ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ

Share with your friend

நாட்டின் பாரிய கோழி இறைச்சி உற்பத்தியாளரான கிரிஸ்புரோ, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் பரவியதால் ஜப்பானின் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021க்கு ஒத்திவைக்கப்பட்டன, மேலும் ஜூலை 23ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் நான்கு விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். கிரிஸ்புரே குழுமமும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியும் NOCSL-CRYSBRO Next Champ திட்டத்தின் கீழ் விளையாட்டுக்கான புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ள வீராங்கனையான மில்கா கெஹானி டி சில்வா இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார்.

NOCSL-CRYSBRO Next Champ திட்டத்தின் மூலம்; தேர்ந்தெடுக்கப்பட்ட 20 விளையாட்டு வீர வீராங்கனைகளில் நடன ஜிம்னாஸ்டிக் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மில்கா டி சில்வாவும் ஒருவராவார். பல சர்வதேச பட்டங்களை வென்றுள்ள மில்கா, இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் 10 விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று கனேடிய வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒலிம்பிக்கில் முதன்முறையாக குதிரையேற்றம் போட்டியில் பங்கேற்கும் மெடில்டா கார்ல்சன் ஏனைய வீராங்கனைகளுக்கும் வலுவான சவாலை அளிப்பார் என்று கூறப்படுகிறது. 73 கிலோ எடை பிரிவில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜூடோ போட்டியில் பங்குபற்றிய சாமர நுவான் தர்மவர்தன, உலகின் 16 சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை சாமராஅந்த எடை பிரிவில் மேலும் முன்னோக்கி வருவார் என்று நம்பப்படுகிறது. டிராக் மற்றும் ஃபீல்ட் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யுபுன் அபேகோன் 100 மீட்டர் போட்டியில் பங்குபற்றவுள்ளார், நிலானி ரத்நாயக்க 3000 மீட்டர் தடகள போட்டியில் பங்குபற்றவுள்ளார். 100 மீட்டர் நீச்சல் போட்டியில் மெத்யூ அபேசிங்கே மற்றும் அனிகா கபூர் ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கைக்காக பல சர்வதேச பதக்கங்களை வென்றுள்ள தெஹானி எகோடவெல, ஏர் ரைபிள் 0.117 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவுள்ளார், பேட்மிண்டன் போட்டியில் நிலுகா கருணாரத்ன இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் 2020ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளை வாழ்த்துதல் தெரிவித்த, கிரிஸ்புரோவின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோர்ஸ் செல்லார், ‘ஒலிம்பிக்கை பிரதிநிதித்துவப்படுத்துவது எளிதல்ல, ஏனெனில் இது உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். இதற்கு தேவையான சுத்திகரிப்பு மட்டத்தை அடைவதும் ஒரு சவால். இந்த ஆண்டு முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட மில்கா டி சில்வா, NOCSL-CRYSBRO Next Champ திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில் உதவித்தொகை பெற்றவர். பயிற்சி வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட சர்வதேச வெற்றியை நாடு அடையும் வரை அவருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மில்கா போன்ற 20 சர்வதேச வெற்றியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் NOCSL-CRYSBRO Next Champ திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, அதே திட்டத்தின் விரிவாக்கமாக உருவாக்கப்பட்ட அடுத்த ஒலிம்பிக் நம்பிக்கை திட்டம், தற்போது இந்த விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு உதவ இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள இலங்கையர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically integrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.


Share with your friend