இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதித்துறை நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் முன்னணி வாகன இறக்குமதியாளர், விநியோகஸ்தர் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விநியோகஸ்தரான வரையறுப்பட்ட (தனியார்) இந்திரா ட்ரேடர்ஸுடன் ஒரு விசேட வணிக ஊக்குவிப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, இந்திரா ட்ரேட்ர்ஸின் கண்டி தலைமை அலுவலகம் கண்டி, கொழும்பு, மாத்தறை, களனி, அனுராதபுரம், எம்பிலிப்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கிளைகளுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிளைகளுடன் இந்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை இணைந்து செயற்படும்.
பீப்பள்ஸ் லீசிங், விளம்பர பிரச்சாரத்தின் குறிப்பிட்ட காலத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். பிஎல்சியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் சந்தையில் நிலவும் குறைந்த வட்டி விகிதத்தில் குத்தகை வசதிகள் வழங்கப்படுகின்றன. ஏனைய நன்மைகளில் வாகனக் காப்பீட்டிற்கான விசேட கழிவுகள், மூலதனத்தின் ஒரு பகுதியைச் செலுத்துவதன் மூலம் பிரீமியம் (premium) தவணைத் தொகையைக் குறைக்கும் வசதி மற்றும் ஏழு வருடங்கள் நீட்டிக்கப்பட்ட மீளச் செலுத்தும் காலம் ஆகியவை இதில் உள்ளடங்கும்.
இந்திரா ட்ரேடர்ஸ், வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான சலுகைகளையும் வழங்குகிறது. விசேடமாக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இரண்டு வாகன சேவைகள் (services) இந்திரா ட்ரேடர்ஸின் வாகன சேவை நிலையங்களில் தொழிலாளர் கட்டணமின்றி வழங்கப்படும். ஒரு புத்தம் புதிய பின் செலுத்துதல் கமரா (reverse camera) அமைப்பு கொள்வனவு செய்யப்பட்ட பயணிகள் வாகனங்கள் மற்றும் வாகன வர்த்தகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்
எனவே, வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இப்போது நம்பிக்கையான மற்றும் நம்பகமான பரிவர்த்தனையை எதிர்பார்க்கலாம். நாட்டிலுள்ள அனைத்து இந்திரா ட்ரேடர்ஸ் விற்பனை நிலையங்களும் இந்தச் சேவையை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதற்காக ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் பீப்பள்ஸ் லீசிங் முகவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் மற்றும் இந்திரா ட்ரேடர்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருஷங்க சில்வா ஆகியோர் கையெழுத்திட்டனர், இதன்போது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் செயற்பாட்டுப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் லக்ஸந்த குணவர்தன, இந்திரா ட்ரேடர்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹசிந்திர சில்வா, பொது முகாமையாளர் சஜனி சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
பீப்பள்ஸ் லீசிங்கின் தனித்துவமான அம்சங்கள், பலவிதமான நிதித் தீர்வுகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதற்கான வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை, தடையற்ற, வசதியான மற்றும் நட்புறவான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை உருவாக்குகிறது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது. பீப்பள்ஸ் லீசிங் அதன் 25வது ஆண்டு நிறைவு விழாவை 31 மே 2021 அன்று கொண்டாடியது.