2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு முதன்மையாளன் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஐந்து கம்பனிகளுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றது

Share with your friend

2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு  முதன்மையாளன் ஊக்குவிப்புத் திட்டமானது பசுமை வலு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான தங்கள் வணிக யோசனைகளையும் வாய்ப்புகளையும் அபிவிருத்தி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு பசுமை வலு அடிப்படையிலான வணிகங்களுடன் ஆரம்பிக்கின்றது. 

ஆறு மாத கால ஊக்குவிப்புத் திட்டமானது இந்தத் தொழில்கள் வளரவும், சாத்தியமான வாய்ப்புகளை அடையாளம் காணவும், கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுக்கவும், வணிக உறவுகளை உருவாக்கவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் சாதகமான தாக்கத்தை உருவாக்கும் வகையில் தொழில் வல்லுநர்களால் தீவிரமான மற்றும் ஆழமான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். 

வெற்றிகரமான விண்ணப்பம் கோரலின் பின்னர், 11 பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் தங்களது புத்தாக்கமிக்க மற்றும் நிலையான வணிக யோசனைகளை 2021 யூன் 22 ஆம் திகதியன்று   இணையமூலமாக நடைபெற்ற தெரிவு வட்டமேசையில் முன்வைக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். 

அனைத்து வேட்பாளர்களும் தங்கள் யோசனை, புத்தாக்கம் அல்லது தயாரிப்பின் தொழில்நுட்ப நம்பகத்தன்மை மற்றும் சந்தை பொருத்தத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டனர்; இதன் விளைவாக 2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு  முதன்மையாளன் ஊக்குவிப்புத் திட்டத்தில்   எகோஸ்டீம் (Ecosteem), சனோடா(Sanota), ரோடா (Rhoda) , ரூட் சோனா (Route Sonar) மற்றும் எகோ டெக் பேஸ் (Eco Tech Base) ஆகியன நுழைகின்றன.

2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு  முதன்மையாளன்  திட்டத்தின்  கூட்டாளர் அமைப்புக்களாகிய ஜெர்மன் மத்திய வெளியுறவு அலுவலகம்; Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH; வலுசக்தி அமைச்சு-  சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சு; இலங்கையிலுள்ள ஜெர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக  தூதுக்குழு;   இலங்கை நிலைபெறுதகு  வலு அதிகாரசபை;  குட் லைஃப் எக்ஸ்  (Good Life X (GLX);  மற்றும் ஹட்ச் வேர்க்ஸ்  (Hatch Works) ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு கௌரவமிக்க நடுவர்கள் குழுவால் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

பாரம்பரிய மேம்படுத்தல் நிகழ்வுகளிலிருந்து விலகி, பசுமை வலு  முதன்மையாளனின்  நீடித்தலுக்கான உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதன் மூலம், தெரிவு வட்டமேசையானது ஒரு வெகுமதி மற்றும் மேம்படுத்தல் குறிப்பாக – கூட்டாளர்கள் மற்றும் இறுதி வருகையாளர்களின் நினைவாக ஆனவிழுந்தாவ ஈரநிலங்களில் 66 மரங்களை நடுவதாக அறிவித்து நிறைவுபெற்றது. 

நிகழ்வில் பங்கேற்பாளர்களுக்காக காட்டின் நிகழ்நிலை வடிவமைப்பு காண்பிக்கப்பட்டது, அதே நேரத்தில் தளத்தில் உள்ள மரங்களின் உண்மையான கவனிப்பு மற்றும் பராமரிப்பு கார்பன் பிளாண்டரால் மேற்பார்வையிடப்படும். நடுவர்கள் கார்பன் பிளாண்டரின் மென்பொருள் தளத்திற்கு வாழ்நாள் நுழைவைப் பெறுவதுடன் இது அவர்களின் மரங்களின் வளர்ச்சியைக் கண்டறிய உதவுகிறது.

பசுமை வலு  முதன்மையாளன் – அதன் கூட்டாளர்களுடன் இணைந்து – நாட்டில் வலுச்-செயல்திறன் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய எரிசக்தி நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த நோக்கத்துடன்  பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கும்  நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மேலதிக விபரங்களுக்குத் தயவுசெய்து,  www.greenenergychampion.lk  எனும் இணையத்தளத்தை அணுகவும்.


Share with your friend