AR Lenses ஐ தனது குறுஞ்செய்தி தளத்தில் உள்ளடக்குவதற்கு Snap உடன் கூட்டாண்மையை ஏற்படுத்திய Rakuten Viber

Share with your friend

Rakuten Viber இற்கும் Snap இற்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மையின் ஊடாக வீடியோ செய்திகள் மற்றும் புகைப்படங்களுக்கு Viber ஐ கொண்டுவர முடிவதுடன்WWF, FC Barcelona மற்றும் WHO ஆகியன Viber Lenses வர்த்தக நாமத்தைக் கொண்டவற்றில் அடங்குகின்றன.

குறுஞ்செய்தி பரிமாற்ற தளம் மற்றும் குரலை அடிப்படையான தொடர்பாடல்களில் உலகின் முன்னணியாளராக விளங்கும் Rakuten Viber, Snap Inc ஊடனான கூட்டாண்மையின் மூலம் AR Lenses மாயாஜாலத்தை கொண்டுவரவுள்ளது. Snap உருவாக்கியுள்ள Camera Kit, Creative Kit மற்றும் Bitmoji போன்ற கருவிகளைப் பயன்படுத்தி Viber ஆனது AR Lenses ஐ ஒருங்கிணைத்து Snapchat இல் பகிர்வதை இயக்கவும், தனிப்பயனாக்கப்படக்கூடிய Bitmoji அவதாரங்களை Viber இற்கு கொண்டுவரவும் முடியும்.

Snap இனால் சக்தி அளிக்கப்பட்டுள்ள Viber Lenses ஆனது முதல் தடவையாக Viber ஐ பயன்படுத்துபவர்களுக்கும் AR உடன் கூடிய வீடியோ செய்திகள் மற்றும் புகைப்படங்களை வழங்கும். இது மிருகங்களின் முகம்மூடிகள், கதாப்பாத்திரங்கள், நீருக்கடியிலான கண்ணாடி வில்லை, வேடிக்கையான பூனை ஈடுபாடு உள்ளிட்ட 30 புதிய Viber Lenses களைக் கொண்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு 70-50 Lenses களை மேலதிகமாக இணைத்துக் கொள்ளவிருப்பதுடன், 2021ஆம் ஆண்டு இறுதியில் ஆகக் குறைந்தது 300 Lenses களை இணைக்க கம்பனி திட்டமிட்டுள்ளது. Viber இல் தங்களுக்குச் சொந்தமான பிரத்தியேக Lenses களை உருவாக்க வணிகங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். குறுஞ்செய்தி செயலியில் புதிய ஐ பெற்றுக் கொள்ளும் முதலாவது பங்காளர்களாக World Wildlife Federation, FC Barcelona, World Health Organization ஆகியன விளங்குகின்றன. தனிப்பயனாக்கப்பட்ட Lenses, Viber இயங்குதளத்தில் பயனர்கள் விரும்பும் வர்த்தகநாமங்களுக்கும் இடையிலான ஈடுபாட்டை அதிகரிக்கும்.

பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கிருந்தாலும் மக்களை இணைக்கும் மற்றும் ஆக்கபூர்வமாகத் தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் அழைப்பு மற்றும் செய்தியிடல் செயலியே Viber ஆகும். Viber இல் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகள் குறியாக்கம் செய்யப்பட்டிருப்பதால், பயன்படுத்துனர்கள் தங்கள் தகவல்தொடர்புகள் எப்போதும் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யலாம்.

செயலியில் தற்பொழுது காணப்படும் ஸ்டிக்கர் சேகரிப்புகளுக்கு மேம்பட்ட விடயமாகவே Viber Lenses  காணப்படுவதுடன், இது பயனர்கள் அரட்டை அடிக்கும் போது தங்களை பார்வைக்கு வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது. Snap’s Camera Kit, Bitmoji, மற்றும் Creative Kit ஆகியவற்றை Viber ஏற்றுக்கொள்வதன் ஊடாக மக்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும் அந்த இணைப்புகளை இன்னும் அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதற்கான கூடுதல் வழிகளாகும்.

புதிய Viber அம்சங்கள் கீழ்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன:

Instant Augmented Reality : சுற்றுப் புறத்தில் மற்றும் காப்பாக படங்களை மேலடுக்குச் செய்வதற்கு உங்கள் விரல் நுனியில் AR இன் சக்தியைப் பயன்படுத்தவும்.

Attention-Grabbing Filters: நண்பர்களுடனான உரையாடல்களின் போது காட்சிகள் மற்றும் தீப்பொறிகளுடன் படைப்பாற்றலான லேயர்களை சேர்க்கவும்.

Expressive Masks: பயனர்களின் முக அசைவுகளைத் துல்லியமாகப் பின்தொடரும் பல்வேறு முகமூடிகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்

Beautification Features: லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பலவிதமான முடி வண்ணங்கள் போன்ற யதார்த்தமான தொடுதல்களுடன் உங்கள் படங்களை மேம்படுத்தவும்

Customized Bitmoji : படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு தனிப்பயன்பாட்டைக் கொண்ட Bitmoji உருவங்களை ஒருங்கிணைக்கவும்

வணிகப் பங்காளர்கள் தமது சமூக தளங்களில் தனிப்பயன்பாட்டைக் கொண்ட Lenses ஐ உருவாக்குவதன் ஊடாக அனுசரணை வழங்கப்பட்ட மற்றும் வர்த்தகநாமங்களைக் கொண்ட Lenses வைபருக்கு கூடுதல் வருவாயை வழங்கும்.

“Snap உடன் Rakuten Viber ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மை இரு தரப்பினருக்கும் வெற்றியளிப்பதாகும்”  என Snap Inc இன் கமரா தள கூட்டாண்மையின் பணிப்பாளர் எலியொட் சொலமொன் தெரிவித்தார். “ Viber ஏற்கனவே திடமாகக் கால் தடங்களைப் பதித்துள்ள பிராந்தியங்களில் மேலும் விஸ்தரிப்பதற்கு எமது Augmented Reality தொழில்நுட்பம் உதவும் என்பதுடன், Viber இன் பயனர்கள் Viber இயங்குதளத்தில் AR மூலம் தங்களை வெளிப்படுத்த உதவும்” என்றார்.

“Viber பயனர்களுக்கு Snap கமராவைக் கொண்டு வருவதில் நாம் ஆவலாக இருக்கின்றோம்” என Rakuten Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜமெல் அகோவா தெரிவித்தார். இந்த கூட்டாண்மை மூலம், AR உடன் எங்கள் பயனர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த விரும்புகிறோம், மேலும் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான புதிய வேடிக்கையான வழிகளை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம். இது மக்களை ஒருவருக்கொருவர் இணைப்பது மட்டுமல்லாமல், பயனர்கள் தங்கள் சமூகங்களுடன் பகிர்ந்து கொள்ள பொழுதுபோக்கு, உற்சாகமான மற்றும் பலனளிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடிய இடமாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய அம்சங்களுடன் iOS பதிப்பும், Android beta பதிப்பின் ஆங்கில மொழியும் ஜூன் 30ஆம் திகதி முதல் கீழ்வரும் நாடுகளில் கிடைக்கிறது: அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லிச்சென்ஸ்டீன், லக்சம்பேர்க், மாலத்தீவுகள், நெதர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா. ஓகஸ்ட் இறுதிக்குள் அதன் சிறந்த 30 Viber பிராந்தியங்களுக்கும் மற்றும் அனைத்து Android பயனர்களுக்கும் இப்புதிய அம்சங்களைப் படிப்படியாக வெளியிடும்.

Rakuten Viber பற்றி :

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.

YouTube Video Links: https://www.youtube.com/watch?v=sauyXFYf7FU&ab_channel=Viber


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply