நாட்டின் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் திறனை மேம்படுத்தும் நெஸ்லே லங்காவின் நடவடிக்கைகளுக்கு SHMA ஆதரவு

Share with your friend

உலகின் பழைமையான மற்றும் முதல் ஹோட்டல் முகாமைத்துவ பல்கலைக்கழகமான University École hôtelière de Lausanne இன் EHL நிபுணத்துவ டிப்ளோமா கற்கையினூடாக தொழிற்பயிற்சியை (VET) வழங்குவதற்காக ஏ பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற பயிலல் நிலையமான சுவிஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட் அகடமி (SHMA), நெஸ்லே லங்கா பிஎல்சியுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. துறையின் வளர்ந்து வரும் இளம் வயதினரின் திறன்களை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும் நடவடிக்கைகளுக்கமைய இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.

இந்த உடன்படிக்கை பவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் ப்லாசர் மற்றும் நெஸ்லே லங்கா பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளரான ஜேசன் அவன்சினா ஆகியோரிடையே 2022 டிசம்பர் 12ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் பவர் மற்றும் நெஸ்லே லங்கா நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்ததுடன், இலங்கை சமையல்கலை நிபுணர்கள் குழாம் மற்றும் இலங்கை விருந்தோம்பல் பட்டதாரிகள் சம்மேளனம் (SLHGA) ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர்.

உலகின் மாபெரும் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வதுடன், இலங்கையில் 115 வருடங்களுக்கு மேலாக, ஆரோக்கியமான குடும்பங்களை பேணுவதற்காக ஒப்பற்ற அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருவதுடன், தொழிற்துறையைச் சேர்ந்த EHL நிபுணத்துவ டிப்ளோமா தொழிற்பயிற்சி பங்குபற்றுநர்களுக்கு தமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த விருந்தோம்பல் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கான தகைமைகளை வழங்குவதிலும் முழு அனுசரணையை வழங்கி பங்களிப்பு வழங்க முன்வந்திருந்தது.

இந்த தனியார் துறை ஒன்றிணைவின் பிரதான எதிர்பார்ப்பானது, EHL நிபுணத்துவ டிப்ளோமா தொழிற்பயிற்சியினூடாக உலகத் தரமான கல்வியை பலருக்கு வழங்கி, அவர்களின் அனுபவத்தை மேலும் கட்டியெழுப்புவதாகும். இந்தக் கற்கையில் பதிவு செய்து கொண்டு இணைத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஜனவரி 9 ஆம் திகதி புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. டிப்ளோமா கற்கைகளை SHMA ஐச் சேர்ந்த EHL சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களாலும், துறைசார் அனுபவமிக்க நிபுணர்களாலும் முன்னெடுக்கப்படும்.

ப்லாசர் கருத்துத் தெரிவிக்கையில், “நெஸ்லே லங்காவுடனான இந்தப் பங்காண்மை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். உலகின் முன்னணி விருந்தோம்பல் கற்கைகளை வழங்குநருடன் இணைந்து, நாட்டின் துறைசார்ந்தவர்களின் அறிவையும் திறனையும் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல கைகோர்ப்புகளின் முதல் கட்டமாக இது அமைந்திருப்பதுடன், எமது பரந்த மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த விருந்தோம்பல் நியமங்களை உலகுக்கு வெளிக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாறான திட்டங்களில் அங்கம் பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

பங்குபற்றுநர்களின் முன்னைய துறைசார் அனுபவங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் அடிப்படை மட்ட கற்கையில் பங்கேற்பதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், உயர் டிப்ளோமா கற்கையை தொடர்ந்து, இடைப்பட்ட நிலைக்கு நேரடியாக இணைந்து கொள்வதற்கு உதவியிருந்ததுடன், தற்போதைய பணியிடத்தில் அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுவதுடன், அதனை SHMA கண்காணித்து மதிப்பாய்வுகளை மேற்கொள்ளும்.

இந்தத் தொழிற்பயிற்சியில் வாராந்தம் 1 நாள் பிரயோக மற்றும் கோட்பாட்டு அடிப்படையிலான பயிலல் மேற்கொள்ளப்படுவதுடன், பரிபூரணமான 5 நாள் தொழில்நிலை பயிற்சி அடங்கியிருக்கும். EHL நிபுணத்துவ டிப்ளோமா தொழிற்பயிற்சியினூடாக தொழில்சார் பயிற்சி மாதிரியை இலங்கையில் வழங்கும் முதலாவது விருந்தோம்பல் முகாமைத்துவ கல்வியகமாக SHMA அமைந்துள்ளது. இதற்காக பல பங்காளர் ஹோட்டல்களுடன் கைகோர்த்துள்ளதுடன், மேலும் ஹோட்டல்களை இணைத்துக் கொள்ளவும் எதிர்பார்க்கின்றது. 

உலகின் முதல்தார விருந்தோம்பல் முகாமைத்துவ பல்கலைகழங்களில் ஒன்றாக EHL அமைந்திருப்பதுடன், அண்மையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களில் 96 சதவீதமானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த கல்வி மாதிரிகளில் ஒன்றான, சுவிஸ் நாட்டின் திறன் ஆளுமைக் கட்டமைப்பின் பிரகாரம் கற்கைகள் அமைந்துள்ளன. SHMA இனால் தனது நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) திட்டத்தினூடாக இலங்கையில் RIESCO நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் நிறுவனத்துடன் (SDC), SHMA தனியார் மற்றும் பொதுத் துறைசார் பங்காண்மையை அண்மையில் ஏற்படுத்தியிருந்தது.

SSG முன்னெடுப்பினூடாக, இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுவதுடன், திறன்கள் இடைவெளியைக் குறைத்து, பல்வேறு செயற்பாடுகளினூடாக வெற்றியை எய்துவதற்கு தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கும், பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதுடன், திறன் படைத்த குழுவைக் கட்டியெழுப்பி, சர்வதேச நியமங்களின் பிரகாரம் தர நியமங்களை மேம்படுத்துவதற்கும், சிறந்த சுற்றுலா அமைவிடங்களில் ஒன்றாக இலங்கையைத் திகழச் செய்வதிலும் பங்களிப்பு வழங்கும். அரசாங்கத்தின் மீது காணப்படும் அழுத்தங்களை குறைப்பதில் இது உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தொழிற்துறைக்கு மாத்திரம் பங்களிப்பு வழங்காது, நற்பெயருக்கும், பொருளாதாரத்திலும் பங்களிப்பு வழங்கும்.


Share with your friend