வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் E.B. Creasy Solar இனால் SUNGROW சேவை நிலையம் அறிமுகம் 

Share with your friend

E.B. Creasy & Co., PLC நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலு பிரிவான E.B. Creasy Solar, தனது SUNGROW Service Center மற்றும் E.B. Creasy Solarவாடிக்கையாளர் பராமரிப்பு நிலையத்தை 2025 மார்ச் 12 ஆம் திகதி திறந்து வைத்தது. இல. 525, யூனியன் பிளேஸ், கொழும்பு 2 எனும் முகவரியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிகழ்வில், E.B. Creasy Solar மற்றும் SUNGROW பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். வாடிக்கையாளர் உதவி மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த நிலையம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. வினைத்திறன், தங்கியிருக்கும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உறுதியான கவனத்தை செலுத்தும் வகையில் இந்த புதிய நிலையத்தினூடாக, E.B. Creasy Solarஇன் வாடிக்கையாளர்களுக்கு நவீன சோலர் தொழினுட்பம் மற்றும் நிபுணத்துவ உதவிகளை பெற்றுக் கொடுக்கும் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையை புத்தாக்கமான வலு நுகர்வை நோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் முக்கிய பங்காகவும் இது அமைந்துள்ளது.


Share with your friend