இலங்கையின் சரக்கு போக்குவரத்து மற்றும் போக்குவரத்திற்கான பட்டய நிறுவனம் (CILT SL) செப்டம்பர் 15 – 16 திகதிகளில் கொழும்பு Cinnamon Life – City of Dreams CILT சர்வதேச மாநாடு 2025 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது. இம்மாநாடு உலகளாவிய சரக்கு போக்குவரத்து சமூகத்திற்கு மத்தியில் தெற்காசியாவின் முதன்மையான சரக்கு போக்குவரத்து மையமாக இலங்கையை முன்நிறுத்தும் மைல்கல்லாக இந்நிகழ்வு குறிப்பிடப்படுகின்றது.

“எதிர்காலத்திற்கு தயாரான சரக்கு போக்குவரத்து: மாற்றத்தை தழுவி நிலைத்தன்மையை நடைமுறைப்படுத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இம் மாநாட்டில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும், 300 இற்கும் மேற்பட்ட இலங்கையின் விநியோகச் சங்கிலி மற்றும் சரக்கு போக்குவரத்து சம்பந்தப்பட்ட நிபுணர்களும் ஒன்று கூடினர். இந் நிகழ்வு அரசாங்கங்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மத்தியில் மூலோபாய உரையாடல், சபையுடன் ஒன்றிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு என்பனவற்றுக்கான துடிப்பானதோர் தளத்தை உருவாக்கியது.
இரண்டு நாள் நிகழ்ச்சியில் உலகளாவிய நிபுணர்களின் முக்கிய உரைகள், செயல்முறை ரீதியான பயிற்சி பட்டறை மற்றும் டிஜிட்டல்மயமாக்கல், நிலைத்தன்மை, விநியோகச் சங்கிலி மீள்தன்மை, தேர்வுமுறை மற்றும் வட்டப் பொருளாதார கொள்கைகள் உள்ளிட்ட முக்கியமான தலைப்புக்களில் சிந்தனையை தூண்டும் குழு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. வேகமாக வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் குறித்த பெறுமதியான நுண்ணறிவுகளை வழங்கியதற்காக இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மாநாட்டை பாராட்டினர்.
இம் மாநாட்டை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பிரதி அமைச்சர் கௌரவ ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ. கே. பெரேரா ஆகியோரும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.
இலங்கையின் தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் சரக்கு போக்குவரத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அமைச்சர் ரத்னாயக்க தனது உரையில் வலியுறுத்தினார்:
“உலகளாவிய வர்த்தக வழிகளின் சந்திஸ்தானத்தில் அமைந்துள்ள ஓர் நாடு என்ற வகையில், நாங்கள் சரக்கு போக்குவரத்தின் பிராந்திய தளமாக கருத்தில் கொள்ளப்படுவதை விரும்புகிறோம். கிழக்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புக்களுடன் உலகளாவிய வர்த்தகத்திற்கு சேவை செய்யக் கூடிய ஓர் தனித்துவமான நாடாக இலங்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்பார்ப்பு மட்டும் போதாது – அதற்கு நிலையான முயற்சி, முதலீடு, புத்தாக்கம் மற்றும் தரப்புக்களுக்கு மத்தியிலான ஒத்துழைப்பு என்பனவும் அவசியமாகும்.”
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை நவீனமயமாக்குதல், பாதைகள் மற்றும் ரயில் போக்குவரத்தின் இணைப்பை மேம்படுத்துதல், கிடங்குகள் (warehouse) மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) டிஜிட்டல் மயமாக்கலின் உதவியுடன் மேம்படுத்தல் ஆகிய முயற்சிகளின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். வர்த்தக முறைமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மைக்கு திறமையான சரக்கு போக்குவரத்தே முதுகெலும்பாக செயற்படுகின்றதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ளவும், சரக்கு போக்குவரத்து மையமாக மாறுவதற்கான அதன் பயணத்தை விரைவுபடுத்தவும் இவ்வகையான மாநாடுகள் மிக அவசியமானமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
CILT SL தலைவர் சந்திம ஹுலங்கமுவ கருத்து தெரிவிக்கையில் இம் மாநாடு எதிர்பார்ப்புக்களை மீறியதாக குறிப்பிட்டார்: “இந் நிகழ்வு இலங்கையை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட சரக்கு போக்குவரத்து மையமாக நிலைநிறுத்தியுள்ளது. இரு பன்முகத்தன்மை, கூட்டாண்மையும்
நாட்களில் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்தாடல்களின்
மாற்றத்தையும், நீடித்த கூட்டுப்பங்காண்மைகளையும் உருவாக்கும்.”
இந்த முதன்மையான உலகளாவிய நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து திட்டங்களை வடிவமைத்து செயற்படுத்துவதில் CILT இலங்கையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. அதே நேரத்தில் உலகளாவிய விநியோக சங்கிலி வலையமைப்புக்களில் இலங்கையின் பங்கையும் வலுப்படுத்துகிறது.