Informatics Institute of Technology இன் 28 வது பட்டமளிப்பு விழா BMICH இல் இடம்பெற்றது

Share with your friend

கொழும்பில் உள்ள அதிநவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக வளாகங்கள் மூலம், இலங்கையில் பிரித்தானிய உயர்கல்வியை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), தனது 28 வது பட்டமளிப்பு விழாவை அண்மையில் கொழும்பிலுள்ள BMICH இல் பிரமாண்டமான முறையில் நடத்தியது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து, Informatics Institute of Technology இன் கீழ் இந்த விழா நடைபெற்றதுடன், இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், முதல்வருமான கலாநிதி பீட்டர் பொன்ஃபீல்ட் அவர்கள் இதில் கலந்து சிறப்பித்தார்.

Informatics Institute of Technology இன் 28 வது பட்டமளிப்பு விழாவில், Bachelor of Engineering (Honours) in Software Engineering, Bachelor of Science (Honours) in Computer Science, Bachelor of Science (Honours) in Business Information Systems, Bachelor of Arts (Honours) in Business Management, Master of Arts in Fashion Business Management, Master of Science in Advanced Software Engineering மற்றும் Master of Science in Cyber Security and Forensics உட்பட பல பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பட்டம் பெறும் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினர்களும், கல்வியாளர்களும் மற்றும் IIT இன் சிரேஷ்ட நிர்வாக முகாமைத்துவத்தினர்களும் கலந்து கொண்டனர். சிறந்த சாதனைகளுக்கான தங்கப் பதக்கங்களும், சிறந்த அனைத்துச் செயற்பாடுகளுக்கான வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக விருதுகளும் மற்றும் சிறந்த இறுதியாண்டு செயற்திட்டங்களுக்கான விருதுகளும் பணிப்பாளர் சபைத் தலைவரான கலாநிதி காமினி விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Informatics Institute of Technology அதன் தொடக்கத்திலிருந்தே, இலங்கையிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து பட்டதாரிகளும் கூடுதல் வேலை வாய்ப்புத் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வழிவகுத்துள்ளது. நிறுவனத்தின் பழைய மாணவர்கள் பலர் தற்போது இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னணி பதவிகளை வகிக்கின்றனர். மேலும் பலர் முன்னணி தொழில்முயற்சியாளர்களாக மாறியுள்ளனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வலுவூட்டப்பட்டுள்ளனர்.

Informatics Institute of Technology தொடர்பான விபரங்கள்:

IIT ஆனது 1990 இல் நிறுவப்பட்டது. இது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறையில் புகழ்பெற்ற பிரித்தானியப் பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதல் தனியார் உயர்கல்வி நிறுவனமாகும். IIT ஆனது ஐக்கிய இராச்சியத்தின், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உள்வாரி முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்களை வழங்கும் விருது பெற்ற வளாகமாகும். உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் பல ஆண்டுகளாக இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளை வலுப்படுத்துவதில் IIT முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, 5,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன், அவர்கள் இப்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் சிறப்பாக உள்ளனர். இந்தப் பட்டதாரிகள், வெற்றிகரமான தொழில்முனைவோராகவும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவன மற்றும் அரசு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம்/வணிக தொழில் நிபுணர்களாகவும் மாறியுள்ளனர். முறையே தமது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றி, முக்கிய மூலோபாய பதவிகளை வகித்து, 250 க்கும் மேற்பட்ட பல்தேசிய மற்றும் உள்ளூர் பிரபல நிறுவனங்களுக்கு வலுவூட்டுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.


Share with your friend