறுவுவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவற்றிற்கான அடித்தளத்தை Hatch ஏற்கனவே அமைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 12 மாதங்களில், Hatch நிறுவனம் சிங்கப்பூர், வியட்நாம், கொரியா, மலேசியா, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, முதலீடு, சந்தை விரிவாக்கம், காப்புரிமை மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு அடைகாக்கும் மாதிரியை சோதித்து வருகிறது. அதிலிருந்தான முடிவுகள் தெளிவாக வந்துள்ளதோடு, இந்த அணுகுமுறை சிறப்பாக செயற்படுகிறது. தற்போது, அதை அளவிட வேண்டிய நேரமாகும். இது ஒரு குறுகிய நோக்கு அல்ல என்பதுடன், துணிவான செயற்படுத்தலை ஏற்படுத்த முனைகின்ற, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு உத்தியாகும்.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வணிக தொடக்கங்கள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்களை இந்த மாற்றப் பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க Hatch அழைப்பு விடுக்கிறது. நீங்கள் ஒரு திசை தேடி வளர்ந்து வரும் தொழில்முனைவோராகவோ அல்லது அதிக வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடும் முதலீட்டாளராகவோ இருந்தால், இது உங்களுக்கான அழைப்பாகும்.