இலங்கையின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தின் Coventry பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெற்காசியாவில் முதல் தடவையாக MSc Nursing, MSc Digital Health மற்றும் MBA in Healthcare Administration எனும் பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்க அவர்களின் தலைமையில் IIHS நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக 3,000 இற்கும் மேற்பட்ட சுகாதார வல்லுநர்களை உருவாக்கியுள்ளது. IIHS நிறுவனம் அங்கு கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இத் துறையில் நீடித்த அனுபவமுடைய வல்லுநர்களின் கீழ் உயர் மட்டத்திலான கல்வி வசதிகளை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. “IIHS நிறுவனத்துக்கும் Coventry பல்கலைக்கழகத்துக்குமிடையிலான இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கை ஈடு இணையற்ற கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேற்படி கற்கை பாடநெறிகளை கற்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் தெற்காசியாவின் ஒரே கல்வி நிறுவனம் IIHS நிறுவனம் ஆகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் கல்வியின் புதிய அம்சங்கள் தொடர்பாக ஆர்வங்கொண்டுள்ள நாம் மாணவர்களுக்கு மகத்தான அனுபவங்களை வழங்குவதற்கு எப்பொழுதும் முயற்சிக்கின்றோம்.” என டாக்டர் எதிரிசிங்க தெரிவித்தார்.
Coventry பல்கலைக்கழகம் 300 இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பாடநெறிகளை அளிக்கும் கல்லூரிகள் மற்றும் திணைக்களங்களுடன் கூடிய 04 பீடங்களை கொண்டுள்ளது. IIHS நிறுவனத்தில் உயர் டிப்ளோமா பாடநெறிகளை பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கு Coventry பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமது பட்டப்படிப்பு பாடநெறியை கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. Guardian University பிரமாணங்களின் பிரகாரம் ஐக்கிய இராச்சியத்தின் ஆகச் சிறந்த பல்கலைக்கழங்கள் மத்தியில் 15 ஆவது இடத்தையும், சிறந்த கற்பித்தல் நடவடிக்கைகளில் இரண்டாவது இடத்தையும், மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்களை அளிக்கும் பல்கலைக்கழங்களில் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ள Coventry பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற உயர் கல்வியை பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. சர்வதேச அங்காரத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தி IIHS நிறுவனம் அறிமுகப்படுத்தும் மேற்படி பாடநெறிகள் SLQF பத்தாவது நிலை மற்றும் FEHQ 07 ஆவது நிலையின் கீழும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி பாடநெறிகளை தெரிவு செய்வதன் ஊடாக புதியதொரு கல்வி அனுபவம் மாத்திரமின்றி சர்வதேச அங்காரமும் உரித்தாகுமென IIHS நிறுவனம் தெரிவித்துள்ளது.