HNB – Daraz இணைந்து SME களுக்கு e-commerceதளத்திற்கான வசதிகளை வழங்குகிறது

Share with your friend

இலங்கை வத்தகத்தில் டிஜிட்டல் பிரவேசத்தை வலுப்படுத்தும் வகையில், தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் முன்னணி e-commerce தளமான Daraz உடன் இணைந்து வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களின்  (SME) பரந்த வலையமைப்பில் இணைந்துள்ளது.

இந்த ஒத்துழைப்பின் காரணமாக HNB SME வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான சேவைகள் மற்றும் ஒன்லைன் பிரவேசத்தை மேற்கொள்வதற்கான வசதிகளைப் பெற உதவுகிறது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நடைபெற்ற விசேட நிகழ்வில் HNB பிரதிப் பொது முகாமையாளர் – வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் சஞ்ஜேய் விஜேமான்ன மற்றும் Kaymu Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரகில் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

“தற்போதைய பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில், கடைகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன, ஆனால் தொழில்நுட்பத்தின் காரணமாக, வர்த்தக நடவடிக்கைகள் இப்போது ஒன்லைனில் சூடு பிடித்துள்ளன. மிகப் பெரிய SME போர்ட்ஃபோலியோவைக் கொண்ட வங்கியாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதும் அவர்களின் வளர்ச்சிப் பாதையை அமைப்பதும் எங்கள் கடமை என்று நாங்கள் நம்புகிறோம். Daraz உடன் நாங்கள் கைக்கோர்த்துக் கொண்டதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிராந்திய ரீதியாக புதிய வழிகளையும் சந்தை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும், மேலும் பலர் தங்கள் ஒன்லைன் இருப்பை வலுப்படுத்த இந்த தனித்துவமான வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என HNB சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் (SME) பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் கைலைவாசன் இந்திரவாசன் தெரிவித்தார்.

புதிய வணிகங்களை நிறுவிய வாடிக்கையாளர்களுக்கு Daraz University வழங்கும் கல்விப் பொருட்களுக்கான வரையறையற்ற அணுகலை வழங்குகிறது. மேலும், HNB வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கான தரகுப் பணம் தள்ளுபடி செய்யப்படும்.

“HNB உடன் இணைந்து கொண்டனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது வங்கியின் பரந்த அளவிலான SME வாடிக்கையாளர் தளத்திற்கு அவர்களின் e-commerce திறன்களை வலுப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. e-commerce அனைத்து வகையான மற்றும் வணிகங்களின் அளவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறனைக் கொண்டுள்ளது. புதிய சந்தைகளை ஆராய்வதற்கு இது SME களுக்கு செலவு குறைந்த உட்பிரவேசிக்கும் வசதிகளையும் வழங்குகிறது. பரவலான அணுகல், பெரிய செயற்பாட்டிலுள்ள வாங்குவோர் தளம் மற்றும் Daraz இன் சக்திவாய்ந்த இயங்குதள தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த கூட்டாண்மையானது, சந்தைப்படுத்தல் மற்றும் Logistics களுக்கான எங்களின் தொழில்நுட்ப ஆதரவைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை சிறு வணிகங்களைச் சென்றடையச் செய்யும்.” என Daraz நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Rakhil Fernance தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டாண்மையின் கீழ் Daraz தளத்திற்குச் செல்லும் SMEகள், Photo-Shoots, Warehouse shelf Space, அத்துடன் Pick-Up மற்றும் Drop-Off சேவைகளுடன், அவர்களின் முதல் Order களுக்காக Packaging இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக, அனைத்து பரிவர்த்தனைகளுக்கான நிதியும் 14 நாட்களுக்குள் விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு சிறந்த பண நிர்வகிப்பு சுழற்சிகளை செயல்படுத்தும்.


Share with your friend