INSEE சீமெந்து நிறுவனம் காலி தொழிற்சாலையில் போர்ட்லண்ட் கலப்பு சீமெந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளது

Share with your friend

2021 ஆம் ஆண்டில் உள்ளூர் சந்தையில் அதன் வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலைபேறான கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது

INSEE சீமெந்து நிறுவனம் தனது போர்ட்லண்ட் கலப்பு சீமெந்து உற்பத்தியை அதன் ருகுண சீமெந்து தொழிற்சாலைக்கும் விரிவுபடுத்தியுள்ளதுடன், உள்ளூர் சந்தையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய புதிய SLS 1697  தயாரிப்பின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. போர்ட்லண்ட் கலப்பு சீமெந்து பல வருட ஆராய்ச்சியின் விளைவாகும். மேலும் சாதாரண போர்ட்லண்ட் சீமெந்துகளின் மூலமான அதிக காபன் அடிச்சுவட்டை நிவர்த்தி செய்யவும், அதே சமயம் அமுக்க வலிமையில் இது வரை காலமும் வெளிவந்த அனைத்து வகையான சாதாரண போர்ட்லண்ட் சீமெந்து தயாரிப்புக்களுக்கு ஈடாக அல்லது அதற்கும் மேலானதாக உற்பத்தி செய்யும் அதே வேளையில், புத்தளம் ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகின்ற ஒரு சிறந்த கலப்பு சீமெந்து ஆகும்.  

வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கட்டுமானங்களில் நிலைபேற்றியலுக்கான செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் மதிப்பை உருவாக்குவதல் மற்றும் இலங்கையின் கட்டுமானத் துறையை இலட்சிய வேட்கையுடன், உலகளாவில் தராதரப்படுத்தப்பட்ட நிலைபேற்றியல் இலக்குகளை நோக்கி நகர்த்துதல் என இரு முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக INSEE சீமெந்து நிறுவனம் கடந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் போர்ட்லண்ட் கலப்பு சீமெந்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது,” என்று INSEE சீமெந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் துறையின் தலைமை அதிகாரியான கலாநிதி மௌசா பால்பக்கி அவர்கள் தெரிவித்தார். உலகளவில், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாடு முதல் பிரமாண்டமான உள்கட்டமைப்பு செயற்திட்டங்களுக்கு கலப்பு சீமெந்து வகைகளின் பயன்பாடு நீண்டகால செயல்திறனில் மேம்பாடுகளை நிரூபித்துள்ளதுடன், கட்டுமானத்தில் காபன் அடிச்சுவட்டைக் குறைக்கவும் பங்களித்துள்ளது. போர்ட்லண்ட் கலப்பு சீமெந்துக்கு உள்ளூர் சந்தையில் அதிகரித்து வரும் தேவையால் நாங்கள் உண்மையிலேயே ஊக்குவிக்கப்படுகிறோம். மேலும் காலி தொழிற்சாலைக்கும் எங்கள் உற்பத்தி விரிவாக்கம் நிலைபேறான உற்பத்தி நடைமுறைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.    

INSEE நிறுவனத்தின் தனியுரிம வர்த்தகமுத்திரையிடப்பட்ட SmartActTM தொழில்நுட்பத்துடனான போர்ட்லண்ட் கலப்பு சீமெந்து வகைகள் தனித்தன்மை வாய்ந்த பல தாதுக்களைச் சேர்ப்பதன் மூலம், கட்டுமானத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் அதன் வலிமையை அதிகரிக்கச் செய்கின்ற நீரேற்றம், போஸ்ஸோலானிக் (pozzolanic) மற்றும் நியூக்ளியேஷன் (nucleation) ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று எதிர்வினைக்கு உட்படுகிறது. மும்மடங்கு எதிர்வினையானது உகந்த துணிக்கைப் பரம்பல் மற்றும் கூடுதல் பிடிமான அடர்த்தியை உறுதிசெய்கிறது. இதன் விளைவாக இலங்கை முழுவதும், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள இயற்கை விளைவுகளுக்கு கடுமையான வெளிப்பாடு கொண்ட அனைத்து நிலைமைகளுக்கும் பொருத்தமான கொங்கிரீட்டின் குறைந்த ஊடுருவல் மற்றும் நீடித்த உழைப்பைத் தரும். குறைந்த வெற்றிடங்கள் மற்றும் துளையிடப்பட்ட நுண்குழாய் துவரங்கள் கொண்ட பிறபொருள் ஊடுருவ முடியாத கொங்கிரீட், மழைநீர் ஊடுருவல் மற்றும் கொங்கிரீட் கட்டமைப்புகளில் பிறபொருள் உட்புகுதல் ஆகியவற்றின் முக்கிய சவால்களை திறம்பட நிவர்த்தி செய்கிறது. போர்ட்லண்ட் கலப்பு சீமெந்தின் பயன்பாடு மற்றும் அதற்குக் கிடைக்கப்பெறும் அங்கீகாரத்தை நோக்கி சீராக முன்னேறி வரும் இலங்கையில் உள்ள வீட்டு உரிமையாளர்களின் அக்கறைக்கு இது குறிப்பிடத்தக்க தீர்வாக உள்ளது.

கசடு மற்றும் நிலக்கரிச் சாம்பல் போன்ற பல சிலிகோ-அலுமினேட் கனிமங்களைப் பயன்படுத்துவதன் மூலம், போர்ட்லண்ட் கலப்பு சீமெந்தானது, உற்பத்தி மற்றும் கட்டுமான நடைமுறைகளில் காபன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது சாதாரண போர்ட்லண்ட் சீமெந்தை விட சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பாகவும் மாறியுள்ளது. INSEE நிறுவனம், INSEE Sustainability Ambition 2030 என்ற குழும வாரியான தனது நிலைபேண்தகைமை இலட்சியம் 2030 இன் கீழ் சீமெந்து உற்பத்தியில் காபன் உமிழ்வைக் குறைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற 2 பாகை செல்சியஸ் மட்டத்தினைப் பேணி இச்செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது. சீமெந்து உற்பத்தியில் கிளிங்கர் எனப்படும் உருளைக்கற்களுக்குப் பதிலாக கசடு மற்றும் நிலக்கரிச் சாம்பல் போன்ற உப உற்பத்திகளின் பாவனையை நிறுவனம் அதிகரித்துள்ளது.போர்ட்லண்ட் கலப்பு சீமெந்தின் ஏனைய வரவேற்கத்தக்க அனுகூலங்கள் மத்தியில் வெப்பமான காலநிலையில் பாரிய கொங்கிரீட் இடும் பணிகளுக்கு இத்தயாரிப்பினை சாதகமாக்கும் ஈரப்பதத்தின் மூலமான குறைந்த வெப்பம் மற்றும் அணைகள், பாலங்கள், வீதிகள் மற்றும் ஏனைய கொங்கிரீட் மூலக்கூறுகள் போன்ற நீண்ட கால உள்கட்டமைப்பு நிர்மாணச் செயற்திட்டங்களுக்கு போர்ட்லண்ட் கலப்பு சீமெந்தினை ஏற்றதாக மாற்றும் கூடுதல் இரசாயன எதிர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன.


Share with your friend