SLIM Digis 2.5 நிகழ்வில் ஆறு விருதுகளை வென்று, டிஜிட்டல் ஈடுபாட்டில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம், இந்த ஆண்டுக்கான டிஜிட்டல் மகத்துவ மேடையில் மிகக் கூடுதலான விருதுகளை வென்றுள்ள வர்த்தகநாமங்களில் ஒன்று என்ற சிறப்பினையும் நிலைநாட்டியுள்ளது. இத்தகைய மேடையில் விருதைப் பெற்ற ஒரேயொரு தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற வகையில் இவ்வெற்றியானது ஹட்ச் நிறுவனத்திற்கு தனித்துவமான ஒரு சாதனையாக மாறியுள்ளது.

இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிறுவனத்தால் (Sri Lanka Institute of Marketing – SLIM) ஏற்பாடு செய்யப்பட்ட SLIM Digis ஆனது புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மகத்துவம் ஆகியவற்றுக்கு அங்கீகாரமளிக்கின்ற, நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மேடையாகத் திகழ்ந்து வருகின்றது. தனது வாடிக்கையாளர்களின் அன்றாட தேவைகளுடன் ஆழமாகப் பிணைந்தவண்ணம் செயல்படும் அதேசமயம், தொழில்துறையில் அதியுயர் மட்டத்தில் தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டி, படைப்பாற்றல் மற்றும் கணிப்பிடக்கூடிய பெறுபேறுகள் ஆகியவற்றை இணைக்கும் அதன் ஆற்றலை ஹட்ச் பெற்றுள்ள அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற தீர்மானம் வகுப்பு மற்றும் புதுமையான படைப்பாற்றலின் உந்துசக்தி ஆகியவற்றின் வழிகாட்டலுடன், பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற டிஜிட்டல் துறையில் ஹட்ச் முன்னிலையில் திகழ்வதை இது நிரூபித்துள்ளது. இந்நிறுவனத்தின் அணுகுமுறைகள் வெறுமனே பொருத்தமானவையாக காணப்படுவது மாத்திரமன்றி, சிறந்த விளைவுகளையும் ஏற்படுத்த வல்லன என்பதை இந்த அங்கீகாரங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
தொலைதொடர்பாடல் துறையில் மிகச் சிறந்த டிஜிட்டல் பயன்பாடு (Best Use of Digital in the Telecommunication Sector) என்ற பிரிவில் ஹட்ச் நிறுவனம் தனது “There’s Always an Option” என்ற விளம்பரப் பிரச்சாரத்திற்காக பெருமையுடன் வெற்றியீட்டியுள்ளதுடன், அதன் புதுப்பிக்கப்பட்ட வர்த்தகநாம பயணத்தில் தீர்க்கம் மிக்க ஒன்றாக இப்பிரச்சாரம் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. வீட்டு புரோட்பான்ட் இணைப்பு மற்றும் மொபைல் டேட்டா ஆகியவற்றை தனியொரு திட்டமாக வழங்கும் அதன் முன்னோடி 2X தீர்வு, கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைப்படைப்பு மூலமாக நேயர்களுடன் இணைப்பைப் பேணி, தேர்தல் காலத்தின் போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட விளம்பரப் பிரச்சாரமான “Ratatama HUTCH” ஆகியவற்றுக்கும் ஹட்ச் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. Best Performance Marketing என்ற பிரிவின் கீழ் ஹட்ச் நிறுவனம் பௌதிக வடிவிலான SIM அட்டைகள் இன்றி, தொடர்பாடல் இணைப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ள அதன் eSIM முயற்சிக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், டேட்டாவை முன்னிலைப்படுத்திய உச்சப் பயன்பாட்டுடன், வெளிநாட்டிலிருக்கும் போது தொடர்பாடலை மேம்படுத்தியமைக்காக பாராட்டப்பட்ட ரோமிங் பிரச்சாரத்திற்காக (Roaming campaign) ஹட்ச் நிறுவனம் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
இந்த அங்கீகாரம் குறித்து ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் கருத்து வெளியிடுகையில்: “டிஜிட்டல் யுகத்தில் இலங்கை நேயர்கள் மத்தியில் எதிரொலிக்கின்ற மகத்தான உழைப்பை முன்னெடுப்பதில் எமது அணிகளின் அர்ப்பணிப்பை இவ்விருதுகள் பிரதிபலிக்கின்றன. அதிக விருதுகளை ஈட்டியுள்ள வர்த்தகநாமங்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளமை மற்றும் இவ்வாண்டில் அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு தொலைதொடர்பாடல் சேவை நிறுவனம் ஆகிய சிறப்புக்களை பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றோம். எமது வாடிக்கையாளர்களுக்கும், தொழில்துறைக்கும் உண்மையான மதிப்பு, புத்தாக்கம், மற்றும் வளர்ச்சியை வழங்குவதில் நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை இவை பிரதிபலிப்பதால் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உண்மையில் தகுதியுடைவர்களாக எம்மை மாற்றியுள்ளதென நாம் நம்புகின்றோம்.”