கொழும்பு நகரின் செயற்பாடுகள் மீண்டும் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் நிலையில், Crescat Boulevard இன் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியை எய்தியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு புதிய ஷொப்பிங் அனுவத்தை வழங்கும் வகையில் நவம்பர் 19 ஆம் திகதி Crescat Boulevard மீளத் திறக்கப்படவுள்ளது.
ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் குழுமத்தினால் நிர்வகிக்கப்படும் Crescat Boulevard இன் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பு நகரின் ஷொப்பிங் அனுபவத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக திறந்து வைக்கப்படவுள்ளது. நகரின் பழைய ஷொப்பிங் மோல்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், புகழ்பெற்ற வர்த்தக நாமங்கள் மற்றும் கடைகளைக் கொண்டுள்ளது. காலி வீதி மற்றும் பெரஹர மாவத்தையினூடாக இலகுவாக அணுகக்கூடிய வசதியைக் கொண்டுள்ளதுடன், சௌகரியமான வாகனத் தரிப்பிட வசதி மற்றும் கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டையும் கொண்டுள்ளது.
இந்த ஷொப்பிங் மோலுக்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தமக்கு பரீட்சியமான கடைத் தொகுதிகளை மீண்டும் காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், வழமை போன்று நாவுக்கு விருந்தளிக்கும் வகையில் புதிய F&B விற்பனையகங்களையும் கொண்டிருக்கும். ஷொப்பிங் தொடரின் கீழ் மாடியில் பரந்தளவு சர்வதேச சர்வதேச உணவுத் தெரிவுகளும் அடங்கியிருக்கும். இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பானிய உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்ய முடியும்.
கீழ் மாடியில் அமைந்துள்ள கீல்ஸ் சுப்பர் மார்கெட், கொழும்பில் காணப்படும் ஷொப்பிங் மோலில் அமைந்துள்ள மிகவும் இலகுவாக அணுகக்கூடிய சுப்பர் மார்கெட்டாக திகழ்கின்றது. பரந்தளவு பொருட் தெரிவுகளைக் கொண்டுள்ளதுடன், கீல்ஸ் பேக்கரி மற்றும் மதுபானத் தெரிவுகளையும் கொண்டுள்ளது.ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் சொத்துக்கள் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி தீக்சன ஜயரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை எமது வாடிக்கையாளர்கள் Crescat இல் கொண்டுள்ளனர். எமது தொடர்ச்சியான உயர்ந்த சேவை வழங்கல்களினூடாக புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்த வண்ணமுள்ளோம். கொழும்பு நகரில் அமைந்துள்ள மிகவும் சௌகரியமான மற்றும் இலகுவாக அணுகக்கூடிய ஷொப்பிங் மோலாக அமைந்திருப்பதுடன், Crescat இன் அடையாள இருப்பை மேம்படுத்தி தக்க வைத்துள்ளோம். மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு தமக்கு விருப்பமான விற்பனை நிலையங்களுக்கு விஜயம் செய்ய வருமாறு நாம் அழைப்பதுடன், புதிய பெயர்களையும் பார்வையிட்டு அவற்றை அனுபவிக்குமாறும் அழைக்கின்றோம்.” என்றார்.