கொழும்பு பங்குப்பரிவர்த்தனை CHEC கொழும்பு துறைமுக நகரத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது

Share with your friend

கொழும்பு சர்வதேச நிதியியல் மையத்தின் சிறப்பு முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி நாட்டின் எல்லைக்குள் பிராந்திய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிதி பரிவர்த்தனையை நிறுவுவதற்காகவும், இலங்கையின் மூலதனச் சந்தையை மேம்படுத்துவதற்காகவும்இ கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் CHEC கொழும்பு துறைமுக நகரம் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கொழும்பு துறைமுக நகரத்திற்குள் ஒரு சர்வதேச பல நாணய பரிவர்த்தனையை நிறுவுவதற்கான ஒரு கூட்டுப் பணியில் ஈடுபடும் நோக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த பரிவர்த்தனையானது பிராந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான நுழைவாயிலாக சேவையாற்றும் அதே நேரம் இலங்கை மற்றும் வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு வெளிநாட்டு நாணய முறிகள்; மற்றும் உரித்துடைமைகளுக்கான ஒரு பொருத்தமான தளத்தை வழங்குவததோடு, ஏனைய நிதியிடல் மற்றும் இடர் நேர்கை முகாமைத்துவ முதலீட்டு கருவிகளையும் அபிவிருத்தி செய்யம்

தெற்காசிய மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மூலதன திரட்டலுக்கான ஓர் மையமாக இலங்கையை நிலைநிறுத்தும் வகையில் நவீன உலகத் தரம் வாய்ந்த வியாபார பரிவர்த்தனையை நிறுவுவதில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பங்குதாரராக உலகளாவிய பங்குப்பரிவர்த்தனையை அடையாளம் கண்டு ஈர்க்கவும் CHEC துறைமுக நகரம் மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியவை தீவிரமாக ஒத்துழைக்கும் பரிவர்த்தனையில் திரவத்தன்மையை அதிகரித்தல் மற்றும் பரிவர்த்தனையில் புதிய பிணையங்கள் மற்றும் சேவைகளை தடையின்றி அறிமுகப்படுத்தகூடிய அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக, சிறப்பாக செயல்படும் சந்தைக்கு உகந்த சூழலை வழங்குவதற்காக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை முறைமைப்படுத்துநர்களுடன் இணைந்து செயல்படும்.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் தலைவர் திரு. துமித் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் ‘இலங்கையில் மூலதனச் சந்தையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு CHEC கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைந்து கொழும்பு பங்குப்பரிவர்த்தனை செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதானது முதல் படியாகும். இந்த முன்முயற்சியின் மூலம், ஒரு சர்வதேச பங்குச் சந்தையில் பங்குதாரராக இருக்க திட்டமிட்டுள்ளோம், இது மூலதனச் சந்தைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்து துறைமுக நகரத்தின் தேவைகளையும், பிராந்திய வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.’ என்று கூறினார்

இடமிருந்து வலமாக – டில்ஷான் வீரசேகர (கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்)இ நபிஹா முகமட், CFA (முகாமையாளர், தந்திரோபாயம் மற்றும் வணிக அபிவிருத்தி, CHEC கொழும்பு துறைமுக நகரம் )இ ஜயந்த பெர்னாண்டோ(கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்)இ துல்சி அலுவிஹர (உதவி முகாமைத்துவ பணிப்பாளர், CHEC கொழும்பு துறைமுக நகரம்)இ ஜியாங் ஹோலியாங் (முகாமைத்துவ பணிப்பாளர் CHEC கொழும்பு துறைமுக நகரம்)இ துமித் பெர்னாண்டோ (கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் தலைவர்)இ சுரேன் டி சில்வா (கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்)இ ரஜீவ பண்டாரநாயக்க (கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி)இ புரசிசி ஜினதாச(கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் தோற்றம் மற்றும் வழங்குநர் உறவுகள் பிரிவின் தலைவர்)இ ராதிகா எல்லேபொல (வதிவிட முகாமையாளர், விற்பனை மற்றும் முதலீட்டாளர் உறவுகள், CHEC கொழும்பு துறைமுக நகரம்)இ செமினி பிலபிட்டிய (கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி, CHEC கொழும்பு துறைமுக நகரம்)

CHEC கொழும்பு துறைமுக நகர முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஜியாங் ஹோலியாங் கருத்து தெரிவிக்கையில்’ துறைமுக நகரத்தில் ஒரு சர்வதேச பங்குப்பரிவர்த்தனையை நிறுவுவதில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சரியான உட்கட்டமைப்பு மற்றும் வணிக கொள்கைகளை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்இ துறைமுக நகர கொழும்பை பிராந்திய பட்டியலிடல்களுக்கான கவர்ச்சிகரமான இடமாக நிலைநிறுத்துவதில் நாங்கள் வெற்றி பெறுவோமஇ; இவை உலகமெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கான நுழைவாயிலாக இருக்கும்.’ என்று கூறினார்


Share with your friend