HNB FINANCE மொரட்டுவை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் திட்டம்

Share with your friend

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 13ஆம் திதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மொரட்டுவை ராவத்தாவத்த ஸ்ரீ வாச்சிஸ்சர தியான நிலையத்தில் நடைபெற்றது.

HNB FINANCE மொரட்டுவை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உன்னத நிகழ்வு கிளை முகாமையாளர் கிரிஷான் பெர்னாண்டோ மற்றும் அவரது குழுவினர் மற்றும் HNB FINANCE இன் சக ஊழியர்களின் தலைமையில் நடைபெற்றது.

“தற்போதைய காலநிலையில், மருந்துப் பற்றாக்குறை, சுகாதார வசதிகளை அணுகுவதில் சிரமம் மற்றும் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் ஏற்றுவதற்கு இரத்தம் இல்லாததால் சுகாதாரத் துறை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தத் திட்டம் உட்பட நாங்கள் ஏற்பாடு செய்யும் பிற சமூக சேவைகள் மூலம் உள்ளூர் சுகாதாரத் துறைக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக இந்த நேரத்தில் இரத்த தானம் செய்ய உதவுவது, மோசமான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதோடு, மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என HNB FINANCE PLC இன் உதவி பொது முகாமையாளர் பெத்தும் சம்பத் குரே தெரிவித்தார்.

இரத்ததானம் செய்ய முன்வந்த 90 பேரின் பங்கேற்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பொரலஸ்கமுவ வெரஹெரவில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பீட வைத்தியசாலை (KDU) மற்றும் நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்று சேவை (NBTS)க்கு இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பீட வைத்தியசாலையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, இரத்த தானம் செய்தவர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதுடன், பசுமையான நாளைய தினத்திற்கான நிறுவனத்தின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், இந்த நன்கொடையாளர்களுக்கு அவர்களின் தோட்டத்தில் நடுவதற்கு காய்கறி செடிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCE அதன் தொடக்கத்தில் இருந்து சமூக பங்களிப்பு மற்றும் சமூகப் பொறுப்புக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது தவிர, தடையற்ற மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகளை வழங்குவதற்கு நிறுவனம் முன்முயற்சி எடுக்கிறது, அதே நேரத்தில் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் சமூக சேவைத் திட்டங்களைத் தொடங்குவதிலும் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share with your friend