

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேனத்தின் 175-வது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (29-08-2025) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த சம்மேளனத்தின் 170-வது ஆண்டு பாரம்பரியம் மற்றும் மூன்று தசாப்தங்களாக தனியார்மயமாக்கப்பட்ட நிலை குறித்து மறுபார்வை செய்தார். இதில் RPC நிறுவனங்களின் மூலதனம் 8 பில்லியன் ரூபாயிலிருந்து 113 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் மேலும் சராசரியாக 136 பில்லியன் ரூபாய் மொத்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆய்வறிக்கையின் அடிப்படையில் பன்முகப்படுத்தல் – ஃபாம் ஒயில் தடை குறித்து அறிவியல் சார்ந்த ஆய்வு, தினசரி கூலியிலிருந்து உற்பத்தி சார்ந்த ஊதிய முறைக்கு மாறுதல், அளவைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைத்தல், 2045-ல் காலக்கெடுவை முன்கூட்டியே தெளிவுபடுத்தி நீண்டகால நடவு செய்ய அனுமதி வழங்குதல் ஆகியவற்றை அவர் கோரினார்.


இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதிக்கும் இத்துறை ஆதரவாக இருப்பது குறித்து ஹுலங்கமுவ பாராட்டினார். அவர் மேலும் கூறுகையில், “ஆனால் 1992-ல் இருந்து தேயிலை உற்பத்தி சிறிதளவே உயர்ந்துள்ளது, ரப்பர் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது, விளைச்சல் பெருமளவில் நிலையானது, மற்றும் தோட்டத் தொழிலாளர் எண்ணிக்கை சுமார் 100,000 ஆகக் குறைந்துள்ளது என எச்சரித்தார். போட்டித்தன்மையான, நிலையான ஊதியத்தை ஏற்றல், இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை விரைவுபடுத்துதல், மற்றும் PPP மற்றும் குத்தகை நிலங்கள் மூலம் பன்முகப்படுத்துதல் ஆகியவற்றை அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் மானியங்களை நம்பியிருக்காமல் உற்பத்தித்திறனை ஊக்குவிக்க வேண்டும். மேலும் வரவிருக்கும் PPP மற்றும் அரசு சார்பு நிறுவன சீர்திருத்தங்கள், மேக்ரோ அடிப்படைகளை மேம்படுத்துதல், மற்றும் வட்டி விகிதங்களை குறைப்பதன் மூலம் புதிய முதலீடுகளை ஆதரிக்கும் வாய்ப்பு ஆகியவற்றையும் அவர் எடுத்துக்காட்டினார்.”