Eyeview Sri Lanka

பெருந்தோட்டத்துறையில் ஹேமாஸ் முதலாவது பியவர முன்பள்ளியை திறந்துள்ளது

Share with your friend

இலங்கையில் ஆரம்ப சிறுவர் கல்வியை மாற்றியமைப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள Hemas Outreach Foundation, பெருந்தோட்டத்துறையில் தனது முதலாவது பியவர முன்பள்ளியை ஆரம்பித்துள்ளது. நுவரெலியா, பீட்று எஸ்டேட்டில் இந்த முன்பள்ளி நிறுவப்பட்டுள்ளது. பெருந்தோட்ட அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (PHDT) மற்றும் களனி வெலி பிளான்டேஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறைந்த வசதிகள் படைத்த சமூகங்களுக்கு தரமான கல்வியை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பரந்த முயற்சிகளில் அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

Hemas Outreach Foundation இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷிரோமி மசகொரல, Hemas Outreach Foundation இன் தலைமை அதிகாரி அப்பாஸ் ஈசுபாலி, மற்றும் குழும நிலைபேறாண்மை மற்றும் விசேட செயற்திட்டங்கள் சிரேஷ்ட முகாமையாளர், மின்திக திலகரட்ன  பெருந்தோட்டத்துறையில் முதலாவது பியவர முன்பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஆகியோர் காணப்படுகின்றனர்.

புதிதாக நிறுவப்பட்ட முன்பள்ளியினூடாக, பெருந்தோட்டத்துறையின் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கு தரமான முன்பள்ளி கல்வி மற்றும் அரவணைப்பை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, உள்ளடக்கமான சூழலில் தம்மை மேம்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்தங்கிய சமூகங்களின் பிள்ளைகளுக்கு வாய்ப்பை வழங்குவதனூடாக, இந்த மையத்தினால் தொடர்ந்தும், கல்விசார் பாகுபாடுகளை இல்லாமல் செய்வது மற்றும் ஒவ்வொரு பிள்ளையினதும் எதிர்காலங்களை கட்டியெழுப்புவது போன்றன தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தற்போது பியவர திட்டத்தினூடாக இலங்கையில 70 முன்பள்ளிகள் செயற்படுத்தப்படுகின்றன. பீட்று பெருந்தோட்ட முன்பள்ளி உள்ளடக்கப்பட்டுள்ளதனூடாக, தற்போது இந்த வலையமைப்பு 71 பாடசாலைகளாக உயர்ந்துள்ளது. வெவ்வேறு மாவட்டங்களில் மேலும் ஐந்து பள்ளிகள் நிறுவப்பட்ட வண்ணமுள்ளன. இந்த விரிவாக்கத்தினூடாக, பின்தங்கிய சமூகங்களில் ஹேமாஸ் காண்பிக்கும் கரிசனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக, ஆரம்பக் கல்வி மட்டுப்படுத்தப்பட்டுள்ள பெருந்தோட்டத்துறையில் அதிக நாட்டத்தை கொண்டுள்ளது.

பியவர முன்பள்ளி

Hemas Outreach Foundation இன் தலைமை அதிகாரி அப்பாஸ் ஈசுபாலி கருத்துத் தெரிவிக்கையில், “பெருந்தோட்டத்துறையில் எமது முதலாவது முன்பள்ளியை திறந்துள்ளமை என்பது, Hemas Outreach Foundation க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இளம் சிறுவர்களுக்கு தமது ஆரம்பப் பராயத்தில் கல்விப் பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதனூடாக, அவர்களின் எதிர்காலத்தில் நாம் முதலீடு செய்வது மாத்திரமன்றி, அவர்களின் குடும்பத்தினதும், பரந்தளவு சமூகத்தினதும் நலனை வலிமைப்படுத்துகிறோம்.” என்றார்.

அடிக்கடி மீளாய்வுகள், தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட மேம்படுத்தல் நிகழ்ச்சிகள் போன்றவற்றினூடாக பியவர மாதிரியினூடாக தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தர நியமங்கள் பின்பற்றப்படுகிறது. அதனூடாக, ஒவ்வொரு முன்பள்ளியும் நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தை வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.

பியவர முன்பள்ளி மாணவர்களால் Hemas Outreach Foundation இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷிரோமி மசகொரல மற்றும் Hemas Outreach Foundation இன் தலைமை அதிகாரி அப்பாஸ் ஈசுபாலி ஆகியோர் வரவேற்கப்படுகின்றனர்.

இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, Hemas Outreach Foundation இனால் பியவர ஊடாக ஆரம்ப சிறுவர் விருத்திக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்பட்ட வண்ணமுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் கைகோர்த்து இது நிறுவப்பட்டுள்ளது. இன்று, ஆரம்பக் கல்வியில் இலங்கையின் மிகவும் வெற்றிகரமான பொது-அரச பங்காண்மையாக பியவர திகழ்கிறது.

பீட்று பெருந்தோட்டத்தில் முன்பள்ளி திறந்துள்ளமையினூடாக, ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியை தொடர்வது, விருத்தியடைவது மற்றும் சமூகத்தில் சமமாக திகழ்வது எனும் சமத்துவ வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஹேமாஸ் நிறுவனத்தின் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. இலங்கையின் எந்தவொரு பிள்ளையும் அரவணைப்பின்றி இருப்பதை இல்லாமல் செய்வதற்கான குழுமத்தின் பரந்த முயற்சிகளை உறுதி செய்வதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.


Share with your friend
Exit mobile version