C.W. Mackie PLC நிறுவனத்தின் மிக விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் கீழ் உள்ள ஒரு முதன்மையான வர்த்தகநாமமான ஸ்கேன் ஜம்போ பீனட், “ஸ்கேன் ஜம்போ போனான்ஸா” மற்றும் “ஸ்கேன் டெப் ஜம்போ போனான்ஸா” ஆகிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தின் 8ஆவது பதிப்பை நிறைவு செய்தது. இந்த நிகழ்வின் போது, 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, 5 வெற்றியாளர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நிகழ்வு அதிர்ஷ்டசாலிகள், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நலன் விரும்பிகளின் பங்குபற்றுதலுடன் 2025 பெப்ரவரி 17ஆம் திகதி கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் (GOH) இடம்பெற்றது.


ஸ்கேன் ஜம்போ போனான்ஸா ஊக்குவிப்பு பிரசாரம் 2024 ஜூன் முதல் நவம்பர் வரையான ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் 140 இற்கும் மேற்பட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர், முகவரி, தே.அ.அ. இலக்கம் மற்றும் தொடர்பு இலக்கத்துடன் ஒரு வெற்று ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ் பொதியை தபால் பெட்டி இல 161, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பி, இக்குலுக்கலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர். அத்துடன், போட்டியில் பங்கேற்க ஆர்வமானவர்கள், தங்கள் கூப்பன்களை ஸ்கேன் ஜம்போ போனான்ஸா பிரசார வாகனத்திடம் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டது.
ஸ்கேன் ஜம்போ போனான்ஸா மற்றும் டெப் போனான்ஸா ஆகியன பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இவ்வர்த்தகநாமத்தை தெரிவு செய்து பயன்படுத்தி வரும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்க வடிவமைக்கப்பட்ட முயற்சிகளாகும். C.W. Mackie PLC குழும நிறுவனங்களின் ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் அருண சேனாநாயக்க தெரிவிக்கையில், இந்த பிரசாரங்களின் நோக்கம், எமது வாடிக்கையாளர்கள் வர்த்தகநாமம் தொடர்பில் தொடர்ச்சியான விசுவாசமாக இருப்பதற்கான எமது நன்றியைத் தெரிவிப்பதாகும். இந்த ஆண்டு ஜம்போ போனான்ஸா மற்றும் டெப் போனான்ஸா ஆகியன மகத்தான வெற்றிகளைப் பெற்றன. அத்துடன் எதிர்காலத்தில் அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தரமான முயற்சிகளை வழங்க C.W. Mackie எதிர்பார்க்கிறது.” என்றார்.

ஸ்கேன் ஜம்போ பீனட் அதன் துறையில் சந்தைத் தலைவராக விளங்குவதோடு, அதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. நிலக்கடலையானது பருமனின் அடிப்படையில் கவனமாக தெரிவு செய்யப்பட்டு, மிகுந்த கவனத்துடன் பதப்படுத்தப்பட்டு, சுகாதாரமான நிலையில் நம்பகமான ஸ்கேன் லேபிளின் கீழ் பொதி செய்யப்படுகிறது. இவ்வர்த்தகநாமம் அனைத்து வயது நுகர்வோர் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ளதோடு, உயர்தர நிலக்கடலையை வழங்குவதிலான நற்பெயரைப் பெற்றுள்ளது. இது சந்தையில் அதன் வெற்றிக்கும் புகழுக்கும் பாரிய பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. தரம் மற்றும் சுகாதாரத் தரங்களுக்கான அதன் அர்ப்பணிப்பானது, சந்தையில் அதன் மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது.
120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட C.W. Mackie PLC ஆனது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது அதன் பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இந்த பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுவின் FMCG பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவு, பாரம்பரிய வர்த்தகம், நவீன வர்த்தகம், HORECA (ஹோட்டல், உணவகம், கேட்டரிங்) சேனல்கள் மற்றும் நிறுவன விநியோகம் மூலம் பல்வேறு நுகர்வோர் சந்தைகளில் ஊடுருவ ஒரு மேல் நோக்கிய கலப்பு சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. அதன் தயாரிப்பு வரிசையில் சன்குயிக், ஸ்கேன் ஜம்போ நிலக்கடலை, ஸ்கேன் ஸ்நக்ஸ், கொட்டகல கஹட்ட, டெலிஷ் ஜெல்லி, ஸ்கேன் வர்த்தகநாம போத்தலில் அடைக்கப்பட்ட நீர், KVC தயாரிப்புகள் (பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள்), N-Joy தேங்காய் எண்ணெய் மற்றும் ஸ்டார் பிராண்ட் எசென்சஸ் மற்றும் நிறமூட்டிகள் போன்ற நன்கு அறியப்பட்ட வர்த்தகநாமங்களுக்கு பெயர் பெற்றவை. இவை அனைத்தும் அந்தந்த பிரிவுகளில் சந்தையின் தலைவர்களாக மாறி, இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.