CVPR இல் 11 விருதுகளை வென்ற OPPO

Share with your friend

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றான OPPO, 2021 Computer Vision and Pattern Recognition Conference (CVPR) விருதுகளில் ஆறு முக்கிய பிரிவுகளில் 11 விருதுகளை வென்றுள்ளது. இதில் ஒரு முதலிடம், 6 இரண்டாவது இடங்கள் மற்றும் 4 மூன்றாம் இடங்கள் உள்ளடங்குகின்றன. இவ்விருதுகள் OPPO இன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் அது கொண்டுள்ள திறன்களுக்கு ஒரு சான்றாகும்.

OPPO சார்பில் CVPR 2021 போட்டியில், OPPO ஆராய்ச்சி நிறுவனத்தின் Intelligent Perception and Interaction பிரிவின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இக்குழுவினர், Multi-Agent Behavior, SoccerNet, LOVEU, AVA-Kinetics, MMact, People in Context  ஆகிய ஆறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.

OPPO நிறுவனத்தின் பிரதான விஞ்ஞானி (Intelligent Perception) Eric Guo, இது தொடர்பில் கருத்து  வெளியிடுகையில் “நாம் முதன்முதலில் CVPR திட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் பங்கேற்றோம். அங்கு Perceptual Extreme Super-Resolution Challenge சவாலில் முதலிடத்தை வென்றோம். இந்த ஆண்டு நாம் 11 விருதுகளை வென்றுள்ளோம்” என்றார்.

இந்த 11 விருதுகளில் 3 Multi-Agent Behavior Challenge பிரிவில் கிடைத்துள்ளன. விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலித்தனமான உயிரினங்களுக்கிடையேயான சிக்கலான தொடர்புகளைப் புரிந்துகொள்வதற்கும், விளக்குவதற்கும், கணிப்பதற்கும் AI மாதிரியின் திறனை இதன் மூலம் சோதிக்க முடியும். Learning New Behavior முதல் இடத்தையும், Classical Classification பிரிவில் இரண்டாம் இடத்தையும், Annotation Style Transfer பிரிவில் மூன்றாம் இடத்தையும் OPPO வெற்றி கொண்டது.

‘3D Face Reconstruction from Multiple 2D Images Challenge’ இல் ​​OPPO வின் சொந்த  நிர்மாணமான AI algorithm மூலம் துல்லியமான 3D முக வடிவங்களை சுமார் ஒரு மில்லிமீற்றர் வரை மீண்டும் உருவாக்க முடிந்துள்ளதுடன், அது தொடர்பில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை OPPO குழுவினால் பெற முடிந்தது.

SoccerNet Challenge சவாலின் போது, Action Spotting மற்றும் Replay Grounding​​ ஆகிய இரண்டு பிரிவிலும் இரண்டாவது இடத்தை OPPO பிடித்தது. இந்த சவாலின் நோக்கம் ஒரு கால்பந்து வீடியோவில் 12 இற்கும் மேற்பட்ட முக்கிய செயல்பாடுகளை அடையாளம் காணும் வழிமுறையின் algorithm இனை மதிப்பீடு செய்வதாகும். போட்டி விதிகளின் சிக்கல்கள் மற்றும் அவை விளக்கப்படும் விதம் காரணமாக பொதுவாக மக்கள் அடையாளம் காண்பது கடினமாக காணப்படும் Offside மற்றும்  Red card விதி மீறல்கள் இதில் அடங்கும்.

MMact Challenge சவாலின் போது, ​​Cross-Modal Action Recognition மற்றும் Cross-Model Action Temporal Localization ஆகிய இரண்டு பிரிவிலும் இரண்டாவது இடத்தை OPPO பெற்றது. OPPO வின் சக்திவாய்ந்த AI algorithm காட்சி தரவை மட்டுமே பயன்படுத்தி வீடியோவின் மூலம், பேசுவது, உட்கார்வது, நடத்தல் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட முக்கிய செயல்பாடுகளை அது அடையாளம் காண்கிறது. இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பங்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குழந்தைகள் மற்றும் முதியவர்கள், வீட்டிலுள்ள செல்லப்பிராணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும்.

மேலும், AVA-Kinetics Challenge இல் OPPO மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இது இத்துறையில், நேரம் மற்றும் இடைவெளி ஆகிய பரிமாணங்கள் இரண்டும் தொடர்பிலும் அடையாளம் காணக்கூடிய தரவுகளின் தொகுப்பு முதல் தடவையாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாகும்.

இது தவிர, OPPO LOVEU (Long-form Video Understanding) challenge சவாலில் மூன்றாவது இடங்கள் இரண்டை வென்றது.

இந்த சவால்களிலிருந்து வெளிப்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பயனளிக்கும் பொதுவான தொழில்நுட்ப தீர்வுகளுக்கு பயன்படுத்தப்படும். ‘மனிதர்களுக்கு தொழில்நுட்பம், உலகத்திற்கு கருணை’ எனும் செயலாற்றலின் கீழ், OPPO இத்தீர்வுகள் அனைத்தையம் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற உறுதி பூண்டுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply