3M மற்றும் McLarens தனது பிரதான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை செப்டெம்பர் 03 ஆம் திகதி கொழும்பு Cinnamon Life இல் முன்னெடுத்திருந்தது. “புத்தாக்கத்தால் செயல்திறனை முன்னெடுத்தல், கூட்டாண்மைகளை கொண்டாடுதல்” எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னணி வாடிக்கையாளர்கள், உயர்மட்ட நிர்வாகிகள், தொழில் பங்குதாரர்கள் மற்றும் 3M – McLarens தலைமைத்துவ அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து, தங்களது மதிப்புமிக்க கூட்டாண்மைகளை கொண்டாடியதுடன் இலங்கையில் இணைந்து செயற்படும் புத்தாக்கங்களின் எதிர்காலத்தை ஆராய்ந்தனர்.


இந்நிகழ்வில், 3M-McLarens நிறுவனத்தின் விசுவாசமுள்ள வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கும் பங்களிப்புகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, 3M மற்றும் McLarens குழுமத்திற்கிடையேயான ஆறு வருட கால ஒத்துழைப்பு தொடர்பில் கௌரவமளிக்கப்பட்டது. கட்டுமானம், மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் தொழில்துறை தீர்வுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கங்களை இலங்கை வணிக நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்த்து, நீண்டகால தாக்கத்தையும் நடைமுறை ரீதியான பயன்பாடுகளை இந்த கூட்டாண்மை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் 3M-McLarens பிரதம செயற்பாட்டு அதிகாரியும் அதன் பணிப்பாளருமான டிலான் செனவிரத்ன கருத்து வெளியிடுகையில், “3M-McLarens நிறுவனம் இலங்கை சந்தைக்கு கொண்டு வரும் ஒவ்வொரு புத்தாக்க விடயங்களினதும் இதயமாக, எமது வாடிக்கையாளர்களே உள்ளனர். நிலைபேறான தன்மையுடன் வளர்ந்து, உலகளாவிய தொழில்நுட்பங்களைத் தழுவும் வகையில் வீடுகள், வேலைத்தளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் அவர்கள் சிறந்தவற்றை பெறுவதற்கான அதிகாரத்தை நாம் வழங்கியுள்ளோம்.” என்றார்.
இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில், இலங்கையின் தொழில்துறைகளில் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்த உருவாக்கப்பட்ட புதிய 3M-McLarens தொழில்நுட்பங்களை நேரடியாகக் காண்பிக்கப்பட்டதோடு, அதன் புத்தாக்கம் மிக்க செயற்பாடுகளின் விளக்கக் காட்சிகளும் இடம்பெற்றன. விஞ்ஞானம் சார்ந்த புத்தாக்கங்கள் மற்றும் நடைமுறை ரீதியான தீர்வுகள் ஊடாக இலங்கையின் தொழில்துறையின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது வலியுறுத்தியது.
படைப்பாற்றலான பரிமாணத்தை இணைக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற கலைஞரும் விருது பெற்ற இலங்கை பிரபலமுமான உமாரியா சின்ஹவன்ச உடனான தனது கூட்டாண்மையை 3M-McLarens இங்கு அறிவித்தது. அவர் தனது முதலாவது ஆங்கில இசை வீடியோ தயாரிப்புக்கான அனுசரணையை இந்நிகழ்வில் பெற்றுக் கொண்டார். அவருடனான இந்த கூட்டணியில், ஆடை வடிவமைப்பில் Scotchlite™ Reflective Material உள்ளிட்ட 3M-McLarens நிறுவனத்தின் மேம்பட்ட மூலப்பொருள் புத்தாக்கங்கள் ஒருங்கிணைக்கப்படுவதோடு, இது நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் தொழில்துறைகளில் மாத்திரமின்றி, இசை மற்றும் கலை உலகின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிப்பதை வெளிப்படுத்துகிறது.
எதிர்காலத்தை கருத்தில் கொண்ட, இலங்கையின் மாறுபட்ட தேவைகளுக்கேற்ப, பிராந்திய அடிப்படையில் அவசியமான புத்தாக்கங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் போக்குவரத்திற்கான தீர்வுகள், நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம் தமது உள்ளூர் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த 3M-McLarens திட்டமிட்டுள்ளது.