ஒன்லைன் தளங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் இருப்பதால் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்கிறது
உலகம் பெரியளவில் டிஜிட்டல் மயமாகி வருகின்றபோதும், தரவு தனியுரிமை மற்றும் நமது தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு ஆபத்தில் வைக்கப்படலாம் என்பது குறித்து நம்மில் பெரும்பாலானவர்கள் சிறிதளவும் சிந்திக்காமல் இருக்கின்றோம். அடையாளத் திருட்டு, நிதி இழப்பு, நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தல் மற்றும் உள சுகாதார விடயங்கள் போன்றவற்றைத் தடுப்பதற்கு எந்த வகையான தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பலருக்கு வரிசைப்படுத்த முடியாமல் உள்ளது. சிறுவர்கள் என வரும்போது பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், துருவியறியும் விளம்பரங்கள் மற்றும் தெரியாதவர்களுடன் தொடர்புகொள்வது என்பன கூடத் தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. தரவு தனியுரிமை விடயத்தில் அனைவரும் வளர்ச்சியடைய வேண்டிய மற்றும் கற்க வேண்டியதற்கான தேவை உள்ளது என்பது தெளிவாகிறது.
தரவு தனியுரிமை தினத்தைக் குறிக்கும் வகையில் தனியுரிமைக்கு மதிப்பளித்தல், தகவல்களைப் பாதுகாத்தல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தல் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியில் Viber இணைந்துகொண்டதுடன், இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 28ஆம் திகதி முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சியாகும். தனியுரிமை அல்லது அந்தரங்கம் என்பது Viber இன் அடிப்படை வழிகாட்டியாக இருப்பதால், முன்னணி தகவல்தொடர்பு பயன்பாடு தரவு தனியுரிமையை பாதிக்கும் மற்றொரு அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.
கற்றல் நடவடிக்கைகள் ஒன்லைன் நோக்கி மாறியிருப்பதால் மாணவர்களின் அந்தரங்கம் குறித்த கவலையைத் தூண்டியுள்ளது. வெடித்ததால், கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து வகுப்புகளை டிஜிட்டல் தளங்களுக்கு நகர்த்துவதற்கான முடிவு அவசியமாகியிருப்பதுடன், மெய்நிகர் கல்வியை எளிதாக்கும் தொழில்நுட்பம் குறித்து ஏற்கனவே காணப்படும் மற்றும் புதிய தனியுரிமை அல்லது அந்தரங்கம் குறித்த சிக்கல்கள் வெளிப்பட்டுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் இணைய அணுகல் அதிகரிப்பதன் காரணமாக ஈ-கற்றல் முன்னெப்போதும் இருந்ததை விட அணுகக்கூடியதாக இருப்பதால், டிஜிட்டல் கற்பவர்கள் ஒன்லைன் தனியுரிமை அபாயங்களுக்கு ஆளாக நேரிடும்.
தரையிலிருந்தான மாற்றத்தைப் பெறுவதற்கான அவசரம் தணிந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் ஒன்லைன் கல்வியில் 3 வருடங்கள் சீரான நிலைக்குச் சென்றிருப்பதுடன், தற்போதைய ஈ-கற்றல் யதார்த்தத்தில் மாணவர்களின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக Viber நம்புகிறது.
“அதிகமான மாணவர்கள் தங்கள் தினசரி கற்றல் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுடன் தொடர்புகொள்வதற்காக ஒன்லைனில் இணைவதால், தரவு தனியுரிமை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிக முக்கியமானது. Viber இன் தனியுரிமை மற்றும் கல்விச் சுற்றுச்சூழலுக்கான எங்களின் மதிப்புகளை வெற்றிகொள்வதற்கான அர்ப்பணிப்பு இலங்கையில் எமக்கு முக்கிய நோக்கமாக உள்ளது” என Rakuten Viber இன் ஆசிய பசுபிக்கிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் ரிசே தெரிவித்தார்.
மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல், குழந்தைகளுக்காக வடிவமைக்கப்படாத தயாரிப்புகள், தளங்களைப் பயன்படுத்துவது போன்றவை ஒன்லைன் கல்வியில் காணப்படும் தனியுரிமைச் சிக்கல்களாகக் காணப்படுகின்றன.
இந்தத் தளங்களில் குழந்தைகளின் தனியுரிமை தரநிலைகள் இல்லாமல் இருக்கலாம், மேலும் மாணவர்களின் தரவை அவர்கள் ஒரு வயதுவந்த நுகர்வோர் போல் சேகரிக்கலாம், பின்னர் அவை வணிக, இலாப நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.
கல்வி சார்ந்ததாகக் கருதப்படும் பரிமாற்றங்களின் போது சேகரிக்கப்படும் மாணவர்களின் சுயவிபரங்கள் இலக்கை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம், மற்றும் வயதுவந்த நுகர்வோர் எதிர்கொள்ளும் அதே அச்சுறுத்தல்களுக்கு – அடையாளத் திருட்டு, நற்பெயருக்கு சேதம், மனநலப் பிரச்சினைகள்- போன்றவற்றுக்கு முகங்கொடுக்கலாம்.
“இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் பின்னோக்கிப் பார்த்தால், ஒருவித பின்னோக்கி இருக்க வேண்டும், தற்போதைய செயல்முறைகள் மற்றும் அதிகரித்து வரும் கவலைகள் பற்றிய மதிப்பாய்வு, ஒன்லைனில் கற்கும் இளையோருக்குக் குறைவான அபாயங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான வழியாக இது அமையும்” என சே குறிப்பிட்டார். “தகவல்தொடர்பு தளங்கள் முதல் கல்விப் பொருட்கள் வரை ஒன்லைன் கற்றல் கருவிகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியான விடாமுயற்சி எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் காண்கிறோம்” என்றார்.
தங்களின் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் மாணவர்கள் வளர்ச்சியடையக்கூடிய, கற்கக் கூடிய மற்றும் செழிப்படைய ஒன்லைன் தளங்களுக்கு மாணவர்கள் அணுகுவது குறித்து பெற்றோர் அல்லது பாதுகாவால்களுடன் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் இணைந்து செயற்படுவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
Rakuten Viber பற்றி :
Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.
மேலதிக தகவல்களைப் பெற lana@viber.com இன் ஊடாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.