பட்டம் வழங்கும் பாரிய தேசிய கல்வி நிறுவனமான SLIIT, 1700ற்கும் அதிகமான சிறந்த சாதனைகளைக் கொண்டாடும் நோக்கில் 2022 மார்ச் பட்டமளிப்பு நிகழ்வை நடத்தியது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/03/Image-1-6-1024x684.jpg)
இந்தக் கூட்டு பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் நடைபெற்றதுடன், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மரியாதைக்குரிய தொழில் வல்லுநர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பட்டதாரிகளை ஊக்கமளிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் அவர்கள் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியிருந்தனர்.
புகழ்பெற்ற பல்வேறு நபர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர். முதலாவது நாளில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டவர்களில் சன்ஷைன் ஹோல்ட்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, ஜெட்விங் ட்ரவல்ஸ் (தனியார்) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷிரோமல் குரே உள்ளிட்டோர் அடங்கியிருந்ததுடன், இரண்டாவது நாள் நிகழ்வில் லங்கா டைல்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மகேந்திர ஜயசேகர, சோவியத் யூனியனுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனித லியனகே உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தின் தலைவராகத் தெரிவசெய்யப்பட்ட கலாநிதி.கமல் லக்சிறி, 1990 சுவசரிய தலைவர் துமிந்ர ரத்னாயக ஆகியோர் மூன்றாவது நாளின் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சுதந்த லியனகே, டிவிசி இன்டர்நஷனர், கேர்டின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செத் குனின், CIMA சர்வதேசத்தின் பிரதித் தலைவர் மெலனி கனக ஆகியோர் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிபுணத்துவம், வணிக முகாமைத்துவ இளமானிப் பட்டம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிபுணத்துவம், விஞ்ஞான பொறியியல் இளமானிப் பட்டம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிபுணத்துவம், பட்டப்பின்படிப்பு டிப்ளோமா, மென்பொருள் பொறியியல் மற்றும் சிவில் பொறியியலில் MPhil ஆகியவற்றக்கு இந்நிகழ்வில் பட்டம் வழங்கப்பட்டது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/03/Image-2-4-1024x684.jpg)
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டது. தகவல் விஞ்ஞானத்தில் சிறந்த வெளிப்பாட்டுக்காக ஸசினி டில்கா தென்னகோன் மிகவும் தலைசிறந்த/IFS குளோபல் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டதுடன், வணிக ஆய்வில் சிறந்த வெளிப்பாட்டுக்காக பந்திய தேவஹே நவோதய மல்ஷானி தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டதுடன், சிவில் பொறியியல் துறையில் சிறந்த வெளிப்பாட்டை வெளிப்படுத்திய மொஹமட் புவாட் அஹ்மட் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இதற்கு மேலதிகமாக சிறந்த வெளிப்பாட்டை வெளிப்படுத்திய 29 மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் பெயர்பெற்ற நிறுவனங்களான 99X, IFS, Dialog Axiata PLC, LSEG Technology, Virtusa, Brandix, BOC, Maga Engineering (Pvt) Ltd, Codegen மற்றும் Zillione ஆகியவை இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
SLIIT மார்ச் 2022 பட்டமளிப்பு விழா மாணவர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருந்தது, கடினமாக உழைத்த பிறகு, அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் வாழ்க்கையின் சவால்களை ஏற்றுக்கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பார்க்க தயாராகிவிட்டனர். SLIIT இந்த புதிய பட்டதாரிகளுக்கு வளமான கற்றல் அனுபவத்தை வெற்றிகரமாக வழங்கி, நாளைய தலைவர்களை உருவாக்கியுள்ளது.