- புதிய அடையாளம் மஹிந்ரா ஃபினான்ஸின் பரந்த அளவிலான நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
- மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸை இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனராக மாற்றுவதற்கான பயணத்தின் முக்கியமான படியாக பெயர் மாற்றும் நடவடிக்கை அமைந்துள்ளது
மஹிந்ரா அன்ட் மஹிந்ரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட்டின் (மஹிந்ரா ஃபினான்ஸ்/ MMFSL) துணை நிறுவனமான ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், தனது நிறுவனத்தின் பெயரை மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் (MIFL) என பெயர் மாற்றம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் நிறுவனத்தை இலங்கையின் முன்னணி உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியமைக்கும் குறிக்கோளைக் கட்டியெழுப்ப இந்த இரண்டு கூட்டு வர்த்தக முயற்சி பங்காளர்களின் (மஹிந்ரா ஃபினான்ஸ் மற்றும் ஐடியல் குழுமம்) அத்திவாரமாக இந்த பெயர் மாற்றம் அமைந்துள்ளது. மஹிந்ரா ஃபினான்ஸின் முதலீடு ஏற்கனவே Fitch தர மதிப்பீட்டில் AA – (Outlook Stable) என்ற மீள் தர மதிப்பீட்டுடன், நிறுவனத்திற்கு வலுவான அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மஹிந்ரா அன்ட் மஹிந்ரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட்டின் முதலீடு, மஹிந்ரா ஃபினான்ஸின் சர்வதேச மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இது ஆசிய சந்தைகளைப் போன்று இந்தியாவிற்குள் விரிவடைகின்ற, குறிப்பாக மஹிந்ரா குழுமத்தின் மோட்டார் வாகன மற்றும் பண்ணை உபகரண தயாரிப்புகளுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஐடியல் ஃபினான்ஸ் ஏற்கனவே இலங்கை வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான நிதிச் சேவை தயாரிப்புகளை வழங்கி வருகிறது. பெயர் மாற்றமிடப்பட்ட நிறுவனமான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் ஆனது இன்னும் பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர் மதிப்பை மேம்படுத்துவதில் மேலும் கவனம் செலுத்தும். தங்கக் கடன்கள், தனிப்பட்ட வாகனங்களுக்கான குத்தகை, வணிக வண்டிகள், இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான கடன்கள், நுகர்வோர் நிதிக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவை இதில் அடங்கும். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை அவர்களின் வீட்டு வாசலுக்கு அருகாமையில்; சேவை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் தனது கிளை வலையமைப்பை விரைவாக அதிகரிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் மஹிந்ரா ஃபினான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் துணைத் தலைமை அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரமேஷ் ஐயர் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஆசியாவில் விரிவாக்கத்தை மேற்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ள நிலையில், ஐடியல் குழுமத்துடனான இந்த மூலோபாய கூட்டாண்மை அந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். வலுவான, நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புடன், இலங்கை சந்தை பெரும் வளர்ச்சிவாய்ப்புத் திறனைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வளர்ச்சியைத் தூண்டுவதற்கு தேவையான வளங்கள், மூலதனம் மற்றும் நிபுணத்துவத்தை நாங்கள் கொண்டு வருவதால், இந்த நிறுவனம், இந்த சந்தையில் இரு கூட்டாளர்களுக்கும் பரஸ்பரம் வெற்றியளிப்பதாக அமையும்,” என்று குறிப்பிட்டார்.
ஐடியல் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான நளின் வெல்கம அவர்கள் கருத்து வெளியிடுகையில், “மஹிந்ரா குழுமத்துடனான எங்களின் தொடர்பு நீண்டகாலமாக நிலைபெற்றுள்ளதுடன், மஹிந்ரா குழுமம் தனது பெயரை இணைக்கும் சந்தர்ப்பத்தினை ஐடியல் ஃபினான்ஸ் இற்கு வழங்கியுள்ளமை மஹிந்ரா குழுமம் இந்தக் கூட்டாண்மை மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாகும். மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் ஆனது இலங்கையின் நிதிச் சேவை சந்தையில் பன்மடங்கு வளர்ச்சி வாய்ப்புகளுக்கு துணை போவதுடன், நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கான எமது இலக்கை அடைய உதவும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். புதிய வர்த்தகநாமமான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் வர்த்தகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இலங்கையில் நிறுவனத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
நிதியியல் சேவைகள் துறையில் மஹிந்ரா ஃபினான்ஸின் 25 வருடங்களுக்கும் மேலான நிபுணத்துவம் மற்றும் ஐடியல் ஃபினான்ஸின் சந்தை அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து இலங்கையில் ஒரு வலுவான நிதிச் சேவை வர்த்தகத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் விரும்புகிறது. மஹிந்ரா ஃபினான்ஸ் தனது வெற்றிகரமான மற்றும் சமூகத்தை அரவணைக்கும் வணிக கட்டமைப்பு முறைமையை இலங்கையில் வணிகத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பிரதிபலிக்கும் இலக்கினைக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் கலாசாரம் மற்றும் புவியியல் ரீதியில் நிலவும் ஒற்றுமையுடன் இலங்கை மற்றும் அதன் வலுவான நிதிச் சேவைகள் சந்தையானது மஹிந்ரா ஃபினான்ஸ் இற்கு ஒரு நம்பிக்கையூட்டும் வாய்ப்பினைத் தோற்றுவித்துள்ளது. மோட்டார் வாகன சந்தையாக, இலங்கை மஹிந்ரா குழுமத்திற்கு மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், இது மோட்டார் வாகனங்களின் பாகங்களை இணைத்து, அவற்றை வடிவமைக்கும் செயல்பாட்டையும் நிறுவியுள்ளது.
மஹிந்ரா அன்ட் மஹிந்ரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட் நிறுவனம் தொடர்பான விபரங்கள்
மஹிந்ரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்ரா அன்ட் மஹிந்ரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட் (மஹிந்ரா ஃபினான்ஸ்) இந்தியாவின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். கிராமப்புறம் மற்றும் அரைநகர்ப்புற பிரிவுகள் மீது கவனம் செலுத்தியுள்ள இந்நிறுவனம், 7.3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன், 11 பில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கும் அதிகமான சொத்துக்களை தன் கீழ் நிர்வகித்து வருகின்றது. வாகன மற்றும் டிராக்டர் வாகனங்களுக்கான கடன்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற இந்நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளுக்கு கடன்களை வழங்கி வருவதுடன், பொதுமக்களுக்கு நிலையான வைப்புக்களையும் வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் இந்தியாவில் 380,000 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 7,000 இற்கும் மேற்பட்ட நகரங்கள் மத்தியில் வியாபித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கும் நோக்குடன் 1,388 அலுவலகங்களையும் கொண்டுள்ளது.
Great Place to Work® Institute வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த நிறுவனங்களில் மஹிந்ரா ஃபினான்ஸ் 54 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் காப்புறுதித் தரகுத் துறை துணை நிறுவனமான Mahindra Insurance Brokers Limited (MIBL), அனுமதி உரிமம் பெற்ற கூட்டுத் தரகு நிறுவனமாக, நேரடி மற்றும் மீள்காப்புறுதி தரகுச் சேவைகளை வழங்கி வருகின்றது.
மஹிந்ரா ஃபினான்ஸின் ஒரு துணை நிறுவனமான Mahindra Rural Housing Finance Limited (MRHFL) நாட்டில் கிராமப்புற மற்றும் அரைநகர்ப்புற பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு வீடுகளைக் கொள்வனவு செய்யும், புனரமைக்கும் மற்றும் நிர்மாணிப்பு தேவைகளுக்கான கடன்களை வழங்கி வருகின்றது.
Mahindra Finance CSR Foundation அறக்கட்டளையானது, கம்பெனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 8 இன் விதிகளின் கீழ், நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையைக் கொண்ட ஒரு துணை நிறுவனமாகும்.
Mahindra Manulife Investment Management Private Limited (முன்னர் Mahindra Asset Management Company Private Limited என்ற பெயரில் அறியப்பட்டது) ஆனது Mahindra Manulife Mutual Fund இன் (முன்பு Mahindra Mutual Fund என்ற பெயரில் அறியப்பட்டது) முதலீட்டு முகாமையாளராக செயல்படுகிறது. 2020 ஏப்ரல் 29 அன்று, மஹிந்ரா ஃபினான்ஸ் முழுமையாக தனது உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமான Mahindra Manulife Investment Management Private Limited நிறுவனத்தின் 49% பங்குகளை Manulife Investment Management (Singapore) Pte. Ltd நிறுவனத்துக்கு வழங்கி, 51:49 உரிமையாண்மை அடிப்படையில் கூட்டு வர்த்தக முயற்சியை உருவாக்கியது.
Mahindra Manulife Trustee Private Limited (MMTPL), (முன்னர் Mahindra Trustee Company Private Limited என்ற பெயரில் அறியப்பட்டது) Mahindra Manulife Mutual Fund இன் (முன்னர் Mahindra Mutual Fund என்று அழைக்கப்பட்டது) அறங்காவலராக செயல்படுகிறது. 2020 ஏப்ரல் 29 அன்று, மஹிந்ரா ஃபினான்ஸ் முழுமையாக தனது உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமான Mahindra Manulife Trustee Private Limited இன் 49% பங்குகளை Manulife Investment Management (Singapore) Pte. Ltd நிறுவனத்துக்கு வழங்கி, 51:49 உரிமையாண்மை அடிப்படையில் கூட்டு வர்த்தக முயற்சியை உருவாக்கியது.
அமெரிக்காவில் மஹிந்ரா வாகனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, Rabo வங்கியின் துணை நிறுவனமான De Lage Landen உடன் இணைந்து, Mahindra Finance USA LLC என்ற கூட்டு வர்த்தக நிறுவனத்தை நிறுவனம் அமெரிக்காவில் கொண்டுள்ளது.
மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் (ஐடியல் ஃபினான்ஸ்) என்பது இலங்கையில் உள்ள கம்பனியின் துணை நிறுவனமாகும், இதில் நிறுவனம் 58.2% பங்குகளை தன் வசம் வைத்துள்ளது. ஐடியல் ஃபினான்ஸ் இலங்கை சந்தைக்கு பல்வகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
மஹிந்ரா ஃபினான்ஸ் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களுக்கு www.mahindrafinance.com / டுவிட்டர் மற்றும் முகநூல்: @MahindraFin
ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தொடர்பான விபரங்கள்
இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிச்சேவை அல்லாத ஒரு நிதி நிறுவனமாக 2012 மார்ச்சில் ஐடியல் ஃபினான்ஸ் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்ததுடன், கிராமப்புறம் மற்றும் அரைநகர்ப்புற துறைகளில் தெளிவாக கவனம் செலுத்தியுள்ளது. வர்த்தகச் செயற்பாடுகளுக்கான டிரக் வண்டிகள், மோட்டார் கார், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், தங்கக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவற்றை அதன் கடன் வழங்கல் துறை உள்ளடக்கியுள்ளதுடன், ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் மையப்படுத்தப்பட்ட சந்தைப்பிரிவின் பிரதிபலிப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தியுள்ளதை வெளிப்படுத்துகின்றது.