தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் வியாபாரச் சூழலில் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் வினைத்திறன் மற்றும் வியாபார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு ஆதரவளித்து வலுவூட்டும் விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
SLT-MOBITEL இனால் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு பரிபூரண சிக்கல்களில்லாத மற்றும் பாதுகாப்பான வியாபாரத் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் Business Voice, Business Internet, Business Applications, Business Solutions, Business TV மற்றும் Business Cloud ஆகியன அடங்கியுள்ளன. இவ்வாறு வழங்கப்படும் பரந்தளவு தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் Vobox, Voice Unlimited, Biztunes, SLTM Bizchat, SLTM e-Siphala, Business Internet Links, VPN Solutions, Akaza Solutions மற்றும் PABX Solutions போன்றன அடங்கியுள்ளன. இவற்றினூடாக சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. பரந்தளவு தீர்வுகள் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதுடன், இலகுவாக அணுகக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன.
இந்த ஊக்குவிப்புத் திட்டம் SLT-MOBITEL இன் 2022 ஆண்டுக்கான தொனிப்பொருளான #NoDreamTooBig என்பதற்கமைய காணப்படுவதுடன், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் கனவுகளை நனவாக்கிடும் வகையில், இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் தீர்வுகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
மேலும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் வகையில், SLT-MOBITEL இனால் பரந்தளவு விசேட பக்கேஜ்களுக்கு வெகுமதிகள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் வாடகை இல்லாத சலுகைகள், ஆரம்பக் கட்டண விலக்கழிப்புகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சலுகைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மீது பல்வேறு இதர விலைக்கழிவுகள் போன்றன அடங்கியுள்ளன.
உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் திகழ்வதை SLT-MOBITEL உணர்ந்துள்ளது. இந்த வியாபாரங்கள் தொடர்ச்சியாக தங்கியிருக்கக்கூடிய, பாதுகாப்பான இணைப்புத்திறன் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளை வழங்குவதுடன், அவை குறித்த வர்த்தகங்களின் வினைத்திறன் மற்றும் போட்டிகரத்தன்மைக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.
மேலும், டிஜிட்டல் யுகத்தில், சிறியளவு வியாபாரங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. பல சிறு வியாபாரங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட சேவை வழங்குநரைக் கொண்டிருப்பதற்கு சிறந்த கட்டமைப்பாக அமைந்துள்ளது. எந்தவொரு வியாபாரத்துக்கும் ஒன்றிணைக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்கான சிறந்த வியாபார பங்காளராக SLT-MOBITEL திகழ்வதுடன், சகல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கான பரிபூரண தீர்வுகள் வழங்குநராக திகழ்கின்றது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களிலிருந்து மீண்டெழுவதற்காக சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு SLT-MOBITEL ஆதரவளிப்பதுடன், வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு கட்டமைப்புகளை நிர்மாணித்து வழங்கி, பரந்தளவு வர்த்தகங்களுக்கு அவற்றின் வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு அவசியமான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வழங்குகின்றது.
மேலும், SLT-MOBITEL இனால் நாடளாவிய ரீதியில் தொழில்நுட்ப மற்றும் வியாபார ஆதரவளிப்பு அணிகள் பேணப்படுவதுடன், ஆலோசனை வழங்கல் மற்றும் கணக்கு முகாமைத்துவத்துக்கான அர்ப்பணிக்கப்பட்ட நிபுணத்துவ பொறியியலாளர்களையும் கொண்டு, உறுதியான சேவை வழங்குநர் பங்காண்மைகளை வழங்குகின்றது.சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான தீர்வுகள், சேவைகள் மற்றும் காணப்படும் விசேட கொடுப்பனவுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு, பிரத்தியேகமான ஹொட்லைன் இலக்கமான 0112389389 உடன் Whatsapp ஊடாக 0705004000 அல்லது மின்னஞ்சல் ஊடாக bizsolutions@slt.lk அல்லது https://bizleads.slt.lk எனும் இணையத்தளத்துக்கு கோரிக்கைகளை சமர்ப்பிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.