தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியான நவலோக்க மருத்துவமனைக் குழுமம், மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் சிறந்த நிதிச் செயல்திறனைப் பெற்றுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் நவலோக்க மருத்துவமனை குழுமம் 10 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்ய முடிந்ததுடன். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.54% ஆண்டு வளர்ச்சியாக அமைந்திருந்தது. இந்த வளர்ச்சியின் மூலம், சவாலான பொருளாதாரச் சூழலில் தொடர்ந்து வளர்ச்சியடையும் அதே வேளையில், உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான அதன் உறுதியான நிலைப்பாட்டை நவலோக்க மருத்துவமனை குழுமம் வலியுறுத்தியுள்ளது. நவலோக்க மருத்துவமனை குழுமம் வரிக்கு முந்திய இலாபமாக 576.2 மில்லியன் ரூபாவைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 178.61% வலுவான வளர்ச்சியாகும்.
மேலும் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், குழுமத்தின் செயல்பாட்டு இலாபம் 73.4 மில்லியன் ரூபா இழப்பைக் காட்டியது. நவலோக்க மருத்துவமனை குழுமம் 2024 இல் 1.02 பில்லியன் ரூபா இலாபமாக வளர்ச்சியடைய முடிந்தது, இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியதுடன் குழுமத்தின் செயல்பாட்டு இலாபம் 158.28% வளர்ச்சியுடன் 1.32 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. இது தவிர, நவலோக்க மருத்துவமனைனக் குழுமம் ஒரு பங்குக்கான வருவாய் (EPS) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்தது, இது எதிர்மறையாக 0.46 ஆக இருந்ததுடன் பங்குதாரர் மதிப்பை மேலும் வலுவடையச் செய்தது.
இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களில் ஒன்றாக, நவலோக்க மருத்துவமனை வலையமைப்பு அதன் சிறந்த சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கான வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் நோயாளி பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் வெற்றியை அடைவதை குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் நீண்டகால வெற்றிக்காக, செயல்பாட்டு மற்றும் நிதி மூலோபாயத் திட்டங்களைத் தொடங்கியுள்ள நவலோக்க மருத்துவமனை குழுமம், மருத்துவமனை வளாகத்திற்குள் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அதன் சமீபத்திய முயற்சியாக மையப்படுத்தப்பட்ட நோயறிதல் மையத்தைத் தொடங்குவதன் மூலம் அவர்களால் ஒரு மாற்றப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. இந்த சமீபத்திய மையத்தின் மூலம், நோயாளிகளுக்கு மையப்படுத்தப்பட்ட கருத்துக்களை வழங்குதல், நோய் கண்டறிதல் சேவைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வகப் பின்தொடர்தலை உறுதி செய்வதன் மூலம் நோயறிதல் செயல்முறையை நெறிப்படுத்துதல் போன்ற பல சேவைகளைச் செயல்படுத்த மருத்துவமனை குழுமம் பணியாற்றியுள்ளது.
மேலும், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி மேம்பட்ட கதிரியக்கத் துறையை உருவாக்க உழைத்த நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், தொழில்நுட்பத்திலும் முன்னணி இடத்தைப் பெற முடிகிறது. நோயறிதலுக்கான மேம்பட்ட படத் தரம், முழு உடலையும் ஸ்கேன் செய்தல் மற்றும் இதய நோயாளிகளில் ஸ்டென்ட் செயல்திறன் மதிப்பீடு, ஸ்கேன் நேரம் குறைதல் மற்றும் CT ஸ்கேன்களில் கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைத்தல் போன்ற புதிய வணிகச் சந்தைகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை அதிநவீன இயந்திரங்கள் போன்ற சேவைகளை வழங்குகிறது. பட பகுப்பாய்வு உதவியுடன், நோயாளிகளின் அளவு மற்றும் நிலையை முழுமையாக ஆராய வாய்ப்புகள் உள்ளன.
பெருநிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெருநிறுவன மையத்தை அமைப்பதன் மூலம் தனது சேவைத் தொகுப்பை விரிவுபடுத்தியுள்ள நவலோக்க மருத்துவமனை குழுமம், விசாக்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள், தொழில்முறை சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியத் திட்டங்களுடன் தனிப்பட்ட சுகாதார சேவையையும் வழங்கியுள்ளது. இதன் மூலம், நவலோக்க மருத்துவமனை குழுமம் தனது சேவைகளை அதிகரிப்பதுடன், நிறுவன சுகாதார சேவைகளின் வருமானத்தையும் துரித வளர்ச்சியுடன் அதிகரிக்க முடிந்தது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நவலோக்க வைத்தியசாலை குழுமத்தின் தலைவர் தேஷமான்ய கலாநிதி ஜயந்த தர்மதாச கூறுகையில், இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்காக நவலோக்க வைத்தியசாலையின் எதிர்கால இலக்குகள் குறித்து தெளிவாக வலியுறுத்துகிறார். பெருநிறுவன சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதார சேவைகளில் தெற்காசியாவில் முன்னணி நிறுவனமாக மருத்துவமனை குழுவை நிறுவுவதற்கும் இது ஒரு காரணமாகும். இந்த சிறந்த நிதிச் செயல்திறன், புத்தாக்கம், செயல்பாட்டுத் திறன் மற்றும் விதிவிலக்கான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல் ஆகியவற்றில் நவலோக்க மருத்துவமனைனக் குழுமத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.” என தெரிவித்தார்.