HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி நிதி கல்வியறிவு பட்டறை”இன் இரண்டாம் கட்டம் குருநாகல் மற்றும் கேகாலையில்

Share with your friend

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, இந்த வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சித் திட்டங்களை குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களை மையமாகக் கொண்டு அண்மையில் நடத்தியது. இதனூடாக நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிதியறிவை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். HNB Finance இன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் நிதி அறிவை மேம்படுத்த முடிந்துள்ளது.

HNB Financeஇன் திறன் அபிவிருத்தித் துறைத் தலைவர் திரு. அனுர உடவத்த, இந்தத் தொடர் நிதியறிவு நிகழ்ச்சிகளை நடத்தினார், இதில் நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் வணிகக் கணக்கு பராமரிப்பு, கடன் நிர்வகிப்பு, இலாபத்தின் ஒரு பகுதியை மீள் முதலீடு செய்தல், வணிக செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டனர். சமீபத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொழில்முனைவோர்களில் மிகவும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை முன்வைத்த தொழில்முனைவோருக்கு பரிசுகளை வழங்கவும் HNB Finance நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர, இந்நிறுவனம் உருவாக்கிய “வளர்ச்சிக்கான நிதி அறிவு” கையேடு இங்கு வந்த அனைத்து தொழில்முனைவோருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“HNB Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் கூறுகையில், “நிதியறிவு என்பது எந்தவொரு வணிகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். நிதி அறிவு இல்லாமல் வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. இந்நிலையைப் புரிந்துகொண்டு, நுண் மற்றும் சிறு வணிக சமூகத்தின் நிதி அறிவை அதிகரிக்க கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் நிறைய பங்களித்துள்ளோம், மேலும் இந்த திட்டத்தின் முதல் கட்டத்திலிருந்து தொழில்முனைவோருக்கு மிகவும் முறையாக நிதி கல்வியறிவை வழங்க முடிந்தது. சிறிய அளவிலானன நிறுவனங்களைத் தொடங்குவதற்கு மூலதனத்தை வழங்குவதில் இருந்து ஒவ்வொரு ஆதரவையும் வழங்குவதற்கும், அந்த வணிகங்களை சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு அல்லது அதற்கு அப்பால் தொடர்ந்து கொண்டு செல்வதற்கும் ஒரு நிறுவனமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என தெரிவித்தார்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply