நன்கொடையாளர்களுடன் இணைந்து ChildFund Sri Lanka நிறுவனம் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் 40 படுக்கைகளைக் கொண்ட கோவிட் சிகிச்சை நிலையத்தை நிறுவியுள்ளது

Share with your friend

ChildFun இன் 1:1 பொருத்தும் திட்டத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்ட  அனைத்து நன்கொடைகளும் இரட்டிப்பாகின

கொவிட்-19 ற்கு எதிரான போராட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ChildFund Sri Lanka நிறுவனம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் 40 படுக்கைகளுடன் கூடிய கோவிட் -19 தற்காலிக சிகிச்சை நிலையமொன்றை நிறுவுவதற்கு உதவியுள்ளது. 

 இந்த வசதியானது 2021 ஓகஸ்ட் 10ஆம் திகதி பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டதுடன்,  கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக  வைத்தியசாலையை நாடி வரும் கோவிட் -19 நோயாளர்களுக்காக இது சேவையாற்றுகிறது.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர், ஸ்ரீலங்கா இராணுவம், ChildFund கொரியா மற்றும் VOICE Area Federation போன்ற பல்வேறு பங்குதாரர்கள் இந்தத் திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியடைவதற்கு உதவியுள்ளனர். கட்டடத்தின் மறுசீரமைப்பு மற்றும் குறித்த வளாகத்தை புனரமைத்து, கட்டடத்தின் பகுதிகளைப் பிரிப்பதற்கும், உள்ளக நோயாளர்களுக்கான 40 படுக்கைகள் மற்றும் தளபாட வசதிகள், தொடர்பற்ற விதத்தில் நோயளிகளைக் கண்காணிக்க சிசிரிவி கண்காணிப்பு முறை மற்றும் டோபிங் பகுதிக்கான கருவிகள் என்பவற்றை அமைப்பதற்கு இந்தப் பங்குதாரர்கள் உதவியளித்தனர்.

தொற்றுநோய்களின் போது தேசத்திற்கு உறுதியான உதவியை வழங்கும்  ChildFund Sri Lanka நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்பதுடன், கோவிட் – 19 இனால் உருவாகும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ‘Sri Lanka Gives Back’ நிதி சேகரிப்புத் திட்டத்துக்கு இணங்கியதாக அமைந்திருப்பதுடன், இதனை வலுப்படுத்த பங்குதாரர்களின் பங்களிப்பையும் ஈடுபடுத்துகிறது. கோவிட் -19 சிகிச்சை நிலையத்தை வெற்றிகரமாக அமைப்பதற்கான இந்த பங்களிப்பானது கிடைக்கும் அனைத்து நன்கொடைக்கும் அதே அளவை வழங்கும் ChildFund நிறுவனத்தின் 1:1 பொருத்தும் திட்டமாகும்.

ChildFund Sri Lanka நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பணிப்பாளர் டினந்த தம்பவித குறிப்பிடுகையில் ” கோவிட்-19ற்கு எதிரான போராட்டம் மற்றும் தொற்று நோயை ஒழிப்பதற்கான தரமான சிகிச்சை வசதிகளின் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர்ந்துகொண்டிருப்பதுடன், ChildFun நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட’Sri Lanka Gives Back’ நிதி சேகரிப்புத் திட்டத்தின் பங்குதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்குக்கு நாம் எமது உண்மையான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பணமாக அல்லது மருத்துவ உபகரணங்களாகக் கிடைக்கப்பெறும் அனைத்து நன்கொடைகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்ப்பாதை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்” என்றார்.

‘Sri Lanka Gives Back’  ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்களிப்புச் செலுத்திய பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் இத்திட்டம் 4.5 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. சிகிச்சை நிலையத்தில் மல்டிபரா மொனிட்டரை நிறுவுவதற்கான நிதியை ஜோன் கீல்ஸ் பவுன்டேஷன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் வழங்கியிருந்தனர். 

இந்த ஒத்துழைப்புத் தொடர்பில் ஜோன் கீல்ஸ் பவுன்டேஷனின்  செயற்பாட்டுத் தலைவர் காமெலைன் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், ”ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் பவுன்டேஷன் ஆகியவற்றின் சமூகக் கூட்டுப்பொறுப்புத் திட்டம் கோவிட் -19 தெற்றுநோய் சூழலில் பிரதான நிறுவனங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி வருவதுடன், களத்தின் முன்னணியில் நின்று சேவை வழங்கி வருபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு உதவிவருகிறது. இந்த முக்கியமான முயற்சியில் குறிப்பாக புதுக்குடியிருப்பில் சமீபத்தில் முடிவடைந்த 7 ஆண்டுகள் கிராம தத்தெடுப்புத் திட்டத்தின் பின்னணியில் முதன்முறையாக ChildFun Sri Lanka நிறுவனம் இணைந்துகொண்டிருப்பதுடன், பரஸ்பர விருப்பத்துடன் எதிர்காலத்தில் இந்த அமைப்புடன் கூட்டாண்மையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ரொட்டறி கழகம் நிதி சேகரிப்பு மற்றும் நன்கொடையின் ஊடாக இந்த மையத்தை அமைப்பதற்கு உதவியள்ளது. தமது ஈடுபாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹசிதி சமரசிங்க குறிப்பிடுகையில், ” கோவிட்-19 தொற்றுநோய் நிச்சயமற்ற தன்மையையும் கஷ்டத்தையும் பரப்புகையில், ரொட்டறிக்கழகத்தினராகிய நாம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் ஈடுபட்டுள்ளோம். நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை என்பது ரொட்டறியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என்பதுடன், எமது நிதி சேகரிப்புத் திட்டத்தின் ஊடாக ChildFund நிறுவனத்தின் சிகிச்சை நிலையத் திட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய முடிந்தது” என்றார். 

உலகின் பாரிய சேவை வழங்கும் நிறுவனமான சர்வதேச லயன்ஸ் கழகத்தின் சர்வதேச இளைஞர் இயக்கத்தின் ஒரு பகுதியான கொழும்பு புறக்கோட்டை லியோ கழகம், சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் விருப்பம் கொண்டுள்ள இளம் துறைசார் நிபுணர்களைக் கொண்ட Global Shapers Kandy Hub, டிஜிட்டல் கற்றலுக்கான உள்ளடக்கங்கள், மென்பொருள் தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்துக்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தீர்வு வழங்குனரான Headstart Pvt. Ltd ஆகினவும் இந்த சிகிச்சை நிலையம் அமைப்பதற்குப் பங்களிப்புச் செலுத்திய ஏனைய பங்குதாரர்களாகும். 

சிகிச்சை மையத்திற்கான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு பொதவான நன்கொடையாளர்களும் பெருமளவில் பங்களித்தனர்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், ChildFund Sri Lanka எதிர்காலத்தில் தேவை அடிப்படையில் மேலும் செயல்பாடுகளை ஆதரித்து, தேசத்திற்கும் இந்த முன்னோடியில்லாத சுகாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் தொடர்ந்து உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Share with your friend