தனது முதலாவது அனுபவ மையத்தை திறந்து இலங்கையில் அறிமுகத்தை மேற்கொண்ட Ather Energy

Share with your friend

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான Ather Energy, தனது முதலாவது அனுபவ மையமான Ather Space காட்சியறையை கொழும்பு மருதானை வீதியில் உத்தியோகபூர்வமாகத் திறந்துள்ளது. இலங்கைச் சந்தையில் இந்நிறுவனம் நுழைந்ததைக் குறிக்கும் வகையில் புரட்சிகரமான Ather 450 ஸ்கூட்டரை இந்த மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் Ather Energy இன் தேசிய விநியோகஸ்தராக செயற்படும் Atman Group மற்றும் Sino Lanka Private Limited ஆகியவற்றின் கூட்டு முயற்சியான Evolution Auto (Pvt) Ltd. மூலம் இந்த அறிமுகம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் Ather Energy நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக அந்நிறுவனத்தின் பிரதம வணிக அதிகாரி Ravneet Phokela மற்றும் விற்பனை, சேவை வழங்கல், உதவி வழங்கல் தலைவர் Gurinder Singh கலந்து கொண்டனர். அத்துடன், Sino Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவர் Bob Kundanmal, Sino Lanka Private Limited பணிப்பாளர் Dhiren Kundanmal, Atman குழுமத்தின் பணிப்பாளர்களான நாதன் சிவஞானநாதன், ரஞ்சித் லியோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Ather 450 மாதிரிகள் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதோடு, இணையற்ற சவாரி அனுபவத்தை வழங்குகிறது. வலுவான மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்கூட்டர், விரைவாக  உயர் வேகத்தை அடைவதோடு, மணித்தியாலத்திற்கு 90 கி.மீ. வரையான வேகத்தை அடைகிறது. நிகழ்நேர பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் வழிகாட்டல் அம்சங்களைக் கொண்ட ஆற்றல்மிக்க டேஷ்போர்ட், இருக்கைக்கு அடியிலான விரிவான சேமிப்பக பகுதியையும், மீளுருவாக்க பிரேக், 60 நிமிடங்களில் 80% சார்ஜ் செய்யக்கூடிய வேகமான சார்ஜிங் திறன் ஆகியன இதன் முக்கிய அம்சங்களாகும்.

கட்டுப்படியான விலையில், நம்பகமான மின்சார வாகனங்கள் மூலம் இலங்கையில் நிலைபேறான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியை Ather 450 இன் அறிமுகம் பிரதிபலிக்கிறது. Evolution Auto (Pvt) Ltd. நிறுவனமானது, நாடு முழுவதும் Ather Grid விரைவு சார்ஜிங் நிலையங்களின் வலையமைப்பை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களை அனைவரும் இலகுவாக அணுகக்கூடியதாகவும் வசதியானதாகவும் இது மாற்றும்.

இந்நிகழ்வில் Ather Energy நிறுவனத்தின் பிரதம வணிக அதிகாரி Ravneet Phokela தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகையில், “எமது முதல் அனுபவ மையத்தை இலங்கையில் திறப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இங்கு நாம் Ather 450X உடன் எமது விற்பனையை ஆரம்பிக்கிறோம். 450X ஆனது, செயற்றிறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது என நாம் நம்புகிறோம். அதன் வேக ஆர்முடுக்கம், இலகுவாக இயக்கக் கூடிய திறன் மற்றும் பயணத்தின் போதான கையாளுகை ஆகிய அம்சங்கள், நகர பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதைகளில் எளிதாக பயணிக்க அனுமதிக்கிறது. இலங்கையில் மின்சார வாகன (EV) தொழிற்துறையானது, இன்னும் ஆரம்ப மட்டத்திலேயே உள்ளது. அத்துடன், இத்தொழில்துறை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருவதால் அதன் பயணத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கைச் சந்தையில் மின்சார வாகனங்களின் அதிகரிப்பு மூலமான மாற்றத்தை கருத்தில் கொண்டு, இங்குள்ள எமது வாடிக்கையாளர்களிடமிருந்து சாதகமான பதிலை நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.

நாட்டில் நிலைபேறான போக்குவரத்தை செயற்படுத்துவதற்கான Evolution Auto (Pvt) Ltd. நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஸஹ்ரான் ஸியாவுதீன் கருத்து வெளியிடுகையில், “Ather Energy போன்ற தொழில்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து உலகளாவிய தரத்திலான மின்சார ஸ்கூட்டர் வகைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மையானது, நிலைபேறான போக்குவரத்து மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் எமது தூர நோக்கத்தை பிரதிபலிக்கிறது.” என்றார்.

பிரத்தியேக சலுகைகள்

Evolution Auto (Pvt) Ltd இல் Ather 450X மாதிரிகளும் அதன் விலைகளும்:

– Ather 450X HR: விலை ரூ. 899,900

– Ather 450X LR: விலை ரூ. 849,900

இந்த இரண்டு மின்சார ஸ்கூட்டர்களும் பிரத்தியேக குத்தகைப் பொதிகளில் கிடைக்கின்றன. அதன் மாதத் தவணைகள் ரூ. 25,220 இலிருந்து ஆரம்பமாகின்றன (*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்).

அது மாத்திரமன்றி, மட்டுப்படுத்தப்பட்ட காலம் வரை (2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31), Evolution Auto (Pvt) Ltd. நிறுவனம் இந்த இரண்டு Ather மின்சார ஸ்கூட்டர்களுக்கும் பிரத்தியேகமான 10 வருட மின்கல உத்தரவாதத்தை வழங்குகிறது:

Ather Energy பற்றி

Ather Energy ஆனது, IIT Madras முன்னாள் மாணவர்களான Tarun Sanjay Mehta மற்றும் Swapnil Babanlal Jain ஆகியோரால் 2013 இல் நிறுவப்பட்ட ஒரு மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாகும். 2018 ஆம் ஆண்டில், Ather தனது முதல் மின்சார ஸ்கூட்டரான Ather 450 ஐ அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் Ather 450X ஐ அறிமுகப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில் 450S மற்றும் 450X ஆகிய மேலும் சில வகைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது 2024 இல் Ather இன் முதலாவது குடும்ப ஸ்கூட்டரான Rizta வை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் வடிவமைத்து கட்டமைக்கப்பட்ட Ather Grid எனும் பொதுமக்கள் சார்ஜிங் வலையமைப்பையும் Ather நிறுவியுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1,973 விரைவு சார்ஜர் தொகுதிகளை Ather நிறுவியுள்ளதோடு, இந்தியாவில் 208 அனுபவ மையங்களையும், நேபாளத்தில் 3 மையங்களையும் இயக்குகிறது. இந்நிறுவனம் 232 இந்திய மற்றும் சர்வதேச காப்புரிமை விண்ணப்பங்கள், 300 இற்கும் அதிக வர்த்தகமுத்திரைகள் மற்றும் 200 இற்கும் அதிக வடிவமைப்புக்கான பதிவுகளை கொண்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு உயர் ரக பிரீமியம் உரிமைத்துவத்திற்கான அனுபவத்தை அது வழங்குகிறது.

Evolution Auto (Pvt) Ltd. பற்றி

Evolution Auto ஆனது, Atman குழுமம் மற்றும் Sino Lanka Private Limited ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவான ஒரு நிறுவனமாகும். மேம்பட்ட, சூழல் நட்பு கொண்ட மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் போக்குவரத்தை மாற்றியமைக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

Evolution Auto நிறுவனத்தின் தூர நோக்கானது, நாட்டின் காபன் வெளியீட்டை குறைக்கும் அதேவேளை, நிலைபேறான போக்குவரத்தை மேம்படுத்துவதாகும். இந்நிறுவனம் பயணிகள் மற்றும் வணிக மின்சார வாகனங்கள் ஆகிய இரு வகைக்கும் எதிர்காலத்தில் கூட்டாண்மைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆசியாவில் விருந்தோம்பல், நீர்வளர்ப்பு, சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், Evolution குழுமத்தின் நிறுவுனர்கள் சிறந்து விளங்குகின்றனர். விலைமதிக்க முடியாத நிபுணத்துவம் மற்றும் தூரநோக்கை மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற மதிப்பிற்குரிய சபை உறுப்பினர்கள் இந்நிறுவனத்திற்கு கொண்டு வருகிறார்கள். அதன் மூலம், சமூகத்தில் சாதகமான தாக்கத்துடன் கூடிய உயர் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கவனம் செலுத்த அவர்கள் உதவுகிறார்கள்.

புத்தாக்கமான தயாரிப்பு சலுகைகள் மற்றும் வலுவான உட்கட்டமைப்பு திட்டங்களுடன், இலங்கையின் மின்சார வாகன சந்தையில் Ather Energy and Evolution Auto (Pvt) Ltd புரட்சியை ஏற்படுத்த உள்ளது. நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்புடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், பிராந்தியத்தின் பசுமையான, மிகவும் திறமையான போக்குவரத்து தீர்வுகளை நோக்கி மாறுவதை Ather நோக்கமாகக் கொண்டுள்ளது.