நமது கடல்சார் வளங்கள் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பான “உலகளாவிய சமுத்திர உடன்படிக்கை” (Global Ocean Treaty) அங்கீகரிப்பதற்கு அவசியமான விடயங்களை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன் சமர்ப்பிக்கப்படும் பிரசித்தமான கடிதம்.

Share with your friend

மதிப்புக்குரிய ஜனாதிபதி, ரனில் விக்கிரமசிங்க அவர்களுக்கு,

தேசிய நீதிமன்ற வரம்புக்கு அப்பால் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய ஒப்பந்தம் எனப்படும் BBNJ (Biodiversity Beyond National Jurisdiction) ஒப்பந்தம் எனவும் அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் “உலகளாவிய சமுத்திர உடன்படிக்கை” இனை அங்கீகரிப்பது பற்றி பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியது.

கடல் இவ்வுலகின் வானிலையினை கட்டுப்படுத்தல், பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவையும், வாழ்வாதாரத்தையும் வழங்குதல் என்பவற்றுடன் சேர்த்து உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் எண்ணிலடங்காத உயிரினங்களுக்கு தங்குமிடமாகவும் செயற்படுகின்றது. எனினும், பல தசாப்தங்களாக தொழில்மயமாக்கப்பட்டிருக்கும் மீன் பிடித் தொழில், கடல் மாசுபாடு, கச்சா எண்ணெய் அகழ்வு மற்றும் மேலும் பல நடவடிக்கைகள் கடல்சார் சூழலை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட செயல்திறனுடன் செயற்பட்டு வரும் ஒழுங்குமுறை நிறுவனங்கள் சிலவற்றின் மூலமாக உலகளாவிய கடல்சார் சூழல் மோசமாக நிர்வகிக்கப்பட்டுள்ளது.

இவ் உலகளாவிய பொதுச் சொத்தை செயல்திறன் மிக்க விதத்தில் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, தெளிவான சட்டதிட்டங்கள் இல்லாமை எனும் விடயங்களாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளினாலும், கடல்சார் சூழல் மேலும் சிக்கலான வளத் துஷ்பிரயோத்திற்கும், மாசுபடுத்தலுக்கும் ஆளாகியுள்ளது. எவ்வாறிருப்பினும், 20223 மார்ச் மாதத்தில், பெருங் கடலை பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “உலகளாவிய சமுத்திர உடன்படிக்கை” பற்றிய ஒப்பந்தத்திற்கு வந்ததுடன், அவ் வருடத்தின் ஜுன் மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 2023 செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தில் கையொப்பமிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு மோதல் சூழ்நிலைகள் காரணமாக சர்வதேச உறவுகள் மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்டிருந்த இவ்வாறு ஓர் சூழ்நிலையில், இவ் ஒப்பந்தம் பலதரப்புவாதத்தின் ஓர் அரிய வெற்றியை குறித்து காட்டுகிறது. இயற்கை சூழலினை பாதுகாக்கும் செயற்பாட்டிற்காக இவ்வுலகிற்கு மேலும் ஒன்றுபட முடியும் என்பதையும், இவ்வுலகை நாம் எல்லோரும் வாழக் கூடிய முறையில் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதையும் இது நிரூபிக்கின்றது.

ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்காக திறக்கப்பட்ட நேரம் முதல் இது வரை இச்செயற்பாட்டிற்கான உலகளாவிய அரசியல் ஆதரவை காட்டும் விதத்தில் 92 நாடுகள் கையொப்பமிட்டு உள்ளதுடன், 8 நாடுகள் இதனை அங்கீகரித்துள்ளது. கவலைக்கிடமான விடயம் என்னவெனின், இலங்கை இன்னும் இதன் ஓர் பாகமாக சேர்ந்து கொள்ளாமை ஆகும்.

ஆகக் குறைந்தது 60 நாடுகள் அங்கீகரித்ததன் பின்னர், இவ் “உலகளாவிய சமுத்திர உடன்படிக்கை” மூலம் கடலை பாதிக்கும் பல்வேறுபட்ட நிர்வாக தடைகள் நிவர்த்தி செய்யப்பட்டு,

தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பால் இருக்கும் பல்லுயிர் நிறைந்த பகுதிகளை முறையாக பாதுகாப்பதற்கான ஓர் திட்டத்தையும் வழங்கும். குறிப்பாக, இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததன் பின்னர், அதன் மூலம் பெருங் கடலில் கடல் சரணாலயங்களை உருவாக்குவதற்கான சட்ட வரையறை ஒன்றும், தெளிவான திட்டமொன்றும் உருவாக்கப்படும். செயல்திறன் மிக்க விதத்தில் பாதுகாக்கப்பட்டு, திறன்பட நிர்வகித்தால், 2022 ஆம் ஆண்டு குன்மிங் – மொன்ட்ரியல் உலகளாவிய பன்முகத்தன்மை கட்டமைப்பின் (Kunming-Montreal Global Biodiversity Framework) கீழ் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டில; (CBD-Convention on Biological Diversity) ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் உலகளாவிய அர்ப்பணிப்பான, 2030 ஆம் ஆண்டாகும் போது உலகின் கடல்களில் 30% த்தினை பாதுகாப்பதற்கு இந்த செயன்முறை உதவும்.

தற்பொழுது பெருங்கடல்களில் 1% ற்கும் குறைந்த ஓர் பரப்பளவே முறையாக பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயிரியல் பன்முகத்தன்மையினை பாதுகாப்பதற்கும், திடீர் காலநிலை மாற்றங்களை குறைப்பதற்கும் 2030 ஆம் ஆண்டாகும் போது உலகின் கடல்களில் 30% த்தினை பாதுகாப்பது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். உலகளாவிய மக்களுக்கு கடலின் “30X30” குறிக்கோளை நெருங்குவதற்கு ஓர் எதிர்பார்ப்பு உருவாக வேண்டும் எனின், 2025 ஆம் ஆண்டு பிரான்ஸின் (France) நயிஸ் (Nice) இல் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சமுத்திர மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தை 60 நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் நாடுகள் தாமதமாகும் அளவிற்கு இணையாக கடல் அன்றாடம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் இன்னும் சிக்கலான நிலைக்கு திரும்பக் கூடும்.

அதனால், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை உலகளாவிய சமுத்திர உடன்படிக்கையை முறைப்படி கையொப்பமிடல் மற்றும் அதனை அங்கீகரிப்பது பற்றி பரிசீலிக்கப்பட வேண்டியதை உங்களது சுற்றுச்சூழல் மற்றும் வெளிநாட்டு உறவு நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஓர் விடயமாக ஆக்கிக் கொள்ளுமாறு நாம் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

ஐக்கிய நாடுகளின் சமுத்திர ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர்:

· தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பால் இருக்கும் பெருங் கடலில் கடல் சரணாலயங்களை உருவாக்குவதற்கான சட்ட வரையறை ஒன்றும், தெளிவான திட்டமொன்றும் உருவாக்குதல்.

• ஆழ் கடல்கள் மற்றும் கடற்பரப்பில் இருக்கும் கடல் மரபணு வளங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் நன்மைகளை சாதாரண மற்றும் சமமான முறையில் பிரித்து எடுத்துக் கொள்வதை உறுதிப் படுத்தல்.

· சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டின் மூலம் ஆழ் கடலின் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வழங்குதல்.

ஓப்பந்தத்தை அமுல் செய்யும் போது நாடுகளுக்கு, அதன் கடல்வள பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு உதவும் கடல்சார் தொழில்நுட்பங்களை மேலும் விருத்தி செய்தல், அதன் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் தொழில்நுட்பத்தை கைமாற்றிக் கொள்ளுதல் மற்றும் சான்றுப்படுத்துதல் ஆகிய செயல்களுக்காக நிதியளிக்கும் வேலைக்காக வேண்டி ஒரு நிதி பொறிமுறை நிருவப்படும்.

கடல் பாதுகாப்பு பிரதேசங்கள்/ கடல் சரணாலயங்கள் மூலமாக இவ் விசேட இடங்கள் அனைத்து வகையான நாசகார செயல்களில் இருந்தும் தவிர்ந்து செயற்பட்டுக் கொண்டு செல்வதற்கு வழிவகுப்பதனால் அவை கடல்கள் தற்பொழுது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு ஓர் பிரதான தீர்வாகும். இக் கடல் சரணாலயங்கள் மூலம் அதிகளவிலான நீல காபன் சேமிப்புகள் பாதுகாக்கப்படுவதுடன், கடல்வார் உயிரிணங்கள் மற்றும் அதன் வாசஸ்தலங்கள் பழைய நிலைமைக்கு வருவதற்கு மற்றும் திடமான வாழ்வாதாரத்தை நடத்திச் செல்லக் கூடிய ஓர் நிலைமையை உருவாக்கும். அதன் மூலம் கரையோர மக்களுக்கு மற்றும்

வளமான கடலின் மூலம் தமது வாழ்வில் அதிக பயன்களை பெற்றுக் கொள்ளும்

சிறியளவிலான மீனவர்களுக்கும் கணிசமான அளவு நன்மைகள் கிடைக்கும்.

இன்று வரையில் 92 நாடுகள் இவ் உலகளாவிய சமுத்திர உடன்படிக்கைக்கு கைச்சாத்திட்டுள்ளது. ஆவற்றில் 8 நாடுகள் (பலாவு, சிலீ, பெலீஸ், சீசெல்ஸ், மொனாக்கோ, மொரிசியஸ், மைக்ரோசீனியா, கியுபா) தமது பரிசீலிக்கப்பட்ட ஒப்பந்தங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்துள்ளன.

ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான போட்டி இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய சமுத்திர பாதுகாப்பின் ஓர் முன்னோடியாக இலங்கையை நிலைப்படுத்துவதற்கான வாய்ப்பு தற்பொழுது உங்களுக்கு கிடைத்துள்ளது. அதனால், 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால், இலங்கை மூலம் பெருங்கடலை பாதுகாத்தல் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கு, ஐனாதிபதி வேட்பாளர் ஒருவர் என்ற முறையில் பொதுக் கடமையை நிறைவேற்றுமாறு உங்களிடம் மரியாதையாக கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

ஜேஹான் கணகரத்ன,

இயக்குநர் குழு உறுப்பினர்,

கிரீன்பீஸ் – தெற்காசிய காரியாலயம்

* குறிப்பு: இந்த கடிதம் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் 37 க்கும் ஏற்பாடு சென்றடைய செய்யப்பட்டுள்ளது.


Share with your friend