Business World International விருது விழா தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெகு விமரிசையாக நிறைவு

Share with your friend

அமெரிக்காவை தலமாக கொண்டு இயங்கும் Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த Business World International கருத்தரங்கும் விருது வழங்கும் விழாவும் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் கலைஞர்கள் பலரின் பங்கேற்புடன் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டு விருது விழாவின் தொனிப்பொருள் “2030 ஆம் ஆண்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான அர்ப்பணிப்பு” என்பதாகும். Business World International Organization (BWIO) என்பது உலக தொழில்முயற்சிகளின் வெற்றிகள் மற்றும் திறன்களை அடையாளங் கண்டு கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்காவில் நிறுவப்பட்டதொரு அமைப்பாகும். BWIO விருது விழாவின் மூலம் தொழில்முயற்சிகளின் சாதனைகளை அடையாளங் கண்டு அவற்றை பாராட்டி கௌரவிப்பதோடு துறை சார்ந்த சவால்களை வெற்றிக்கொள்ளவும் தமது ஆற்றல்களை உலகுக்கு காண்பிக்கவும் தொழில்முயற்சியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். 59 பிரிவுகளின் கீழ் நடாத்தப்படுகின்ற மேற்படி விருது விழாவில் புதிய தொழில்முயற்சிகள், தொழில்முயற்சி துறையின் பெரும் ஜாம்பவான்கள், சமூகத்தை மாற்றுவதற்கு பங்களிப்போர், நிலைபேறான அபிவிருத்தி ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தும் தொழில்முறை வல்லுநர்கள் போன்ற பல்வேறு தரப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த விருது விழாவில் பிரதம விருந்தினராக இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கலந்து கொண்டார். கௌரவ  விருந்தினராக திரு லிடியா போல் (சர்வதேச தலைவர் – BWIO அவுஸ்திரேலியா) கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் திரு செந்தில் தொண்டமான் கலந்து கொண்டதோடு, கலாநிதி டெக்ஸ்டர் பிரனாந்து (ஸ்தாபகத் தலைவர் – BWIO சர்வதேச பிரிவு), கலாநிதி தரிந்து விஜேநாயக்க (பிரதி தலைவர் – BWIO சர்வதேச பிரிவு) மற்றும் கலாநிதி எம்.ஏ.ஏ. ஜப்பார் (உப தலைவர் – BWIO இலங்கை கிளை), கலாநிதி எமரிடா விஜேநாயக்க (கருத்திட்ட தலைவர் – உலக அழகு விருதுகள் மற்றும் சர்வதேச பெண் சாதனையாளர் விருதுகள் – BWIO அமெரிக்கா) ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர். விருது விழாவை சன்ன – உப்புலி நாட்டியக் குழு, ஜனநாத் வரக்காகொட மற்றும் அன்டனி சுரேந்திர ஆகியோர் இசையாலும் நடனத்தாலும் அலங்கரித்திருந்தனர். BWIO விருது விழாவுக்கான பிரதான அனுசரணையை மல்டி நெசனல் குழுமத்தின் தலைவர் திரு ரீ.தர்சனன் வழங்கியிருந்தார்.


Share with your friend