“நேர்த்தியுடன் அரை நூற்றாண்டு: மஹோகனி மாஸ்டர்பீஸ் புதிய வடிவமைப்புகள் மற்றும் பிரத்யேக கைவினை பரிசுப் பொருட்களை அறிமுகப்படுத்துகிறது”

Share with your friend

மஹோகனி மாஸ்டர்பீஸ், இலங்கையின் கைவினைப் பொருட்களால் ஆடம்பரமான தளபாடங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.

இந்த முக்கியத்துவமான மைல்கல்லை நினைவுகூரும் வகையில், சமகால வடிவமைப்பு அழகியலுடன் இணைந்த புதிய தளபாட வடிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலதிகமாக, மஹோகனி மாஸ்டர்பீஸ் கைவினை  பரிசுப்பொருட்கள்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் முன்னணி கடிகார பெட்டிகள், நகைப் பெட்டிகள் மற்றும் தட்டுகள் என மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை மேம்படுத்துகிறது.

நிறுவனத்தின் 50 வருட பயணத்தை நினைவுகூரும் வகையில், முகாமைத்துவப் பணிப்பாளர் கிஷான் குணரத்ன இவ்வாறு தெரிவித்தார், “மஹோகனி மாஸ்டர்பீஸ் 1974 இல் எனது தந்தை மற்றும் அவரது சகோதரர்களால் கைவினைப் பொருட்கள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். என்னுடைய தந்தைக்கு ஆரம்பத்தில் தொழில்துறையில் முறையான பயிற்சி இல்லாவிட்டாலும், மரங்கள் மீது அவருக்கு இருந்த பேரார்வம் காரணமாக உருளை வடிவ பலகையினாலான பொத்தான்கள் தயாரிப்பு எங்கள் முதல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றி கைவினைப்பொருட்கள், சுவர் தகடுகள், தேயிலை கலன்கள் மற்றும் திரைச்சீலை  கம்புகள் போன்றவற்றை தயாரிப்பதன் மூலம் எங்களை விரிவடைவதற்கு தூண்டியது. 1980 களின் முற்பகுதியில், ஒரு சுவிட்சர்லாந்து மரப் பொருட்கள்  நிபுணர்  ஐரோப்பிய சந்தைக்கான தளபாடங்கள் மறுஉற்பத்தி செய்வதற்காக என் தந்தையை அணுகினார். இந்நிபுணர் எங்கள் தச்சர்களுக்கு சிறந்த தளபாடங்கள் கைவினைத்திறனில் பயிற்சி வழங்கினார்.‌ முக்கியமாக பாரம்பரிய மற்றும் நவீன நுட்பங்களின் கலவைகளை எவ்வாறு உபயோகிப்பது பற்றி தெளிவுபடுத்தினார். கைவினைப் பொருட்களிலிருந்து தளபாடங்கள் தொழிலுக்கு மாறியது ஒரு மாற்றத்தக்க மைல்கல் ஆகும். ஒரு சர்வதேச நிபுணரிடம் இருந்து கற்றுக்கொண்டவை, நாங்கள் நிலைநிறுத்தக்கூடிய உயர் தரத்தை நிறுவ உதவியது.

2005 ஆம் ஆண்டில், “கிராஃப்ட் சப்ளைஸ்” என்பது சிறந்த தளபாடத்திற்கான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக “மஹோகனி மாஸ்டர்பீஸ்” என்று மறுபெயரிடப்பட்டது.2010இல், இந் நிறுவனம் ஃபர்னிச்சர் ஸ்பாவை அறிமுகப்படுத்தியது, இது ஒரு தளபாட பின்பராமரிப்பு சேவையாகும், இது ஒரு விரிவான மற்றும் இறுதி வரையிலான தளபாடங்கள் தீர்வின் ஒரே வழங்குநராக மாறியது.2022 ஆம் ஆண்டில், மஹோகனி மாஸ்டர்பீஸ்கள் மொத்த உள்ளூர்  தீர்வுகளாக விரிவடைந்து, உள்ளூர்  துறை மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலையான வளர்ச்சி மற்றும் வெற்றியை அடைந்தன. அவர்களின் உள்துறை  வடிவமைப்பு சேவைகள்,  கட்டிடங்கள், கூரை மீது இருக்கும் அறை, வீடுகள், நாட்டுப்புற மனைகள், பெரு நிறுவன அலுவலகங்கள், வீட்டு அலுவலகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கான கருத்தாக்கம், புனையமைப்பு, திட்ட மேலாண்மை, விநியோகம் மற்றும் நிறுவல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

“பல ஆண்டுகளாக, தொழில்துறையில் எங்களை வேறுபடுத்தும் தனித்துவமான செயல்முறையை உருவாக்க பாரம்பரிய கைவினைத்திறன் நுட்பங்களை நாங்கள் செம்மைப்படுத்தியுள்ளோம். எங்களின் வடிவமைப்புச் சேவைகள் மற்றும் தயாரிப்புத் தரம் என்பவற்றில் சிறந்து விளங்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பு,  ஒப்பிடமுடியாதது என்பதை உறுதி செய்கிறது.ஏற்கனவே உள்ள வடிவமைப்புகளை  பிரதிபலிக்கும் பல நிறுவனங்களைப் போலல்லாமல், நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பகுதியும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், மஹோகனியின் தலைசிறந்த படைப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது”. என குணரத்ன வலியுறுத்தினார்.

மஹோகனி மாஸ்டர்பீஸ்ஸின்  இலங்கை தயாரிப்புகள் தரமான, நீடித்த பொருட்களைப் பயன்படுத்தி மிக உயர்ந்த சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந் நிறுவனம் பல ஆண்டுகளாக ஒரு வலுவான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளதோடு இப்போது குடியிருப்பு வடிவமைப்பு தீர்வுகளை அறிந்துகொள்வதற்கான அபிமான தேர்வாகவும் உள்ளது. இது 16 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் உயர்தர தளபாடங்களை ஏற்றுமதி செய்கிறது.மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகிறது. நிறுவனமே ஆவணங்கள் முதல் பொதி செய்தல், போக்குவரத்து மற்றும் கப்பல் வாணிபம்  வரை அனைத்தையும் நிர்வகிப்பதன் மூலம் அவர்களின்  தயாரிப்புக்கள் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சிரமமின்றி  சென்றடைய உதவுகின்றன.

Mahogany Masterpieces Showroom மற்றும் Design Studio இல. 87, Dr. Lester James Peiris Mawatha (Dickman’s Road), Colombo – 05 இல் அமைந்துள்ளது. மேலதிக தகவலுக்கு +94 112 689315 / +94 112 689337 இனை அழைக்கவும் அல்லது www.mahoganymasters.com இனை பார்வையிடவும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply