தொழில்முயற்சி மற்றும் கமத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் Dearo Investment நிறுவனக் குழுமத்திற்குச் சொந்தமான Dearo Agri நிறுவனம் நாட்டை அரிசியால் தன்னிறைவடையச் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பித்துள்ள கைவிடப்பட்டுள்ள வயற் காணிகளில் பயிரிடும் “ஒரே நோக்கத்துடன் வயல் நிலத்துக்கு” எனும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அனுசரணை வழங்குகிறது. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு அசோக்க ரண்வல அவர்களின் பங்கேற்புடன் புதிய அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கமைய இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் சேர்ந்து இத் திட்டத்தை நாடு பூராவும் செயற்படுத்துவதற்கு Dearo Agri நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. “தன்னிறைவடைந்த நாடு மற்றும் செல்வம் செழிக்கும் எதிர்காலம் எனும் கருப்பொருளுக்கமைய தேசத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் இதயத்துடிப்பு” என்பதை தமது நோக்காக கொண்டுள்ள Dearo Agri நிறுவனம் கம்பஹா, கடுவளை மற்றும் பியகம ஆகிய பகுதிகளிலுள்ள பயிரிடப்படாத சுமார் 50 ஹெக்டேயர்களுக்கு மேற்பட்ட வயற் காணிகளில் பயிரிடுவதற்கு நிதி அனுசரணை வழங்குகிறது.

Dearo Agri நிறுவனம் விவசாயிகளுக்கு தேவையான நிதி வசதிகளை வட்டியின்றி வழங்குகிறது. அறுவடை பெற்ற பின்னர் கடனை மிளச் செலுத்த மு்டியும். இதன் மூலம் விவசாயிகளுக்கு மிகக் கூடுதலான வட்டி விகிதத்தில் கடன் பெறாமலேயே தமது விவாசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். நிலத்தை பதப்படுத்துவதிலிருந்து அறுவடை பெறும் வரைக்குமான சகல சந்தர்ப்பங்களிலும் நிறுவனத்துக்குச் சொந்தமான ட்ராக்டர் மற்றும் விவசாயப் பொறித்தொகுதிகளை விவசாயச் சங்கங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாக தேவையான அறிவு மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு குறைந்த செலவிலும் குறைந்த உழைப்பிலும் கூடுதல் அறுவடையை பெற முடிகிறது. விவசாயிகளுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டித் தரவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. Dearo Investment நிறுவனக் குழுமத்திற்குச் சொந்தமான இதர நிறுவனங்களும் இப் பணிக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளன. “தற்போழுது பலரும் விவசாயத்தை கைவிடும் சூழல் காணப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலைமையில் இவ்வாறானதொரு தேசிய திட்டத்தின் பங்குதாரரக முடிந்தமையிட்டு நாம் பெருமை அடைகின்றோம்” என Dearo Investment குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயத்தை பயன்படுத்தி பரந்துபட்ட நிதிச் சேவைகளை வழங்கும் Dearo Investment குழுமம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ளது. தனியார் மற்றும் தொழில்முயற்சி கடன் திட்டங்கள், ஸ்மார்ட் முதலீட்டுத் திட்டங்கள் அவற்றில் பிரதானமானவை ஆகும். நுண், சிறிய, மத்தியளவிலான மற்றும் கூட்டு தொழில்முயற்சிகளின் மூலதனத்தை உயர்த்துவதற்கு தேவையான பல்வேறு கடன் திட்டங்களையும் இந் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Dearo Investment குழுமம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளது.