- மோதரை- பொல்வத்தை பிரதேசத்தில் 800 மீற்றர் வரையான கடற்கரைப் பகுதியை சுத்திகரிப்பதற்கு 150க்கும் அதிகமானோர் இணைவு
பாணந்துறை துறைமுகத்தை அண்மித்துக் காணப்படும் மோதரை – பொல்வத்தை கடற்கரைப் பகுதியை சுத்திகரிக்கும் பணிகளை சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) முன்னெடுத்திருந்தது. சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் 2022, செப்டெம்பர் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்துக்கு Biodiversity Sri Lanka (BSL) மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) ஆதரவளித்திருந்தது. அணியினர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இணைந்து 800 மீற்றர் வரையான கடற்கரைப் பகுதியை சுத்திகரிப்பு செய்திருந்தனர். எகொட உயன தெற்கு பகுதியிலிருந்து துறைமுகத்திலிருந்து தென்பக்கமாக இந்த கரையோரப்பகுதி அமைந்துள்ளது.
CDB இன் நிலைபேறாண்மை கொள்கைகளுக்கு பெறுமதி சேர்த்திடும் வகையில், Biodiversity Sri Lanka, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இதர ஒரே நோக்குடைய CDB போன்ற நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் ‘Life to our Beaches’ எனும் திட்டத்தின் அங்கமாக இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை அமைந்திருந்தது. பொது மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலும், சமூகத்துக்குமிடையே பங்காண்மையை ஏற்படுத்தி, இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையின் கரையோர சூழலைப் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுவது மாத்திரமன்றி, இந்தப் பிரதேசத்தை அண்மித்து வசிக்கும் குறைந்த வருமானமீட்டும் சமூகத்தாருக்கு நிலைபேறான வாழ்க்கை முறைமையை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது.
இந்தக் கரையோரப் பகுதியில் உயிரினங்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்படுவதுடன், பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி பெறப்படும் காலப்பகுதியில் இந்தப் பகுதிக்கு அடித்துவரப்படும் பிளாஸ்ரிக் அடங்கலான கழிவுகளினூடாக, கடல்வாழ் உயிரினங்களுக்கும், கரையோரப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பெருமளவில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. பாதுகாப்பு முயற்சிகளில் CDB அணியினர் ஈடுபட்டுள்ள நிலையில், கரையோர மாசடைவை கட்டுப்படுத்துவதற்கான தேவைகள் பற்றியும் அவர்கள் அறிந்துள்ளனர். பொறுப்பற்ற பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றல் மற்றும் உயிரியல் முறையில் உக்காத கழிவுகள் போன்றன கடல்வாழ் மற்றும் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கத்தை குறைத்துக் கொள்வது தொடர்பிலும் விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்.
CDB இன் பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன் விளக்கமளிக்கையில், நாட்டின் மொத்த சனத்தொகையின் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் இலங்கையின் மேல்/தென் கரையோரப் பகுதியில் வசிக்கின்றனர். இந்தக் கரையோரப் பகுதி பெருமளவில் மாசடைந்து காணப்படும் பிரதேசமாகும். எமது புவியை பராமரிப்பது தொடர்பில் நாம் நீண்ட காலமாக கவனம் செலுத்துவதுடன், எமது செயற்பாடுகள் இந்த நோக்கம், நடவடிக்கை மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் மீது பிரதிபலிப்பதாக அமைந்திருக்க வேண்டும். எமது கூட்டாண்மை வழிகாட்டலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாக அமைந்திருப்பதுடன், சமூக, பொருளாதார மற்றும் சூழல் ஆகிய மூன்று தூண்களான – மக்கள், புவி, இலாபம் ஆகியவற்றுக்கு நீடிப்பதாக அமைந்துள்ளது.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “எனவே எமது நோக்கமானது, புவியின் நிலைத்திருப்பு என்பதாகவும், அதில் எம்மைச்சூழ காணப்படும் கடல்களும் அடங்கியுள்ளன. இவை மனிதனுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் தங்கியிருப்பதற்கு மாத்திரம் உதவுவது மாத்திரமன்றி, கரையோரப் பகுதியில் வாழும் சமூகத்தாரின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளது. எமது சூழல் அர்ப்பணிப்பின் அங்கமாக எமது கரையோரங்களை சுத்திகரிப்பு செய்வது என்பது உள்ளக அம்சமாக அமைந்திருப்பதுடன், புவியின் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலை முன்நகர்த்துவதற்கும், இந்தப் புவியில் பாரியளவில் உயிரின நிலைத்திருப்புக்கு ஏதுவானதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.
தனது நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கு, அணி அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பை CDB எப்போதும் பெற்றுள்ளதுடன், பொறுப்பு வாய்ந்த வழிகாட்டல்களின் அடிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. ‘Engaging Mindful Team Members’ என்பதன் பிரகாரம், CDB அணி அங்கத்தவர்கள் மத்தியில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், கடப்பாடு மற்றும் உண்மைத்தன்மை நிலைபேறாண்மையை காண முடிகின்றது. இவர்கள் நிறுவனத்தின் காபன் வெளிப்பாட்டைக் குறைக்கும் பணிகளில் மாத்திரம் ஈடுபடாமல், சகல நிலைகளிலும் நிலைபேறாண்மை தொடர்பான தகவலை கொண்டு செல்லும் செயற்பாட்டாளர்களாக அமைந்துள்ளனர்.
Caption 1 – CDB’இன் ‘Life to our Beaches’ திட்டத்தின் பிரகாரம், கரையோர தூய்மைப்படுத்தல் நடவடிக்கையினூடாக சேகரித்திருந்த பெருமளவான கழிவுகளுடன் CDB அணியினர் காணப்படுகின்றனர்.
Caption 2 – சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் 2022 ஐ முன்னிட்டு, CDB அணியினர் மற்றும் அவர்கள் குடும்பத்தார் இணைந்து, மோதரை – பொல்வத்தை வரையான 800 மீற்றர் கரையோரப் பகுதியை சுத்திகரிப்பு செய்வதில் ஈடுபட்டுள்ளதை காணலாம்.
Caption 3 – இலங்கையின் அதிகளவில் மாசடைந்துள்ள கரையோரப் பகுதிகளை எதிர்கால சந்ததியினருக்காக பேணும் வகையில் சுத்திகரிக்கும் பணிகளில் CDB ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.