இலங்கையில் சைனேஜ் துறையின் அடையாளமாக திகழும் Thunder & Neon (Pvt) Ltd, ISO 9001:2015 தர மேலாண்மைச் சான்றிதழைப் பெற்ற நாட்டின் முதல் மற்றும் ஒரே சைனேஜ் உற்பத்தியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள்துறை செயல்முறைகள் கடுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின் வழங்கப்பட்ட இந்த சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்தின் தரம் உலகத் தரநிலைகளுக்கு இணையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.


35 ஆண்டுகளாக துறையில் அனுபவம் குவித்துள்ள Thunder & Neon, நவீன தொழில்நுட்பங்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் செயல்திறன் மேம்பாட்டிற்கான வலுவான உறுதிப்பாட்டின் மூலம், இலங்கையின் முன்னணி சைனேஜ் மற்றும் விளம்பரத் தீர்வு வழங்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவு முழுவதும் காணப்படும் சைனேஜ்கள் மற்றும் டிஜிட்டல் காட்சிகள் உட்பட 5000ற்கு மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்காக Thunder & Neon உடன் கூட்டு சேர்ந்துள்ள முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்கள் இதற்கு சாட்சியாகும். மூலோபாய முதலீடுகள் மூலம் நாடாளாவியரீதியில் கிளை வலையமைப்பு உருவாக்கப்பட்டதுடன், மாலைத்தீவில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடுகள் மூலம், இந்நிறுவனம் வெற்றிகரமாக பன்முகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில், Thunder & Neon துபாயில் அதிகாரப்பூர்வமாக செயல்பாடுகளை ஆரம்பித்ததுடன் கடுமையான போட்டியுடன் கூடிய சந்தையிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.
இந்த நிறுவனமானது 1991 ஆம் ஆண்டு இலங்கையின் புகழ்பெற்ற தொழிலதிபர் லலித் லோகுகே அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அவர் இலங்கையில் அறிவிப்புப் பலகைகள் மற்றும் காட்சித் தொடர்பு நிலப்பரப்பை மாற்றுவதற்கான துணிச்சலான தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட்டார். உலகம் முழுவதும் பயணம் செய்து சிறந்த நடைமுறைகளை கற்ற அவர், இலங்கைக்கு திரும்பிய பின் நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, நீடித்த தரம் வாய்ந்த சைனேஜ் தயாரிக்கத் தொடங்கினார். இன்று, Thunder & Neon தனது சேவைகளை சைனேஜ், டிஜிட்டல் மற்றும் விளக்குப் பலகைகள், 3D எழுத்துருக்கள், முழுமையான பிராண்டிங் மற்றும் வடிவமைப்பு தீர்வுகள், LED மற்றும் நீயான் லைட்டிங் அமைப்புகள் ஆகியவற்றிற்கு விரிவுபடுத்தியுள்ளது.


“ISO 9001:2015 சான்றிதழைப் பெறுவது Thunder & Neon நிறுவனத்திற்கு ஒரு பெருமைமிக்க மைல்கல் சாதனை ஆகும். விதிவிலக்கான தரத்தை வழங்குவதற்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்குமான எமது உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது,” என்று Thunder & Neon (Pvt) Ltd இன் தற்போதைய தலைவர் லோகுகே குறிப்பிட்டார். ” இது வெறும் சின்னமல்ல—எந்த திட்டத்தையும் உலகத் தரத்துக்குரிய தரநிலைகளுடன் நிறைவேற்றுவோம் என்ற வாடிக்கையாளர்களுக்கான எங்கள் வாக்குறுதி,” எனத் தலைவர் லலித் லோகுகே தெரிவித்தார்”
Thunder & Neon க்கு கிடைத்த ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளின் தொடர்ச்சியாக இந்த ISO சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அதில், தேசிய வர்த்தக சபையினால் வழங்கப்பட்ட National Business Excellence Award, CIPM வழங்கிய Best Management Practice Award, Pinnacle Awards மற்றும் Asia Miracle Awards வழங்கிய Best Signage Company Award, Business Solution Group வழங்கிய Best Entrepreneur Award மற்றும் சர்வதேச BID Quality Award ஆகியவை அடங்கும்.
ISO சான்றிதழைப் பெறுவது, நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் Thunder & Neon நிறுவனத்தின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது; இந்த மாற்றத்தை முன்னெடுத்தவர் மேலாண்மை இயக்குநர் மிலிந்த லோகுகே ஆவார். 2014 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தில் பெரிய மாற்றங்களை வழிநடத்தியுள்ளார். மென்பொருள் அமைப்புகள் மற்றும் ERP மூலம், உற்பத்தி செயல்முறைகளில் 60% க்கும் மேற்பட்டவை தானியங்கியாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய லேசர் மற்றும் CNC தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சைனேஜ் தயாரிப்புகளின் நீடித்த தன்மையும் தரமும் மேம்பட்டு, போட்டியாளர்களை விட நிறுவனத்தைக் குறிப்பிடத்தக்க முறையில் முன்னிலைப்படுத்தியுள்ளது.
“பிராந்திய அளவில் எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நிலையில், இந்த ISO சான்றிதழ் எங்கள் துறையின் முன்னணித் தலைவராகிய நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. தர உறுதியும் செயல்திறன் மேம்பாடும் எங்களுக்கு முக்கியம், மற்றும் வாடிக்கையாளர்கள் சான்றளிக்கப்பட்ட சேவையாளர் என்ற நம்பிக்கையை ஆழமாக மதிக்கிறார்கள்,” என மிலிந்த லோகுகே, மேலாண்மை இயக்குநர், தெரிவித்தார்.Thunder & Neon நிறுவனமானது ISO சான்றிதழுடன் இணைந்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் விநியோக செயல்முறைகளில் மேம்பட்ட தரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது தொடர்ச்சியான பணியாளர் பயிற்சியும் செயல்திறன் மேம்பாடும், இந்த தர மேலாண்மையின் முக்கிய தூண்களாக உள்ளன.