வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதற்காக All-in-One பிற்கொடுப்பனவு பக்கேஜ்களை SLT-MOBITEL அறிமுகம் செய்துள்ளது

Share with your friend

மொபைல் தொடர்பாடல் சேவைகளில் குறிப்பிடத்தக்களவு உயர்வு பதிவாகியுள்ள நிலையில், SLT-MOBITEL மொபைல் பிரிவினால், புரட்சிகரமான M+ பிற்கொடுப்பனவு பக்கேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவை வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதுடன், பெருமளவு உள்ளம்சங்களையும் கொண்டுள்ளன.

இந்த பக்கேஜ்கள் ஒப்பற்ற இணைப்புத்திறன், சௌகரியம் மற்றும் பெறுமதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தனிநபர்களுக்கான பிற்கொடுப்பனவு மொபைல் அனுபவத்தை மாற்றியமைப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும், SLT-MOBITEL இன் தனித்தனி பிற்கொடுப்பனவு பக்கேஜ்கள், நாட்டின் வேகமான மொபைல் வலையமைப்பின் பின்புலத்தில் இயங்குவதுடன், நாடு முழுவதிலும் ஒப்பற்ற இணைப்புத்திறனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

புதிய M+ தனிநபர் பிற்கொடுப்பனவு தெரிவுகளினூடாக, பரந்தளவு பாவனையாளர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதுடன், நான்கு கட்ட இணைப்புத்திறன் மற்றும் அனுகூலங்களை வழங்குவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கேஜ் மூலமாக Anytime Any App DATA Bundle (HD quality, without daily limits) வழங்கப்படுவதுடன், DATA roll over வசதியையும் கொண்டுள்ளது. அத்துடன், எந்தவொரு வலையமைப்புக்கும் UNLIMITED அழைப்பு வசதி, எந்த வலையமைப்புக்கும் 200 SMS, Facebook, WhatsApp மற்றும் YouTube பயன்படுத்த மேலதிகமாக 5GB போன்றவற்றுடன், மேலதிக டேட்டா பாவனை கட்டணமாக ஒரு MB க்கு 10 சதம் மாத்திரம் அறவிடப்படும்.

All-in-One பக்கேஜ்களினூடாக மேற்படி உள்ளம்சங்கள் வழங்கப்படுவதுடன், மீடியம் பிளானினூடாக Anytime Any App DATA ஆக 5GB, ரூ. 700 + வரிகளுடன் வழங்கப்படுகின்றது. லார்ஜ் பிளானினூடாக Anytime Any App DATA ஆக 10 GB, ரூ. 1000 + வரிகளுடன் வழங்கப்படுகின்றது. எக்ஸ்ட்ரா லார்ஜ் பிளானினால் ரூ. 1400 + வரிகளுக்கு Anytime Any App DATA 20 GB வழங்கப்படுவதுடன், அல்டிமேட் XXL பிளானினூடாக ரூ. 2200 + வரிகளுக்கு Anytime Any App DATA 40 GB வழங்கப்படுகின்றது.

M+ தனிநபர் பிற்கொடுப்பனவு பிளான்களினூடாக, ஒப்பற்ற நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்படுவதுடன், மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க உள்ளம்சங்களும் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தமக்கு மிகவும் பொருத்தமான டேட்டா add-onகளை தெரிவு செய்து சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தெரிவுகளில் Facebook, WhatsApp, YouTube போன்ற சமூக ஊடக பக்கேஜ்கள் அல்லது Netflix, Prime Video போன்ற பொழுதுபோக்கு பக்கேஜ்கள், Zoom, Teams, Office 365, Google Meet போன்ற உற்பத்தித்திறன்சார் பக்கேஜ்கள் போன்றன அடங்கியுள்ளதுடன், TikTok, Instagram போன்ற சமூக ஊடக appகள் கேள்வியின் அடிப்படையில் வழங்கப்படும்.

M+ பிற்கொடுப்பனவு திட்டங்களினூடாக, இலங்கையர்களுக்கு புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளினூடாக வலுவூட்டலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுகின்றது. அதனூடாக சிக்கல்களற்ற, உள்ளம்சங்கள் நிறைந்த இணைப்புத்திறன் அனுபவத்தை தனிநபர்களுக்கு அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். மொபைல் வலையமைப்பு அண்மையில், சர்வதேச நிலையான புரோட்பான்ட் மற்றும் மொபைல் வலையமைப்பு அப்ளிகேஷன்கள், டேட்டா மற்றும் பகுப்பாய்வு பரிசோதனை அமைப்பான Ookla இனால் வேகமான 4G மொபைல் வலையமைப்பாக கௌரவிக்கப்பட்டிருந்தது.

அருகிலுள்ள SLT-MOBITEL கிளைக்கு விஜயம் செய்து வாடிக்கையாளர்கள் இந்த பக்கேஜ்களை இணைத்துக் கொள்ளலாம். விசேட add-on பக்கேஜ்கள் மற்றும் எனிடைம் டேட்டா பக்கேஜ்கள் போன்றவற்றை #170# டயல் செய்து அல்லது Self-care app இனுள் log செய்து செயற்படுத்திக் கொள்ளலாம்.


Share with your friend