இலங்கையின் முன்னணி மருத்துவ அழகியல் கலை மற்றும் ஆரோக்கிய வழங்குநராக திகழும் Christell Luxury Wellness நிறுவனமானது நாட்டில் தலைமுடி உதிர்தல் முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்புபிரிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் Christell உயர் விசேட தலைமுடி மறுசீரமைப்பு ஆய்வு நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய வசதிக்கான நிலையமானது Christellலின் உள்ளக மருத்துவக் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான, அறிவியல் அடிப்படையிலான தளமாக முடி மெலிதல், நுண்ணறை சிதைவு மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மீளுருவாக்க மருத்துவம், மூலக்கூறு உயிரியல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளை ஒருங்கிணைக்கும் தனியுரிம Christell மேம்படுத்தப்பட்ட மீளுருவாக்க சிகிச்சை (CART) முறைமையை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
“இலங்கையர்களிடையே முடி உதிர்தல் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. இந்நிலையில் இதற்கான பயனுள்ள, மருத்துவ ரீதியான தீர்வுகளில் நாம் கவனம் செலுத்துவது அவசியம் ” என்று Christell Luxury Wellnessன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மற்றும் மருத்துவ பணிப்பாளருமான டாக்டர் ஷானிகா அர்செகுலரத்ன தெரிவித்தார். “CART மூலம், மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தலைமுடி மறுசீரமைப்புக்கான கட்டமைக்கப்பட்ட, சான்றுகள் சார்ந்த அணுகுமுறையை நாம் அறிமுகப்படுத்துகிறோம்.”
Christell தலைமுடி மறுசீரமைப்பு ஆய்வு நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நோயாளியும் முதலில் ஒரு விரிவான உச்சந்தலை மற்றும் முடி பகுப்பாய்விற்கு உட்படுகிறார்கள், சிகிச்சைத் திட்டங்கள் தனிப்பயனாக்கப்பட்டு தனிப்பட்ட மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். அனைத்து நடைமுறைகளும் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன, சர்வதேச பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரநிலைகளுக்கு ஏற்பநெறிமுறைகள் சீரமைக்கப்படுகின்றன.



Christell உயர் விசேட தலைமுடி மறுசீரமைப்பு ஆய்வுநிலையம் வழங்கும் பரந்த அளவிலான மீளுருவாக்கம் மற்றும் சிகிச்சை தீர்வுகளில் பின்வருவன அடங்கும்: முடி நுண்ணறை மீளுருவாக்கத்திற்கான மூல உயிரணுக்கள் [Stem Cell] சிகிச்சை, இயற்கையாகவே முடி வளர்ச்சியைத் தூண்டும் பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சை, செல்லுலார் சிக்னலிங் மற்றும் உச்சந்தலைக்கான எக்ஸோசோம் சிகிச்சை, இலக்கு வைக்கப்பட்ட உச்சந்தலை ஊட்டச்சத்து உட்செலுத்தலுக்கான மேம்படுத்தப்பட்ட தலைமுடிக்கான அறுவை சிகிச்சை அல்லாத அழகியல் சிகிச்சை [Mesotherapy ,முடி உதிர்தலுக்கான உள் காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான ஊட்டச்சத்து IV சிகிச்சை, சுழற்சி மற்றும் மயிர்க்கால் செயல்பாட்டை ஊக்குவிக்க லேசர் மற்றும் ஒளி சிகிச்சைகள், வளர்ச்சி காரணி செறிவு சிகிச்சை, மற்றும் பிளேட்லெட்-ரிச் ஃபைப்ரின் (PRF) சிகிச்சை மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை.
ஆலோசனை மற்றும் சிகிச்சை கால அளவானது பொதுவாக 60 முதல் 90 நிமிடங்கள் வரை இருக்கும், மேலும் தனிப்பட்ட நோயறிதல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நெறிமுறையைப் பொறுத்து, நோயாளிகள் 8 முதல் 12 வாரங்களுக்குள் புலப்படும் முடிவுகளை அவதானிக்கலாம்.
Christell Luxury Wellness நிறுவனமானது பேராசிரியர் ரமணி அர்செகுலரத்ன மற்றும் டாக்டர் ஷானிகா அர்செகுலரத்ன ஆகியோரால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, இலங்கை சந்தையில் மருத்துவ அழகியல் புத்தாக்கங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த மருத்துவநிலையமானது மருத்துவ தரநிலைகள், நோயாளர் பாதுகாப்பு மற்றும் முடிவுகளை மையமாகக் கொண்ட பராமரிப்புக்கான அதன் அர்ப்பணிப்புக்கு சிறந்து விளங்கும் நிலையில் அழகியல் துறையில் நாட்டின் முதல் ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக திகழ்கிறது.
இந்த அண்மைய சேர்க்கையானது இலங்கையின் முதல் முகப்பருவுக்கான உயர் விசேட மருத்துவ சிகிச்சை நிலையமான Christell முகப்பருவிற்கான ஆய்வு நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த உள் மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை சிகிச்சையை வழங்கும் விரிவான ஆரோக்கிய சரணாலயமான Christell லைஃப் ஆகியவற்றை உள்ளடக்கிய Christellலின் வளர்ந்து வரும் சிறப்பு சேவைகளின் தொகுதியை கொண்டுள்ளது.Christell உயர் விசேட தலைமுடி மறுசீரமைப்பு ஆய்வு நிலையமானது தொடங்கப்பட்டதன் மூலம், Christell, அறிவியல் ஒருமைப்பாடு, மருத்துவ நிபுணத்துவம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைகளுடன், இலங்கையில் அழகியல் மருத்துவத்தின் மாற்றத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது.